

சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் இருந்தால் நாளுக்கு நாள் டல்லாகி கொண்டே இருக்கும். வெயிலில் அதிகம் சுற்றி வருபவர்களுக்கும், வறண்ட சருமத்தினருக்கும் இறந்த செல்கள் அதிகம் இருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைப்பதற்கான அந்தந்த சருமத்தினருக்கான பேஸ் பேக்குகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சாதாரண சருமத்தினான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன், தயிர் - 1 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
சாதாரண சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பவுடர், தயிர் மற்றும் தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து 15-20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவி முகத்தை துடைத்துவிட்டு கண்டிப்பாக மறக்காமல் மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும். இப்பொழுது முகம் பளபளப்பாக இருப்பதை காணலாம்.
வறண்ட சருமத்தினருக்கானஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
அவகேடோ - 1, தேன் - 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
வறண்ட சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த அவகேடோ பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் நன்கு தடவி விட வேண்டும்.15-20 நிமிடம் ஊற வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் மென்மையாக தேய்த்து மெதுவாக கழுவி, முகத்தை துடைத்துவிட வேண்டும்.பின்பு மாய்ஸ்சுரைசரை தடவ இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென இருக்கும்.
எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
பென்டோனைட் க்ளே - 1 டேபிள் ஸ்பூன், ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்,டீ-ட்ரீ ஆயில் - 1 துளி
பயன்படுத்தும் முறை
எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பென்டோனைட் க்ளே மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து கொண்டு, பின் அதில் வேண்டுமானால் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை முகத்தில் மெதுவாக தடவி விட வேண்டும். கண்களைச் சுற்றி தடவக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 10-15 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து கழுவ இறந்த செல்கள் நீங்கி இயற்கையாக முகம் காட்சியளிக்கும்.
காம்பினேஷன் சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 டேபிள் ஸ்பூன், மசித்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்,தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
காம்பினேஷன் சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தயிர், மசித்த பப்பாளி மற்றும் தேன் மூன்றையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். பின் சருமத்தை துடைத்துவிட்டு, லைட்வெயிட் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த முகம் பிரகாசமாக இருப்பதை காணலாம்.
மேற்கூறிய பேஸ் பேக்குகளை அந்தந்த சருமத்தினர் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த நிச்சயமாக இறந்த செல்களை நீங்கி முகம் பொலிவடையும்.