பிசுபிசுப்பு இல்லாத கூந்தல் மற்றும் ஜொலிக்கும் முகம் - எளிய ரகசியங்கள்!

தலைக்குக் குளித்ததும் தூபமிடுவது ஏன்? முகம் அலம்பும் சரியான முறை என்ன?
பொலிவான சருமம்
பொலிவான சருமம்AI Image
Updated on

முன்பெல்லாம் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கமாக இருந்தது. அவ்வழக்கம் தற்போது குறைந்து மணமிக்க ஷாம்பூ, ஹேர் ஸ்பிரே என பல வழிகளை கடைப் பிடிக்கிறோம். இதனால் பல பக்க விளைவுகள் உண்டாகும். இதை தவிர்க்க வீட்டிலிருந்தே சில பொடிகளை தயாரித்து வைத்துக்கொண்டு தலைக்கு குளித்ததும் தூபமிட நல்ல நறுமணமாய் இருப்பதுடன் தலைபாரம், நீர்க்கட்டு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

தலைமுடிக்கு நறுமணம் சேர்க்கும் பொலிவான சருமம் தரும் தூப முறைகள்

1. வெட்டிவேர், லவங்கப்பத்திரி, அகருகட்டை, திருவட்டப் பச்சை, தலா ஒரு பங்கு, சாம்பிராணி ஐந்து பங்கு, சந்தனத்தூள்-10 பங்கு என்ற விதிதத்தில் எடுத்து பொடி செய்து தலைக்கு தூபமிட்டால் கபாலத்திற்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது.

2. சந்தனத்தூள்-75 கிராம், கிச்சிலிக்கிழங்கு-55 கிராம், வெள்ளை குங்கிலியம்-35 கிராம், சாம்பிராணி -55 கிராம், லவங்கம், ஜாதிக்காய் - மட்டிப்பால்-தலா-15 கிராம், எடுத்து நன்றாக பொடி செய்து தலைக்கு தூபமிடலாம்.

3. சந்தனத்தூள்-12 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்தி தகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை-75 கிராம் தலா, எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு தலைக்கு குளித்ததும் தூபமிட நல்ல மணமாக சுகம் தரும்.

4. சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி -தலா-25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம்தலா-15 கிராம், அகில்கட்டை-25 கிராம் எடுத்து பொடி செய்து பன்னீர் விட்டு பிசைந்து சூரிய ஒளியில் காயவிடவும். பின் அதை நன்றாக பொடித்து தூபமிட குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலைபாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை சரியாகும்.

5. ரோஜாப்பூ - 850 கிராம், கிச்சிலிக் கிழங்கு -இலந்தை பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி, ஜடாமஞ்சி, லவங்கபத்திரி பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தாம் தோல் -தலா-50 கிராம், கஸ்தூரி-6கிராம், ஆகியவற்றை பொடித்து அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இதைக் கொண்டு தூபமிட்டு வந்தால் கூந்தல் வியர்வை வாசம் இன்றி, பிசுபிசுப்பு இல்லாமல் நல்ல நறுமணத்தை தரும். எல்லா வயதினருக்கும் ஏற்றது இந்த பொடிகள்.

பொலிவான சருமம்
பொலிவான சருமம்AI Image

முகம் கழுவும் நுணுக்கங்கள் மூலம் பெறலாம் பொலிவான சருமம்

  • தூசி, வியர்வையோடு இருந்தால் சருமம் பாதிக்கப்பட்டு முகம் பொலிவிழந்து போகும். அலுவலகத்தில், பிரயாணங்களில் இருக்கும்போது வெட் வைப்ஸ் வைத்து முகத்தை துடைத்துக் கொள்ள முகம் ஃப்ரெஷ்ஷாக, சோர்வின்றி இருக்கும்.

  • முகத்தை கழுவும் முன் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள அழுக்குகள், கிருமிகள் முகத்தில் பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

  • அடிக்கடி முகப் பவுடர், கிரீம்களை மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. சோப்,ஃபேஸ் வாஷ் போன்றவற்றை ஒரே பிராண்டாக உபயோகிக்க சரும அலர்ஜி, ஒவ்வாமை ஏற்படாமல் சருமம் மென்மையாக இருக்கும்.

  • முகத்தில் எண்ணெய் பசை, அழுக்குகள் இல்லாமல் இருக்க முகத்தை சரியாக அலம்பிட வேண்டும். சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்த்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவிட முகம் புத்துணர்வோடு, சரும தொய்வின்றி இருக்கும்.

  • சூடான நீரை முகத்திற்கு பயன்படுத்தினால் ரத்த நாளங்கள் மற்றும் நுண் குழாய்களில் இடைவெளி ஏற்படும். சருமத் துளைகள் திறக்கப் பட்டு முகப்பருக்கள், கரும் பள்ளிகள் போன்றவை உருவாகிவிடும்.

  • மேக்கப்பை கலைக்காமல் முகத்தை கழுவினால் அழுக்குகள் சரும துளைகளில் தங்கி பல சரும பிரச்னைகளை உண்டாக்கிவிடும்.

  • முகத்தை ஸ்கரப்பர் கொண்டு அழுந்த தேய்க்கத் கூடாது. இது சருமத்தை பாதிக்கும். ஸ்கரப் செய்யும்போது மென்மையாக செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
40 வயதிலும் 20 வயது எனர்ஜி... த்ரிஷாவின் எவர்யூத் ரகசியம் இதுதானா!
பொலிவான சருமம்
  • தலைக்கு குளித்த பின்னர் பலரும் கடைசியில் முகத்தை தண்ணீரால் கழுவ மாட்டார்கள். இதனால் தலையிலிருந்த அழுக்குகள் மற்றும் பொடுகு முகத்தில் தங்கி முகப்பரு, கருமையை கொடுத்துவிடும். தலைக்கு குளித்து விட்டு முகத்தை அலம்ப வேண்டும்.

  • முகத்தை துண்டால் அழுந்த துடைக்கக் கூடாது. மென்மையாக ஒத்தி துடைக்கவேண்டும்.

  • சோப் போடும்போது கீழிருந்து மேலாக, நெற்றியில் பக்கவாட்டில் வைத்து முகம் கழுவிட சருமம் தொய்வடையாது. முகசுருக்கமின்றி பொலிவாக இருக்கும்.

  • ஃபேஸ் மாஸ்க் போட்டு கழுவும்போது முறையாக தேய்த்து பின் கழுவ பலன் கிடைக்கும்.

  • அரிசி கழுவிய தண்ணீர், மாதுளை தோல் ஊறிய தண்ணீர், மல்லிகை பூ போட்டு வைத்து பின் அதை எடுத்து விட்டு உள்ள நீரால் முகத்தை கழுவ புத்துணர்ச்சியோடு, பொலிவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வேப்பிலை சிகிச்சை: உங்கள் சருமத்தை மாற்றி அமைக்க ஒரு எளிய வழி!
பொலிவான சருமம்

இவ்வாறு முகத்தை சரியான முறையில் அலம்ப சரும பிரச்னைகள் ஏற்படாமல் முகம் பொலிவாக இருக்கும்.

இக்கட்டுரை பரிந்துரைக்கும் நுணுக்கங்களை கடைபிடிப்பதன் மூலம், எந்தவித பக்க விளைவுகளும் இன்றி, உங்களின் அழகை நீங்களே பாதுகாத்துக்கொள்ளும் தன்னம்பிக்கையை பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com