சுட்டிப் பையன்களுக்கு வேஷ்டி, சட்டையா? அசத்தும் 6 ட்ரெண்டிங் ஆடைகள்!

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்த ஆடைகள் உங்கள் குழந்தைகளுக்கு கம்பீரமான தோற்றத்தைத் தரும்.
சிறுவர் ஆடைகள்
சிறுவர் ஆடைகள்Gemini image
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

பொதுவாக சிறுவர்களுக்கு சட்டை, டிராயர் மட்டும் அணிவிப்பதை விட, பாரம்பரியமும் நவீனமும் இணைந்த தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ஆடை வகைகளை அணிவிக்கலாம்.

1. ரெடிமேட் வேஷ்டி/ சட்டை

பாரம்பரிய நிகழ்வுகள், கோயில் விழாக்கள் மற்றும் வீட்டு விசேஷங்கள் போன்ற நாட்களில் சிறுவர்களுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை அணிவிக்கலாம். இடுப்பில் எலாஸ்டிக் மற்றும் வெல்குரோ (Velcro) பொருத்திய ரெடிமேட் வேஷ்டிகள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. பார்டர் போட்ட ஜரிகை வேட்டியுடன் பிரகாசமான வண்ணங்களில் பட்டுச் சட்டைகளை மேட்ச் செய்து அணிவிக்கலாம்.

2. லினென் குர்தா/நேரு ஜாக்கெட்

பிறந்தநாள் விழாக்கள் மற்றும் குடும்ப விசேஷங்களுக்குச் சிறுவர்களுக்கு இந்த ஆடை பொருத்தமாக இருக்கும். பருத்தி அல்லது லைனன் குர்தாவிற்கு மேல் வண்ணமயமான பூ வேலைப்பாடுகள் அல்லது டிஜிட்டல் பிரிண்ட் செய்யப்பட்ட நேரு ஜாக்கெட்டுகள் அணிவிப்பது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இது குழந்தைகளுக்கு நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றத்தைத் தரும்.

3. வேஷ்டி/ குர்தா

பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் வேஷ்டி, குர்தா சட்டைகளை அணிவிக்கலாம். இடுப்பில் எலாஸ்டிக் வைத்த வேஷ்டி மற்றும் குறுகிய கை கொண்ட காட்டன் குர்தாக்களை மேட்ச் செய்து அணியலாம். இது குழந்தைகளுக்கு எளிதாக நடமாடவும் அணிவதற்குச் சௌகரியமாகவும் இருக்கும்.

4. இண்டோ-வெஸ்டர்ன் ஆடைகள்

வெஸ்டர்ன் ஸ்டைலையும் பாரம்பரிய ஸ்டைலையும் இணைத்து உருவாக்கப்படும் இண்டோ-வெஸ்டர்ன் ஆடைகள், திருமண வரவேற்பு மற்றும் பெரிய விசேஷங்களுக்கு ஏற்ற ட்ரெண்டிங்கான ஆடைகளாகும். குர்தாக்கள் மற்றும் ஜோத்புரி கோட் போன்றவற்றை ஜீன்ஸ் அல்லது காட்டன் பேன்ட்களுடன் இணைந்து அணியலாம். இவை பாரம்பரியத்தையும் நவீனத் தோற்றத்தையும் ஒருசேரக் கலந்து கொடுக்கும்.

சிறுவர் ஆடைகள்
சிறுவர் ஆடைகள்Gemini image

5. பாண்டி மற்றும் அங்கரகா பாணி உடைகள் (Angrakha Style / Bandi jacket):

ராஜஸ்தானி மற்றும் முகலாயர் பாரம்பரியத்தில் இருந்து வந்த அங்கரகா பாணி குர்தாக்கள், சிறுவர்களுக்கான பிரத்யேக டிரெண்டாக மாறியுள்ளன. இதில் மார்புப் பகுதியில் குறுக்காக மடிக்கப்பட்டு, பக்கவாட்டில் நூல்கள் மூலம் முடிச்சு போடும் வசதி இருக்கும். இது குழந்தைகளுக்குத் தனித்துவமான மற்றும் அழகான தோற்றத்தை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
நைட்டிக்கு 'குட்பை' சொல்லும் காலம் வந்துடுச்சு: வீட்டின் சௌகரியத்தை கெடுக்காத 5 மாடர்ன் ஆடைகள்!
சிறுவர் ஆடைகள்

காட்டன்-சில்க் துணிகளில் வருவதால் உடலை உறுத்தாது. லைட் வெயிட்டாக இருப்பதால் குழந்தைகளுக்கு உடலை இறுக்காமல் தளர்வாக வைத்திருக்கவும் உதவுகிறது.

6. பண்டி செட் மற்றும் ஷெர்வானி (Bandi Sets & Sherwani):

மிகப்பெரிய விசேஷங்கள் மற்றும் வீட்டுத் திருமணங்களுக்கு சிறுவர்களை அலங்கரிக்க ஷெர்வானிகள் சிறந்த தேர்வாகும். இலகுரக வெல்வெட் அல்லது சில்க் துணிகளில் உருவாக்கப்படும் ஷெர்வானிகள் சிறுவர்களுக்கு மிகவும் கம்பீரமாக இருக்கும்.

சிக்கன்காரி (Chikankari) மற்றும் புல்காரி போன்ற கைவினை வேலைப்பாடுகள் நிறைந்த 'பண்டி குர்தா செட்' உடைகள், லேசான எடையுடன் நவீன தோற்றத்தைத் தருவதால் பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கின்றன.

ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

சிறுவர்களுக்கு ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, அவற்றின் வெளிப்புற அழகை விட அதன் தரம் மற்றும் குழந்தைகள் அணியச் சௌகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மென்மையான பருத்தித் துணியால் தைக்கப்பட்டுள்ள உடைகள் அவர்களுக்கு ஏற்றவை. அதிக எடையுள்ள மணிகள் மற்றும் அடர்ந்த ஜரிகை வேலைப்பாடுகள் குழந்தையின் சருமத்தை உறுத்தும்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் டிரெண்டாகும் 6 பாரம்பரிய கைத்தறி ஆடைகள்: நவீன ஃபேஷன் உலகில் புதிய புரட்சி!
சிறுவர் ஆடைகள்

எனவே, அவற்றைவிட லேசான மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. கோடைக்காலத்திற்கு ஏற்ற பருத்தி, லினன் மற்றும் சாஃப்ட் சில்க் துணிகளால் ஆன உடைகளைத் தேர்வு செய்யலாம். உட்பகுதியில் காட்டன் லைனிங் வைத்துத் தைக்கப்பட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுத்தால், சிறுவர்களின் மென்மையான சருமத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.

விசேஷ நாட்களில் குழந்தைகளுக்கு உறுத்தாத, அதேசமயம் கம்பீரமான பாரம்பரிய மற்றும் நவீன சிறுவர் ஆடைகள் தேர்ந்தெடுக்கும் தெளிவு பெற்றோருக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com