

பெண்களின் அழகை சிறப்பாக எடுத்துக்காட்டுவதோடு பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் மூக்குத்திக்கு மிகப்பெரிய இடம் உண்டு. மேக்னடிக் மூக்குத்தி, பிரஸ்-ஆன்- மூக்குத்தி என மூக்கு குத்தாமல் அணியும் வகைகளும், ஸ்டட், மூக்கு வளையம், ஜிமிக்கி மூக்குத்தி, புல்லாக்கு, செயின் மூக்குத்தி, வட இந்திய பெண்கள் அணியும் நாத் என்ற பெரிய வேலைப்பாடு அணிந்த மூக்குத்தி என பல வகைகள் உள்ளன.அந்த வகையில் தற்போது ட்ரெண்டாகி வரும் மூக்குத்தி டிசைன்களை இப்பதிவில் காண்போம்.
நாஸ்ட்ரில் -டு- நாஸ்ட்ரில் பியர்சிங் - Nostril-to-nostril piercing
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நாஸ்ட்ரில் - டு - நாஸ்ட்ரில் பியர்சிங் என்பது மூக்கில் இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நடுவில் மெல்லிய செயின் அணிவதாகும். பார்ட்டிகளுக்கு மிகவும் பொருத்தமான இந்த ஸ்டைல் கம்பீரமான தனித்துவமான தோற்றத்தை முகத்திற்கு வழங்கும்.
சீம்லெஸ் ஹூப்ஸ் - Seamless Hoops
ஸ்டைலாகவும் இருக்கவேண்டும் அதேசமயம் அதிக ஆடம்பரம் இல்லாமலும் இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த சீம்லெஸ் ஹூப்ஸ் மிகச்சிறந்த தேர்வாகும். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மிகவும் கச்சிதமான இந்த மூக்குத்தி மெல்லிய வட்ட வடிவ வளையத்தைக் கொண்ட தோற்றமாகும்.
செப்டம் ரிங்க்ஸ் - Septum Rings
குதிரை லாட வடிவ வடிவம் கொண்ட 'செப்டம் ரிங்க்ஸ்' மூக்குத்தி மூக்கின் நடுவே அணியும் வகையில் இருப்பதால் 90களின் ராக் & ஃபங்க் பேஷனை நினைவூட்டுவதாக இருக்கிறது. அணிபவர்களுக்கு ஒரு சிறந்த 'போல்ட்' லுக்கை கொடுக்கும் இந்த மூக்குத்தி இரண்டு முனைகளிலும் ஒரு சிறு பந்து கொண்ட அமைப்பை பெற்றுள்ளது.
டைனி டைமண்ட் - Tiny Diamond
பெரிய வளையங்கள் இல்லாமல் சிறிதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த சாய்சாக 'டைனி டைமண்ட் 'மூக்குத்தி உள்ளது. சிறிய கிரிஸ்டல் அல்லது வைரம் கொண்ட இந்த மூக்குத்தி ஒளியில் லேசாகப் பிரகாசிப்பதால் முகத்தின் அழகு கூடுதலாகத் தெரிகிறது.
செலாஸ்டியல் மற்றும் காஸ்மிக் - Celestial and Cosmic
நட்சத்திரம், பிறை, விண்கல் வடிவ மூக்குத்திகள் Gen Z இளைஞர்களின் மிக விருப்பமான வடிவங்களாக உள்ளது. இது ஃபேஷனுக்காக மட்டுமல்லாமல் தனித்துவமான ரசனையின் வெளிப்பாடாகவும் உள்ளது.
மேற்கூறிய மூக்குத்தி டிசைன்கள் அனைத்தும் Gen z இளைஞர்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெகுவாக ட்ரெண்டாகி வருகிறது.