ஆளுமையை உயர்த்தும் தங்க பிரேஸ்லெட்டுகள்: லேட்டஸ்ட் டிரெண்ட்ஸ் இதோ!

கல்லூரி முதல் அலுவலகம் வரை அசத்த நீங்கள் அணிய வேண்டிய ட்ரெண்டி தங்க பிரேஸ்லெட் டிசைன்கள்.
தங்க பிரேஸ்லெட்
தங்க பிரேஸ்லெட்AI image
Updated on

ண், பெண் என இரு பாலரும் தங்க நகைகள் மீது அதிகம் மோகம் கொண்டுள்ளனர். கழுத்தில் செயின், கைகளில் பிரேஸ்லெட், விரல்களில் மோதிரம் என இருவருக்கும் பொதுவாக உள்ளது. எவ்வளவுதான் கவரிங் நகைகள் பல்வேறு டிசைன்களில் வந்தாலும் தங்க நகைகள் மீதே அதிகம் ஆசைப்படுகின்றனர்.

ஆனால் தற்போது தங்க நகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் எடை அதிகமாக வாங்குவதில் சற்று தயக்கம் காட்டுகின்றனர். அந்த வகையில் எடை குறைவாகவும் அட்டகாசமான டிசைன்களில் கூடுதல் அழகை தரும் பிரேஸ்லெட்டுகளை இப்பதிவில் காண்போம்.

ட்ரெண்டியாக ஜொலிக்க இந்த தங்க பிரேஸ்லெட் டிசைன்கள் போதும்

1. மணி டிசைன் பிரேஸ்லெட்

நடுவில் பெரிய மணியும் இரண்டு பக்கமும் இரு சிறிய மணிகள் சேர்த்து அதனுடன் இணைக்கப்பட்ட செயினுடன் கூடிய பிரேஸ்லெட் தற்போது ட்ரெண்டாக உள்ளது. பார்ப்பதற்கு ஸ்டைலான தோற்றத்தை வழங்குவதோடு சிம்பிளாகவும் இருக்கிறது. மேலும் எடை குறைவாக இருப்பதால் வாங்குவதற்கும் சுலபமாக உள்ளது. ஸ்டைலான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும் மணி டிசைன் பிரேஸ்லெட்டுகள் 5 கிராம் முதல் 8 கிராம் அளவுகளில் கிடைக்கிறது.

தங்க பிரேஸ்லெட்
தங்க பிரேஸ்லெட்AI image

2. இன்டர் லாக்கிங் ஸ்டைல் பிரேஸ்லெட்டுகள்

சிம்பிளான டிசைன்களை விரும்புவர்களுக்கு இன்டர் லாக்கிங் பிரேஸ்லெட்டுகள் மிகச் சிறந்தவையாக உள்ளன. இவை செயின் ஸ்டைல் டிசைனில் இருப்பதால் எளிமையாகவும் கைக்கு அடக்கமாகவும் காட்சி தருகின்றன. தினசரி பிரேஸ்லெட் அணிந்தே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இன்டர் லாக்கிங் செயின் ஸ்டைல் பிரேஸ்லெட்டுகளை தாராளமாக வாங்கி அணியலாம். ஏனெனில் எடை குறைவாக இருந்தாலும் செயின் வடிவில் இருப்பதால் விரைவில் தேய்மானம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

3. பூ டிசைன் பிரேஸ்லெட்டுகள்

ஸ்டைலான தோற்றத்தை விரும்புவர்களுக்கு பூ டிசைன் பிரேஸ்லெட்டுகள் மிகச்சரியாக இருக்கும். பூக்கள் ஒவ்வொன்றையும் சிறிது செயின் உடன் இடைவெளி விட்டு இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூ டிசைன் பிரேஸ்லெட்டுகள் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. கிளாசியான தோற்றம் தரும் கல் பதித்த தங்க பிரேஸ்லெட்

வாட்ச் போல பிரேஸ்லெட் அணிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த வெள்ளைகக் கல் பதித்த பிரேஸ்லெட் மிகவும் பொருத்தமாக இருக்கும். இண்டோ - வெஸ்டர்ன் ஆடை அணிந்து இந்த வெள்ளை கல்பதித்த பிரேஸ்லெட்டையும் அணிந்தால் கிளாசியான தோற்றத்தைக் கொடுத்து மற்றவர்கள் முன் கம்பீரத்தை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
நீடா அம்பானி ஸ்டைலிஸ்ட் சொன்ன ரகசியம்.. தலைக்கு குளிக்கும்போது இந்த தப்பு பண்ணாதீங்க!
தங்க பிரேஸ்லெட்

5. கோல்ட் பீட்ஸ் பிரேஸ்லெட்

முழுவதும் தங்க மணிகளால் இணைக்கப்பட்ட கோல்ட் பீட்ஸ் பிரேஸ்லெட் கைகளுக்கு முழுமையான தோற்றத்தை வழங்குகிறது. 5 முதல் 8 கிராம் அளவுகளில் கிடைக்கும் இந்த பிரேஸ்லெட்டுகளை அணியும்போது எடை அதிகமான தோற்றம் போல காட்சியை ஏற்படுத்தும். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த வகை பிரேஸ்லெட்டுகளில் மணிகள் வெவ்வேறு டிசைன்களிலும் கிடைக்கின்றன.

6. மோட்டிஃப் பிரேஸ்லெட்

எடை குறைவாக வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சரியான தேர்வு இந்த மோட்டிஃப் பிரேஸ்லெட்தான். சிறிய மோட்டிஃப்களுடன் கூடிய இந்த பிரேஸ்லெட் அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை அணிபவர்களுக்கு மென்மையான தோற்றத்தை கொடுக்கும் மோட்டிஃப் பிரேஸ்லெட்டை குறைந்த எடையில் வாங்கலாம் என்பதால் 'பட்ஜெட் பிரேஸ்லெட் 'என்றே அழைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வேப்பிலை சிகிச்சை: உங்கள் சருமத்தை மாற்றி அமைக்க ஒரு எளிய வழி!
தங்க பிரேஸ்லெட்

தங்க நகைகள் வாங்கும்போது மனதிற்கு பிடித்த டிசைனில் வாங்கும்போது ஆசையும் அந்த நகையின் மீது ஒரு பற்றும் ஏற்படுகிறது. குறைவான எடையில் பிரேஸ்லெட் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் மேற்கூறிய டிசைன்களில் மனதிற்கு பிடித்ததை தேர்வு செய்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இந்தத் தொகுப்பின் மூலம், மிகக் குறைந்த எடையிலும் உங்கள் தோற்றத்தை கம்பீரமாகவும் நவீனமாகவும் மாற்றி அமைக்க முடியும். உங்கள் ஆளுமைக்கு ஏற்ற நகைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எந்தச் சூழலிலும் மற்றவர்களிடையே தனித்து நின்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com