

கோடையில் வெயிலால் ஏற்படும் சரும கருமையை குறைக்க மெலனின் சுரப்பை கட்டுப்படுத்தும் வழிகள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலம் மூலம் இறந்த செல்களை நீக்கும் முறைகள், கெமிகல் குறைந்த ஃபேஸ் வாஷ், சரியான எக்ஸ்ஃபோலியேஷன் நேரம், நீர்சத்து நிறைந்த சீரம், சன் ஸ்க்ரீன் பயன்பாடு, மசாஜ் ஸ்க்ரப் போன்ற நடைமுறைகள் விரிவாக விளக்கப்படுகின்றன.
வெயிலால் ஏற்படும் கருமை நீங்கி உங்கள் உடல் தங்கம்போல் ஜொலிக்கவேண்டுமா? நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. உடலில் அதிகப்படியான மெலனின் சுரக்கப்படுவதால் கருமை ஏற்படுகிறது. அல்ட்ரா வயலெட் கதிர்களே இதற்குக் காரணம் இறந்த திசுக்கள் அதிகமாகும்போது துளைகள் மூடப்படுகின்றன. ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலம் இறந்த செல்களை நீக்குகிறது. கருமை நீங்க 9 வழிகள் பற்றிப் பார்ப்போம்
1. முகத்தில் அதிக கெமிகல் இல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி வேண்டும். பிஹெச் சமச்சீராக உள்ள க்ளென்சரை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணைப் பசை நீங்காமல் இருக்கும்.
2. நீங்கள் எக்ஸ்போலியேட் ஜெல் பயன்படுத்தும் போது வட்டவடிவில் தடவுங்கள். இதன்மூலம் அந்த ஜெல் எல்லா இடங்களிலும் பரவலாகச் சேரும். இதனால் அரிப்பும் பிரச்னை குறையும்.
3. நம் உடலில் முழங்கை, முட்டி மற்றும் கணுக்கால்களில் கருமை அதிகம் இருக்கும். இந்த இடங்களில் அதிக அழுத்தம் கொடுத்து தடவவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
4. நீங்கள் எக்ஸ்ஃபோலியேட் செய்யும் நேரம் மிக முக்கியமாக கவனத்தில் வைக்க வேண்டிய விஷயமாகும். இரண்டு நிமிடம் மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். அதிக நேரம் செய்தால் அரிப்பு ஏற்பட்டு பிக்மெண்டேஷன் பிரச்னை உருவாகும்
5. நீர்சத்து நிறைந்த சீரம் நீங்கள் எக்ஸ்ஃபோலியேட் செய்த பிறகு உடலில் அர்ச்சித்து மிகுந்த சீரத்தை உபயோகிக்க வேண்டும் இது வறட்சியைப் தடுக்கும். க்ளிசரின் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த சீரம் பயன்படுத்துவதால் துளைகள் அடைபடுவதையும் தடுக்கும்.
6. வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை எக்ஸ்ஃபோலியேட் ஜெல் பயன்படுத்துதல் நல்லது. இதன் மூலம் முழுமையாக கருமை நீங்கும்.
7. இயற்கையான முறையில் கருமையைப் போக்குவது நல்ல அழகைத் தரும். கடலைமாவு, மஞ்சள்பொடி மற்றும் பால் இவறறைக் கலந்து எக்ஸ்ஃபோலியேட் செய்வது சிறந்தது. இதில் சிறிது எலுமிச்சையையும் சேர்ப்பதால் ப்ளீச்சிங் நன்கு ஆகும்.
8. பாதுகாப்பு முன் நடவடிக்கை எடுப்பது கருமையைத் தடுக்க முடியும். இதற்கு சிறந்த சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சில் இருந்து சிறந்த பாதுகாப்பு தரும் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு இதை பயன்படுத்துவதால் நல்ல பலனைத் பெறலாம்.
9. நீங்கள் ஸ்க்ரப் செய்யும்போது அழுத்தமாக செய்யாமல் மசாஜ் சேர்த்து போல் பயன்படுத்தினால் நல்ல பலன் நேரிடும். மசாஜ் மாதிரி ஸ்க்ரப் செய்வதன் மூலம் அழற்சி மற்றும் பிக்மெண்டேஷனைத் தடுக்கலாம்.
கருமையைப் போக்க நீங்கள் பயன்படுத்தும் க்ரீமை கையில் மேல்பகுதியிலோ அல்லது காதின் பின்புறமோ தடவி 24 மணிநேரம் எந்த பாதிப்பும் இல்லையென்றால் பயன்பபடுத்தவும்.
கருமையைப் போக்கும் இயற்கை வழிகள் பற்றியும் தெரிந்துகெள்ளுங்கள்.
ரோஸ் வாட்டர் மூல்தானி மிட்டி
ஒரு டேபிள்ஸ்பூன் மூல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி தடவி காய்ந்ததும் கழுவுங்கள்
பப்பாளி
இதில் பப்பெய்ன் உள்ளது. பப்பாளியை கூழாக்கி அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் தடவிக்கழுவ கருமை நீங்கும். காபி பௌடருடன் தேங்காய் எண்ணை சேர்த்து தடவிக் கழுவ நல்ல பலன் தெரியும்.
தேங்காயை கூழாக்கி ஐஸ் ட்ரேயில் சேர்த்து இது கெட்டியானதும் ஒரு க்யூபை எடுத்து வட்டவடிவில் தடவிக்கழுவ சருமம் பளபளப்பாகும்.
ஸ்ட்ராபெர்ரியில் ப்ளீசிங் பண்பு உள்ளது. இதைக் கூழாக்கி ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீமில் கலந்து குழைத்துக் தடவிக் கழுவ கருமை நீங்கும்.
இயற்கையான மற்றும் முறையான சரும பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெயிலால் ஏற்பட்ட கருமை முழுமையாக நீங்கி உங்கள் உடல் தங்கம்போல் ஜொலிக்கும் பொலிவான அழகைப் பெறலாம்.