இந்த 10 உணவுகளை சாப்பிட்டால் போதும், நீங்களும் வெள்ளையாக மாறிடலாம்!

Skin Whitening
Skin Whitening
Published on

இயற்கையான முறையில் நம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த (Skin Whitening) தினசரி உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும். பழங்கள், காய்கறிகள், டிரை ஃப்ரூட்ஸ்கள் போன்ற உணவுகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை கரும்புள்ளிகள் நீக்கி பளபளப்புடன், பளிச்சின்றும் வைத்துக்கொள்ள உதவும்.

சருமத்தை பளபளப்பாக்கும் 10 சிறந்த உணவுகள் (Skin Whitening Foods):

1) பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்:

பாதாம், அக்ரூட் போன்ற பல கொட்டைகள் மற்றும் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இந்த பருப்பு வகைகள் நம் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவும். அத்துடன் தோல் அழற்சி மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவும். தினமும் இரவு நான்கு பாதாம் பருப்புகளை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு நன்கு மென்று சாப்பிடலாம்.

2) கேரட்:

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் ஏ ஆக மாறும் ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது முகப்பரு வெடிப்புகளை தடுக்கவும், சுருக்கங்களை குறைக்கவும், வெயிலில் இருந்து பாதுகாக்கவும் உதவும். இதனை சாலட்டாகவோ, ஜூஸ் ஆகவோ (சர்க்கரை எதுவும் சேர்க்காமல்) எடுத்துக் கொள்ளலாம். கேரட்டை நன்கு அலம்பி துருவிக் கொள்ளவும். அத்துடன் தேவையான உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருப்பதுடன் நம் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

3) தக்காளி:

இதில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் லைகோபீன் அதிகம் உள்ளது. தக்காளி சருமத்தின் சுருக்கங்களை போக்கும். முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும். தக்காளியைப் பொடி பொடியாக நறுக்கி சிறிது உப்பு, சிறிது நாட்டு சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். மிக்ஸியில் அடித்து ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். தக்காளி நம் சருமத்தின் நிறத்தை கூட்டும்.

4) வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் உடலுக்கு நீரேற்றம் அளிப்பதுடன், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்கும். முகப்பருக்கள், கரும்புள்ளிகளை குறைக்கும். வெள்ளரிக்காயை துருவி அதிகம் புளிக்காத தயிரில் சேர்த்து சிறிது உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி கலந்து தயிர் பச்சடியாக எடுத்துக் கொள்ளலாம். வட்ட வட்டமான வில்லைகளாக நறுக்கி உப்பு, எலுமிச்சை சாறு சிறிதளவு, பொடித்த மிளகுத்தூள் கலந்து சாலடாகவும் எடுத்துக் கொள்ளலாம். அரை கப் வெள்ளரிக்காயை சிறிது உப்பு, அரை பச்சை மிளகாய், சீரகம் கால் ஸ்பூன் கலந்து மிக்சியில் அரைத்து மோரில் கலந்து பருக்கலாம்.

5) பச்சைத் தேயிலை:

பச்சை தேயிலையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் இரண்டு வேளை கிரீன் டீ பருகலாம். கிரீன் டீ சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும். வயது தொடர்பான தோல் சேதத்தை தடுப்பதில் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

6) பெர்ரி பழங்கள்:

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி போன்ற பெர்ரி பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளதால், இவை சருமத்தை நல்ல நிறத்துடனும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவும்.

7) ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் லுடீன் என்ற மூலக்கூறு நிறைந்துள்ளது. இது நம் சருமத்தை ஆக்சிஜனேற்ற சேதத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது. ப்ரோக்கோயிலிருந்து எடுக்கப்படும் சல்ஃபோராபேன் என்ற சாறு சேதமடைந்த சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கிளியோபாட்ரா முதல் நம் தாத்தா பாட்டி வரை - 4000 வருடப் பழைய ரகசியம்!
Skin Whitening

8) பருப்பு வகைகள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்:

புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பருப்பு வகைகள் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் விட்டமின் சி நிறைந்தவை. இவை சருமத்தை வயதான தோற்றத்திலிருந்து பாதுகாப்பதுடன் பிரகாசமாக்கவும், கருமையை குறைக்கவும், பளபளப்பை கூட்டவும் உதவும்.

9) சால்மன்:

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சரும பளபளப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. சால்மன் மீனில் அஸ்டாக்சாந்தின் நிறைந்துள்ளது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் நீரேற்றத்தை மேம்படுத்த உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இதில் விட்டமின் டி அதிகம் உள்ளது. சால்மன், சார்டைன்கள் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதத்தை தடுக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
அழகை உச்சத்திற்கு உயர்த்த LooksMax: இளைஞர்களின் அழகுக்கான ரகசியங்கள்!
Skin Whitening

10) திராட்சை:

திராட்சையில் ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளைக் கொண்ட மற்றொரு மூலக்கூறான ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது சருமம் வயதாவதை மெதுவாக்கும் மற்றும் சருமத்தில் கரும்புள்ளிகள் உருவாவதை தடுக்க உதவும். சருமத்தை புற ஊதா கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் தோல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com