
ஆடைகள் விஷயத்தில் இரண்டு பெண்களைப் பெற்றவர்கள் பாடு திண்டாட்டம்தான் என இணையத்தில் ஒரு கருத்து வைரலானது. காரணம் பெண்கள் அவ்வளவு எளிதில் ஆடைகள் எடுப்பதில் திருப்தி அடைவதில்லை. தாங்கள் விரும்பும் கலர்கள் மற்றும் தங்கள் அழகை எடுத்துக்காட்டும் வகை ஆடைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
தற்போது பெண்களுக்கான ஆடைகள் விதவிதமான வெரைட்டிகளில் கண்களை பறிக்கிறது. பெண்களுக்கான ஃபேஷனில் சமீபத்திய சில டிரெண்ட் உடைகள் இங்கே:
இந்தோ-மேற்கத்திய டிரெண்ட்:
பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளின் கலவை எனப்படும் ஃப்யூஷன் செட்கள் அதாவது பண்டிகை கால உடைகள் திருமணங்களுக்கும் ஏற்றது.
நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலான ஜம்ப்சூட்கள் பாரம்பரிய குர்தாக்கள் மற்றும் லெஹங்காக்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகும்.
வெகு நுணுக்கமான கவரும் வகை எம்பிராய்டரி மற்றும் அலங்காரங்களுடன் தரையில் புரளும் அனார்கலி சூட்கள் முறையான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரபலமாக உள்ளன.
எவர்கிரீன் தேர்வுகள்:
எளிமையான எம்பிராய்டரி மற்றும் சிறு அலங்காரங்களுடன் கூடிய குர்தாக்கள், சுடிகள் பல பெண்களின் அலமாரிகளில் ஒரு முக்கிய அங்கமாகும்.
மணப்பெண் முதல் பண்டிகை உடைகள்வரை விலைக்கு ஏற்றாற்போல் மணி கற்கள் வைத்து செய்யப்பட்ட ஜர்தோசி வேலைப்பாடு மிக்க லெஹங்காக்கள் அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்ற ஒரு பிரபலமான தேர்வாகும்.
அணிய எளிதான மற்றும் ஸ்டைலான, முன்-டிரேப் செய்யப்பட்ட புடவைகள் அன்றாட உடைகள் மற்றும் அலுவலகம் ரீதியான மீட்டிங் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவை.
தற்போதைய ஸ்டைல்கள்:
தற்போது பெண்களால் அதிகம் விரும்பப்படும் குர்தாக்கள், லெஹங்காக்கள் மற்றும் பிற ஆடைகளில் பந்தனி பிரிண்ட்கள் பிரபலமாக உள்ளன, இந்த வகை பாரம்பரிய இந்திய பாணியின் அம்சத்துடன் எளிமையும் அந்தஸ்து சேர்ந்ததாக இருப்பது சிறப்பு.
மற்றவரிடமிருந்து வித்யாசமாக கண்களைக் கவரும் பகட்டான ஆடைகளை உருவாக்க ஃபாயில் பிரிண்ட்கள் பருத்தி முதல் வெல்வெட்வரை பல்வேறு துணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன் ரஃபிள்ஸ், லேயர்கள் மற்றும் டையர்டு டிசைன்கள் போன்றவைகள் பெண்களின் ஆடைகளுக்கு ரசிப்புத்தன்மையையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன.
பிரபலமான நிறங்கள்:
பொதுவாகவே இளம்பெண்கள் பீச், லாவெண்டர் மற்றும் புதினா போன்ற மென்மையான வெளிர் நிறங்களை அவற்றின் மென்மை காரணமாக விரும்புகின்றனர்.
கவரும் இளஞ்சிவப்பு, மரகத பச்சை மற்றும் டர்க்கைஸ் நீலம் ஆகிய அடர்த்தியான நிறங்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக பிரபலமாக உள்ளது. இரண்டும் சாராத பழுப்பு, கிரீம் மற்றும் சாம்பல் போன்ற நடுநிலை நிறங்கள் பல்துறை மற்றும் நேர்த்தியுடன் அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும்.
துணி வகைகள்:
தினசரி அணியும் அன்றாட உடைகளுக்கு பிரபலமான தேர்வாக வசதியானது மற்றும் காற்றோட்டமிக்க பருத்தி ஆடைகளே சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது.
வெல்வெட் மற்றும் கவர்ச்சி மிக்க ஜார்ஜெட், லினன் போன்ற ஆடம்பர துணி வகைகள் சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
சாந்தேரி துணி ரகங்கள் அணிய வசதியான அதன் இலகுரக மற்றும் நேர்த்தியான அமைப்புக்கும் டீசண்டான லுக் தரும் உடைகளுக்கு ஏற்றதாக உள்ளது.
எத்தனை வகைகள் இருந்தாலும் நம் நாட்டு பாரம்பரியமான தாவணி பாவாடை மற்றும் புடவைகள் எத்தருணத்திலும் அணிய இளம்பெண்களுக்கு ஏற்ற ஃபேஷனாக இருப்பதை மறுக்க முடியாது.