பெண்களின் மேக்கப் பாக்ஸில் இடம்பெற வேண்டிய லிப்ஸ்டிக் வகைகள்!

variety lipstick shades
variety lipstick shades
Published on

மேக்கப் போட்டுக்கொள்ளும் பெண்களின் லிஸ்டில் முக்கிய இடம் பிடிப்பது லிப்ஸ்டிக். பிரமிக்க வைக்கும் வண்ணங்களில் உள்ள 12 விதமான லிப்ஸ்டிக் வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அழுத்தமான கலரில் வரும் லிப்ஸ்டிக் (High pigment lip gloss)

அழுத்தமான கலரில் வரும் இது உதட்டிற்கு மென்மையான பளபளப்பை தருகிறது. முகத்திற்கு அழகான பிரகாசமான தோற்றத்தை தருகிறது.

2. அதிக பளபளப்பான உதட்டுச் சாயங்கள் (High-shine lipsticks)

இந்த லிப்ஸ்டிக் உதட்டில் போட்டுக்கொள்ள இலகுவாகவும் சீராகவும் இருக்கும். லிப் பாமை போல உதட்டுக்கு நிறத்தையும் பளபளப்பையும் தருகிறது. இதில் இருக்கும் வெல்வெட் சாட்டின் பூச்சு உதடுளின் நிறத்திற்கு அழகைக் கூட்டுகிறது.

3. வெல்வெட் மேட் லிப்ஸ்டிக் (Velvet matte lipsticks)

இது பல்வேறு வடிவத்தில் வண்ணங்களில் வருகிறது. எல்லாவிதமான சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது. இதை போட்டுக் கொண்டால் கம்பீரமான மற்றும் ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தை தருகிறது. நீண்ட நேரத்திற்கு நீடிக்கக் கூடியது.

4. திரவ உதட்டுச் சாயம் (Liquid lipsticks)

சமீப காலங்களில் பெண்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறது. இந்த லிப்ஸ்டிக்கை உதட்டில் போட்டுக் கொண்டால் உணவு உண்ணும்போது கூட அது கலைந்து போவதில்லை. டச்சப் செய்ய வேண்டியது இல்லை அனைத்து கிளாசிக் வண்ணங்களிலும் கிடைக்கின்றன.

5. லிப் கிரீம் மற்றும் ஸ்டெயின்ஸ் ( Lip cream and stains)

இதை உதட்டில் அப்ளை செய்ததும் ஒரு நிமிடத்திற்குள் உலர்ந்துவிடும். ஆனால் 6 மணி நேரம்வரை நீடிக்கும். சிறிய உதடுகளைக் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். மென்மையான பளபளப்புடன் உதட்டை அழகாக்குகின்றன.

6. லிப் ஸ்டெயின்ஸ் (Lip stains or tints)

நல்ல ஆழமான வண்ணங்களில் வருகிறது. இது லிப்ஸ்டிக் அணிந்திருக்கும் உணர்வைத் தராமல் ஷேடு லிப்ஸ் அப்ளை செய்திருப்பதை போன்ற உணர்வைத் தருகிறது. நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
உடல் அமைப்புக்கேற்ப பொருத்தமாக நகைகளை எப்படி அணியவேண்டும்?
variety lipstick shades

7. பவுடர் லிப்ஸ்டிக்குகள்;

இவை நல்ல பிரகாசமான நிறங்களில் வருகின்றன. ஒரு இதை ஒரு தூரிகை கொண்டு அல்லது கை விரல்களால் கூட உதடுகளில் அப்ளை செய்து கொள்ளலாம். உதட்டில் உள்ள இயற்கை எண்ணெய்களுடன் வினைபுரிந்து மென்மையான நிறத்தைத் தருகிறது. மணிக்கணக்கில் நீடிக்கிறது. சீக்கிரம் அழிந்து போவதில்லை.

8. Lip lacquers;

இது உதட்டிற்கு மெல்லிய பூச்சை வழங்குகிறது. மென்மையான பளபளப்பை தருகிறது. இந்த லிப்ஸ்டிக் மாய்ஸ்ரைசர்கள் மற்றும் விட்டமின்களால் செறிவூட்டப்பட்டு இருக்கிறது. உலர்ந்த உதடுகள் கொண்டவர்களுக்கு இந்த வகையான லிப்ஸ்டிக் சிறந்த தேர்வாக இருக்கும்.

9. லிப் க்ரேயான்கள் (Lip crayons)

கிரேயான் பென்சில் போன்ற தோற்றத்தில் வருகிறது இந்த லிப்ஸ்டிக். உதட்டில் அவுட்லைனிங் செய்து பின்னர் இதை அப்ளை செய்து கொள்ளலாம். லேசான மற்றும் ஆழமான ஷேடுகளில் வருகின்றன. நீண்ட நேரத்திற்கு அழியாத வகையில் சூப்பர் பிக்மெண்ட் செய்யப்பட்டுள்ளன. வண்ண வண்ண உடைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த தேர்வாகும். நுட்பமான நேர்த்தியான தோற்றத்தை தருகிறது. இளம் பெண்களுக்கு பிடித்த லிப்ஸ்டிக்காக இருக்கிறது.

10. உதட்டு எண்ணெய் (Lip oil)

நேர்த்தியான ஒட்டாத லிப் ஆயில்கள் ஒரு மென்மையான பதிப்பாகும். உயர் பளபளப்பை தருகின்றன. இந்த தயாரிப்புகளில் பெரும்பான்மையானவை ஊட்டம் அளிக்கும் லிப் ஆயிலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உதடுகளை மிருதுவாக வைத்திருக்கிறது. இளஞ்சிவப்பு, பீச், பவள நிற உதட்டு எண்ணெய்கள் பிரபலமானவை.

இதையும் படியுங்கள்:
உங்கள் முகத்தை இயற்கையான முறையில் அழகாக்க சில Tips!
variety lipstick shades

11. (Metallic lipsticks) உலோக உதட்டுச் சாயங்கள்;

90 களில் பிரபலமான லிப்ஸ்டிக் வகை இது. உதடுகளை பிரகாசமாக வைத்திருக்க உதவுகின்றன. பருமனான உதடுகளுக்கு ஏற்றவை. அதிக நிறமிகளை கொண்ட இந்த தயாரிப்புகளில் உருகிய உலோகத்தைப் போன்ற கூடுதல் பளபளப்பை தருகிறது. இது அணிந்திருப்பவர்களுக்கு முப்பரிமாண விளைவை சேர்க்கின்றன. விருந்துகளுக்கு செல்லும்போது இது நல்ல சாய்ஸ்.

12. ஹாலோகிராபிக் கிளாஸ் (Holographic glosses)

இது அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகும். இதன் முத்துப் போன்ற பளபளப்பு, தோற்றத்தை கூடுதல் நேர்த்தியுடன் மேம்படுத்தி, ஒளிர வைக்கும். இது ஹாலோகிராபிக் விளைவின் பல பரிமாண கோணங்களில் உதடுகளை வெவ்வேறு வழிகளில் ஒளிரச் செய்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com