பட்டு முதல் காட்டன் வரை... எந்த புடவைக்கு எந்த பிளவுஸ் செட் ஆகும்? 6 டிரெண்டிங் டிசைன்கள்!

உங்கள் உடலமைப்பு மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்ற பிளவுஸ் மாடலைத் தேர்ந்தெடுத்து அசத்த எளிய வழிகாட்டி.
பிளவுஸ் டிசைன்கள்
பிளவுஸ் டிசைன்கள்Gemini image
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

வ்வளவு காஸ்ட்லியாகப் புடவை எடுத்தாலும், அதற்குத் தகுந்தாற்போலப் பிளவுஸை டிசைன் செய்து அணிந்து கொண்டால் தான் அந்தப் புடவைக்குரிய முழுமையான அழகிய தோற்றம் கிடைக்கும். தற்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப நவீன மற்றும் ஸ்டைலான பிளவுஸ் டிசைன்கள் பற்றி இங்கு பார்ப்போம்:

1. போட் நெக் பிளவுஸ் (Boat Neck Blouse)

படகு போன்ற வடிவத்தில் அமைந்த கழுத்து மாடல் இது. அனைத்து வயது பெண்களுக்கும் இது நேர்த்தியான தோற்றத்தைத் தரும். கழுத்துப் பகுதி அதிகமாகத் தெரியாதவாறு கண்ணியமான தோற்றத்தை அளிக்கும். நெக்லஸ் அல்லது கழுத்தை ஒட்டிய ஆரம் போன்ற நகைகள் இதற்கு அணியத் தேவையில்லை; இந்த டிசைனே போதுமானது. அலுவலக நிகழ்வுகள் மற்றும் சாதாரண விழாக்களுக்குக் காட்டன் மற்றும் சிஃப்பான் புடவைகளுடன் அணிய ஏற்றது இந்த டிசைன்.

2. ஹை நெக் மற்றும் காலர் பிளவுஸ் (High Neck & Collar Blouse)

இது கம்பீரமான ஒரு ப்ரோஃபஷனல் தோற்றத்தைத் தரும். லினன், ஹேண்ட்லூம் மற்றும் பிரிண்டட் காட்டன் புடவைகளுடன் மேட்ச் செய்து அணிய ஏற்றது. குளிர்ந்த காலநிலைகளுக்கும், நீண்ட நேரம் வேலை பார்க்கும் சூழலுக்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்.

3. எல்போ லென்த் ஹேண்ட்ஸ் (Elbow Length Sleeves)

முழங்கை வரை நீளும் கைகளைக் கொண்ட பிளவுஸ் டிசைன் இது. தற்போது பட்டுப் புடவைகள் முதல் ஃபேன்சி புடவைகள் வரை அனைத்திற்கும் மேட்ச் செய்ய ஏற்றது. இது கைகளுக்கு நல்ல வடிவத்தையும், மெலிந்த தோற்றத்தையும் தரும். பட்டுப் புடவைகளில் ஆரி வொர்க் அல்லது ஜரிகை பார்டர் வைத்துத் தைப்பதற்கு இந்த வகையான பிளவுஸ் மிகவும் ஏற்றது. கம்பீரமான பாரம்பரிய தோற்றத்தை விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

4. ஸ்லீவ்லெஸ் மற்றும் ஸ்ட்ராப் பிளவுஸ் (Sleeveless & Strap Blouse)

கைகள் இல்லாத அல்லது மெல்லிய ஸ்ட்ராப் கொண்ட நவீன பிளவுஸ் மாடல் இது. கோடைகாலத்திற்கும், மாலையில் நடக்கும் பார்ட்டி அல்லது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்றது. லைட் வெயிட் புடவைகள், ஆர்கன்சா மற்றும் நெட்டட் புடவைகளுடன் அணிந்து கொண்டால் ஸ்டைலான தோற்றத்தைத் தரும். அணிவதற்குக் காற்றோட்டமாகவும் சௌகரியமாகவும் இருக்கும்.

பிளவுஸ் டிசைன்கள்
பிளவுஸ் டிசைன்கள்Gemini image

5. பிரின்சஸ் கட் பிளவுஸ் (Princess Cut Blouse):

முன்பக்கம் தையல்கள் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டு, உடலோடு கச்சிதமாகப் பொருந்தும் வகையிலான தையல் முறை இதில் இருக்கும். உடலை இறுக்காமல் இயல்பான வடிவத்தைத் தந்து சௌகரியமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பட்டு முதல் லினன் வரை: புடவைகள் பாழாகாமல் பல ஆண்டுகள் புதிது போல் இருக்க 8 வழிகள்!
பிளவுஸ் டிசைன்கள்

கொக்கிகள் அல்லது ஜிப், பிளவுஸின் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ வைக்கப்படுவதால், முன்பக்கம் தையல் பிளவுகள் இன்றி அழகாக இருக்கும். அனைத்து வகையான புடவை ரகங்களுக்கும் இந்த பிளவுஸ் கச்சிதமாகப் பொருந்தும்.

6. மக்ஃகம் ஒர்க் பிளவுஸ் (Maggam Work Blouse)

இந்த வகை பிளவுஸின் கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் மயில், கொடி, பூக்கள் மற்றும் மணப்பெண் உருவங்கள் போன்ற அழகிய டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. பிரத்தியேகமாக ஆரி ஊசிகளைக் கொண்டு கையால் தைக்கப்படுவதால், இது கம்பீரமான மற்றும் தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குப் பட்டுப் புடவைகளுடன் அணிய இது மிகவும் ஏற்றது. மேலும், இதில் ஜரி நூல்கள், மணிகள், கற்கள் மற்றும் ஜர்தோசி போன்றவை பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பழைய பட்டுப்புடவையா? தூக்கி எறியாதீங்க... இந்த 8 வழிகளில் ராயலாக மாற்றலாம்!
பிளவுஸ் டிசைன்கள்

பெண்கள் எப்போதும் ஒரே மாதிரியான மாடல் கொண்ட பிளவுஸ்களை அணிவதை விட, தங்கள் உடலமைப்பிற்கும் செல்லும் நிகழ்விற்கும் ஏற்றவாறு பிளவுஸ் டிசைன்களைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டால், அழகான தோற்றத்தையும் தனி மரியாதையையும் பெறலாம்.

எந்தெந்த புடவைக்கு என்ன வகையான பிளவுஸ் மாடல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவைப் பெற்று, சாதாரண புடவையிலும் உங்களை தனித்துவமாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com