பழைய பட்டுப்புடவையா? தூக்கி எறியாதீங்க... இந்த 8 வழிகளில் ராயலாக மாற்றலாம்!

அனார்கலி, லெஹங்கா முதல் ஹோம் டெக்கார் வரை உங்கள் பட்டுச்சேலைக்கு புதிய லுக் கொடுக்கும் எளிய டிப்ஸ்.
பட்டுப்புடவை
பட்டுப்புடவைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

1. அனார்கலி அல்லது குர்தி (Anarkali or Kurti):

பட்டுப்புடவையின் முந்தானை மற்றும் பார்டரைப் பயன்படுத்தி கிராண்ட் லுக் தரும் அனார்கலி சூட் அல்லது நீண்ட குர்தி தைக்கலாம். இதனை விசேஷங்களுக்கு அணிய கச்சிதமாக இருக்கும்.

2. லெஹங்கா சோளி (Lehenga Choli):

பெரிய பார்டர் கொண்ட பட்டுப் புடவைகளை லெஹங்கா (பாவாடை) ஆக மாற்றலாம். முந்தானைப் பகுதியை பிளவுஸ் அல்லது துப்பட்டாவாக மாற்றி, ஒரு புடவையில் இருந்தே முழு லெஹங்கா செட்டையும் உருவாக்க முடியும். இதன் மூலம் பாரம்பரியமான தோற்றமும் கிடைக்கும், புடவையும் வீணாகாது.

3. குழந்தைகளுக்கான உடைகள் (Kids Wear):

உங்களுடைய பட்டுப் புடவையை உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை, சட்டை, ஃபிராக் அல்லது சிறுவர்களுக்கான குர்தா-பைஜாமா என அழகிய பாரம்பரிய உடைகளாக தைக்கலாம்.

4. மாடர்ன் மேக்ஸி டிரஸ் (Maxi Dress / Long Gown):

பட்டுப் புடவையின் பாரம்பரிய தோற்றத்துடன் வெஸ்டர்ன் மாடலைக் கலந்து, ஒரு லாங் மேக்ஸி டிரஸ் அல்லது ஈவினிங் கவுனாக மாற்றலாம். இது பார்ட்டிகளுக்கு அணிய மிகவும் ட்ரெண்டியாக இருக்கும்.

வெற்று குர்தி அல்லது ஜீன்ஸ்-டாப்ஸிற்கு மேல் அணியக்கூடிய லாங் ஷ்ரக் (Long Shrug) அல்லது கோட் (Jacket) போன்ற வெஸ்டர்ன்-எத்னிக் உடைகளாகப் பட்டுப் புடவையை ரீ- டிசைன் செய்யலாம்.

5. கலைநயம் மிக்க திரைச்சீலைகள் (Curtains):

பட்டுப் புடவையின் நீளமும் அதன் பளபளப்பும் அலங்கார திரச்சீலைகளாக பயன்படுத்தச் சிறந்தவை. வீட்டின் வரவேற்பறை அல்லது பூஜை அறைக்கு பட்டுப் புடவைகளை திரைச்சீலைகளாக பயன்படுத்தலாம். இது வீட்டிற்கு ஒரு ராயல் மற்றும் பாரம்பரிய தோற்றத்தைத் தரும்.

பட்டுப்புடவை
பட்டுப்புடவைGemini image

புடவையின் முந்தானை டிசைன் அல்லது பெரிய மாங்காய், மயில் டிசைன்களை மட்டும் வெட்டி எடுத்து, அதை போட்டோ ஃபிரேம் செய்து சுவரில் மாட்ட (Wall Hanging) சிறந்த ஆன்டிக் லுக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
காஞ்சிபுரம் Vs பனாரஸ்: பட்டுச் சேலை பிரியர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய வித்தியாசங்கள்!
பட்டுப்புடவை

6. குஷன் மற்றும் படுக்கை விரிப்புகள்:

புடவையில் பிய்ந்த அல்லது சாயம் போனப் பகுதிகளை தவிர்த்து, நல்ல பகுதிகளை வெட்டி குஷன் கவர்கள் மற்றும் படுக்கை விரிப்பு உறைகளாக மாற்றலாம். இவை சோபாவிற்கு புத்தம் புதிய பொலிவைத் தரும்.

புடவையின் பார்டர் மற்றும் உடற்பகுதியை வெட்டி, சோபா குஷன் கவர்கள், திவான் ஷீட்கள் அல்லது படுக்கையின் மேல் போடும் பெட் ரன்னராக தைக்க அழகிய மற்றும் ஆடம்பரமான தோற்றத்தைத் தரும். அதேபோல் சாப்பாட்டு மேஜையின் நடுவில் விரிக்கும் டேபிள் ரன்னராகவும் மாற்றலாம். இவை பண்டிகைக் காலங்களில் மேஜைக்குத் தனி அழகை சேர்க்கும்.

7. ட்ரெண்டியான சுடிதார் துப்பட்டா:

ஹெவியான முந்தானை மற்றும் பார்டர் உள்ள பகுதியை மட்டும் தனியாக வெட்டி, ஒரு ப்ளெயினான சுடிதாருக்கு மேட்சிங் துப்பட்டாவாக பயன்படுத்தலாம். இது சாதாரண சுடிதாரையும் கிராண்டாக மாற்றும்.

இதையும் படியுங்கள்:
பனாரஸ், காஞ்சீவரத்திற்கு இணையான பெங்கால் சேலைகள்: 6 அருமையான ரகங்கள்!
பட்டுப்புடவை

8. டிசைனர் பைகள் மற்றும் க்ளட்ச் (Bags & Clutches):

மீதமுள்ள சிறிய பட்டுத் துணிகளை வைத்து மொபைல் பவுச், ஹேண்ட்பேக் அல்லது விசேஷங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய க்ளட்ச் (Clutch/Potli Bag) போன்றவற்றை தைத்து அசத்தலாம். கைப்பைகள் (Tote Bags), சிறிய நகைப் பைகளைக் கூட உருவாக்கலாம். இவை பாரம்பரிய உடைகளுக்குச் சிறந்த மேட்சிங் அக்சஸரியாக இருக்கும்.

நகைகளை வைக்கும் பெட்டிகளின் உட்புறத்தில் பட்டுத் துணிகளை ஒட்டி, நகைகள் கீறல் விழாமல் பாதுகாக்கலாம்.

இப்படி நம் அழகிய பழைய பட்டுப் புடவைகளை வீணாக்காமல் வேறு விதமான ஆடைகளாக மாற்றலாம். வீட்டு அலங்கார பொருட்களாக அல்லது கைப்பைகள் மற்றும் பொட்லி பேக்குகள் போன்ற அக்சஸரிகளாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

அல்மாரியில் முடங்கிக்கிடக்கும் பழைய பட்டுப்புடவைகளை வீணாக்காமல், மீண்டும் எப்படிப் புதுமையான ட்ரெண்டி உடைகளாகவும் வீட்டு அலங்காரப் பொருட்களாகவும் மாற்றலாம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.

இதையும் படிங்க:

இணையத்தையே கலக்கும் ட்ரெண்டிங் பிளவுஸ் டிசைன்ஸ்! உடனே பாருங்க!

மாநிற அழகை மிளிர வைக்கும் 5 ராயல் வண்ணங்கள்: புடவை தேர்வில் தவிர்க்க வேண்டியவை என்ன?