கம்பீரமான தோற்றம்: உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளும் எளிய வழிமுறைகள்!

ஆடைக்கும் மேலாக, உங்கள் குணாதிசயங்களை மேம்படுத்தி மற்றவர்கள் மதிக்கக்கூடிய நபராக மாறுவது எப்படி?
கம்பீரமான தோற்றம்|a groomed man
கம்பீரமான தோற்றம்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ம்பீரமான தோற்றம் என்பது வெறும் உடைகள் மட்டும் சார்ந்தது அல்ல. நம் உடல்மொழி, நம்பிக்கை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றின் கலவையாகும். கம்பீரமான தோற்றம் பெற அதிக பணம் செலவழிக்க வேண்டியது இல்லை. சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது, நேர்த்தியான பழக்கவழக்கங்கள் மற்றும் தன்னம்பிக்கை மூலமாக எளிதாக ஒரு கம்பீரமான தோற்றத்தை நம்மால் அடைய முடியும்.

அன்றாட வாழ்வில் கம்பீரமான தோற்றம் வெளிப்படுத்தும் நுணுக்கங்கள்

1. தோரணை மற்றும் பழக்கவழக்கங்கள்:

நேராக நிமிர்ந்து உட்காருவதும் நடப்பதும் நம் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன் கம்பீரத்தையும் தரும். நிமிர்ந்த தோரணை, நேர்த்தியான புன்னகை மற்றும் பணிவான பேச்சு நிச்சயம் நம் கம்பீரத்தை உயர்த்தும்.

கூன் போடாமல் தோள்களை பின்னோக்கி வைத்து நேராக நிமிர்ந்து நிற்பதும், பேசும்பொழுது எதிரில் இருப்பவர்களின் கண்களைப் பார்த்து பேசுவதும், நடக்கும் பொழுது எந்தவித பதற்றமும் இன்றி நிதானமாக அதே சமயம் உறுதியாக அடியெடுத்து வைப்பதும் சிறந்த உடல் மொழியாகும் (Body Language).

மற்றவர்களிடம் பேசும் பொழுது படபடப்புடனோ அதிக டென்ஷனுடனோ பேசாமல் நிதானமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும். இது நம்மைப் பற்றிய மதிப்பை உயர்த்தும் அத்துடன் பிறர் நம் பேச்சை உன்னிப்பாக கவனிக்கவும் உதவும். அதற்கு முதலில் நாம் நம்மை நாமே முழுமையாக நம்ப வேண்டும். அந்த தன்னம்பிக்கை தானாகவே நம்மை கம்பீரமாகக் காட்டும். புன்னகைப்பது, நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது போன்ற உடல் மொழிகள் கம்பீரத்தின் முக்கியமான அறிகுறிகளாகும்.

2. நேர்த்தி மற்றும் பராமரிப்பு:

அணியும் உடைகள் எப்பொழுதும் சுத்தமாகவும், நன்றாக அயர்ன் செய்யப்பட்டும் இருக்க வேண்டும். அடர் நிறங்கள் மற்றும் கிளாசிக் வண்ணங்கள் எப்போதும் கம்பீரத்தைக் கூட்டும். காலணிகளும் நம்மைப் பற்றிய நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதிகப்படியான வாசனை திரவியங்கள் மற்றும் நகைகள் நம் கம்பீரமான தோற்றத்தை குறைத்துக்காட்டும்.

கம்பீரமான தோற்றம்|a group discussion
கம்பீரமான தோற்றம்AI image

கம்பீரத்தின் அடிப்படை தோற்றம் மட்டுமல்ல ஒழுக்கம் மற்றும் நேர்மறையான அணுகுமுறை போன்றவையும் தான். கம்பீரம் என்பது ஆடை மற்றும் தோற்றத்தைத் தாண்டி, மற்றவர்களிடம் காட்டும் பரிவு, அன்பு, அடக்கம் மற்றும் நற்பண்புகளில் தான் உள்ளது. இது சமூகத்தில் ஒரு தனித்துவமான மரியாதையை பெற்றுத்தரும்.

3. ஆடை மற்றும் வடிவமைப்பு:

ஆடம்பர ஆடைகளை விட உடலுக்குப் பொருத்தமான ஆடைகள் அணிவது கம்பீரத்தைக் கொடுக்கும். மிகவும் இறுக்கமான அல்லது தளர்வான ஆடைகளைத் தவிர்த்து உடலமைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் (Perfect Fit) ஆடைகளை அணியலாம். அடர் நிறங்கள் மற்றும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிவது ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும்.

4. மனப்பான்மை:

நம்மை நாமே மதிக்கும் பொழுது அந்தத் தன்னம்பிக்கை நம் முகத்திலும் தோற்றத்திலும் தானாகவே பிரதிபலிக்கும். நம்மை உயர்வாகக் கருதுவதுடன் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மதித்து நடத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமல் அமைதியாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் குணம் கம்பீரத்தின் அடையாளம். அத்துடன் முக்கியமாக எப்போதும் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இது நம்மை அணுக எளிதானவராகக் காட்டும்.

5. கம்பீரம் மற்றும் ஆளுமைத் திறன்:

கம்பீரமான தோற்றம் மற்றும் சிறப்பான ஆளுமை திறனைப் பெற நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும், எந்த ஒரு விஷயத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்வதும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் தன்னம்பிக்கையை பெருக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பார்லர் ரகசியம் லீக்.. வீட்லயே முடி மற்றும் உடலை பளபளப்பாக மாற்றும் ட்ரிக்!
கம்பீரமான தோற்றம்|a groomed man

நம்மைச் சுற்றி நடப்பவற்றை கவனித்து, நம் திறன்களை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த தொடர்ச்சியான கற்றல் என்பது நம் கம்பீரத்தையும் ஆளுமைத்திறனையும் வளர்க்கும்.

உங்கள் உடல்மொழி மற்றும் மனநிலையில் நீங்கள் ஏற்படுத்தும் இந்த நேர்மறையான மாற்றங்கள், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்களை எளிதாக எதிர்கொள்ளவும், எதிலும் வெற்றி பெறும் மன உறுதியையும் உங்களுக்குத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com