முகத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை மாயமாக்கும் 5 மேஜிக் சீரம்கள் இதோ!

Serum
Serum
Published on

இன்றைய காலகட்டத்தில், முகம் எப்போதுமே பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை விதவிதமான க்ரீம்களை வாங்கி முகத்தில் அப்பிக்கொள்ளும் பழக்கம் முற்றிலுமாக மலையேறிவிட்டது. அதற்குப் பதிலாகக் கொஞ்ச நாட்களாகவே ஸ்கின் கேர் உலகில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சூப்பரான பொருள் தான் சீரம்

முகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை ஈஸியாக சரிசெய்யும் இந்த சீரம்கள் எப்படி வேலை செய்கின்றன மற்றும் உங்கள் சருமத்திற்கு எந்த சீரம் சரியாக செட் ஆகும் என்பதை இப்போது பார்ப்போம்.

1. வைட்டமின் சி சீரம் (Vitamin C Serum)!

முகம் எப்போதுமே டல்லாக இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு இது ஒரு மாபெரும் வரப்பிரசாதம். இந்த வைட்டமின் சி சீரமை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க இது ஒரு சூப்பரான கேடயமாகச் செயல்படும்.

2. ஹையலூரோனிக் ஆசிட் சீரம் (Hyaluronic Acid Serum)!

பாலைவனம் போல முகம் எப்போதுமே வறண்டு போய் இருப்பவர்களுக்கு இந்த சீரம் தான் பெஸ்ட் சாய்ஸ். இது ஒரு பெரிய ஸ்பாஞ்ச் போலச் செயல்பட்டு, காற்றில் உள்ள ஈரப்பதத்தை அப்படியே உரிஞ்சி உங்களின் சருமத்திற்குள் ரொம்பவே பத்திரமாக லாக் செய்துவிடும். இதனால் முகம் எப்போதுமே சாஃப்ட்டாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

3. நியாசினமைடு சீரம் (Niacinamide Serum)!

முகத்தில் பெரிய பெரிய குழிகள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தால் அதைச் சரிசெய்ய இந்த நியாசினமைடு சீரம் உங்களுக்கு உதவும். சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்தி, முகப்பருக்கள் வராமல் தடுப்பதில் இது ஒரு பெரிய கில்லாடி. அனைத்து வகையான சருமம் உள்ளவர்களும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம்.

4. ரெட்டினால் சீரம் (Retinol Serum)!

வயதாக வயதாக முகத்தில் சுருக்கங்கள் வருவது சாதாரண ஒரு விஷயம்தான். ஆனால் இளம் வயதிலேயே அந்த சுருக்கங்கள் வந்தால் அதைப் போக்க இந்த ரெட்டினால் சீரமை பயன்படுத்தலாம். இது புதிய செல்களை ஸ்பீடாக உருவாக்கி சருமத்தை எப்போதுமே இளமையாக வைத்திருக்கப் பெரிதும் உதவும். இதை இரவு நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினம் – நோ டயட், நோ ஷேம்!
Serum

5. சாலிசிலிக் ஆசிட் சீரம் (Salicylic Acid Serum)!

எப்பப்பாரு முகத்தில் பெரிய பெரிய பருக்களாக வந்து பாடாய் படுத்துகிறதா.. அப்போ நீங்கள் யோசிக்காமல் வாங்க வேண்டிய சீரம் இதுதான். இது சருமத்தின் ஆழம் வரை சென்று, அங்கு அடைத்துக்கொண்டிருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தமாக வெளியேற்றிவிடும். இதனால் முகப்பருக்கள் ஓடுவதோடு மட்டுமல்லாமல், புதிய பருக்கள் உருவாவதும் குறைந்துவிடும்.

மார்க்கெட்டில் விற்கும் எல்லா சீரம்களையும் மொத்தமாக வாங்கி முகத்தில் தடவக் கூடாது. முகத்தை ஒரு மைல்டான ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிய பிறகு, இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் மட்டும் சீரமை எடுத்து முகத்தில் மென்மையாகத் தடவ வேண்டும். உங்கள் முகத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ற சீரமை மட்டும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம். 

இதையும் படியுங்கள்:
அமரர் கல்கிக்கு எந்த கடவுள் பிடிக்கும்?
Serum

எந்த ஒரு புதிய சீரமை வாங்கும்போதும், காதின் பின்புறம் சிறிதளவு தடவி பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். சீரம் தடவிய பிறகு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை மட்டும் எப்போதுமே மறந்துவிடாதீர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com