

* ஒரு கப் தேங்காய்பாலில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து அரை மணி நேரம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசிவர முடி உதிர்வது நிற்கும்.
* வெங்காயத்தை தேங்காய்பாலில் முதல் நாள் இரவு ஊற வைத்து காலையில் மை போல் அரைத்து பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தாலும் முடி நன்கு வளரும்.
* தினமும் தலையில் தேங்காய் பால் தடவி வர நாளடைவில் செம்பட்டை சரியாகும்.
* வாரத்திற்கு மூன்று முறை தேங்காயைத் துருவி பால் எடுத்து தலையில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வர தலைப்பொடுகு காணாமல் போகும்.
* ஊறவைத்து அரைத்த வெந்தயத்தை தேங்காய்ப் பால் மற்றும் எலுமிச்சைச் சாறுடன் கலந்து தேய்த்து ஊறவிட்டு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் இருக்கும்.
* இரண்டு தேக்கரண்டி தேங்காயை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவ முகத்திற்கு கவர்ச்சியும், பொலிவும் கிடைக்கும்.
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழிந்து அதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலச கருகரு கூந்தல் வளரும். இந்த எண்ணையை உடம்பில் தேய்த்துக்கொண்டால் சரும வறட்சியைப் போக்கி மென்மையைத்தரும்.
* அழுகிய தேங்காயில் எண்ணெய் பிசின் அதிகமாக இருக்கும். அவற்றை சிறிது சூடு நீருடன் அரைத்து தலையில் தடவி ஊறவைத்து பிறகு நன்றாக மசாஜ் செய்யவும். மயிர்க் கால்கள் வலுப்பெற சரியான வழி இது.
* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப்பொடி, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.