முடி ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் டி!

Vitamin D foods
Vitamin D foods

வைட்டமின் டி நமது எலும்பை வலிமைப் படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல் வைட்டமின் டி சத்து, நம் கூந்தல் ஆரோக்கியத்திலும் அதிக பங்கு வகிக்கிறது என்பதே நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

வைட்டமின் டி-யானது வைட்டமின் சத்துக்களிலேயே மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டி, எலும்பை வலிமையாக்க உதவுகிறது. அதேபோல், சரும அரோக்கியத்திற்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம். அத்துடன் இது செல் வளர்ச்சியைத் தூண்டி, புதிய முடிகள் வளரவும், ஏற்கனவே இருந்த முடிகளை வலுவாக்கி சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஒரு தனி மனிதனுக்கு 1 வயதிலிருந்து, ஒரு நாளைக்கு குறைந்தது 600 IU - 800 IU(சர்வதேச அலகுகள்) - அல்லது 15 - 20 மைக்ரோ கிராம்கள் (mcg) வைட்டமின் D தேவைப்படும். 

உங்கள் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாவிட்டால், புதிய முடி வளர்ச்சி தடைபடும் என்று ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. வைட்டமின் டி குறைபாடு அலோபீசியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது அலோபீசியா என்பது உச்சந்தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஒரு ஆட்டோ இம்யூன் நிலையாகும். இந்த பாதிப்பு ஆண்கள் பெண்கள் என்ற எந்த பாரபட்சம் இல்லாமல், வைட்டமின் டி குறைபாடு உள்ள அனைவருக்குமே ஏற்படும்.

வைட்டமின் டி குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

சூரிய ஒளியில் வெளியே செல்லாமல், வெகுநாட்களாக வீட்டுக்குள்ளே இருப்பதன்மூலம் உடலில் வைட்டமின் டி குறைப்பாடு ஏற்படுகிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள உணவுகள் மற்றும் அதிகப்படியான சன்ஸ்க்ரீன் பயன்படுத்துதல் போன்றவை வைட்டமின் டி குறைபாடுக்கு வழி வகுக்கின்றன.

இக்குறைபாடை எப்படி சரி செய்வது?

சன் பாத் செய்யுங்கள். அதாவது காலை வெயிலில் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும், நமக்குத் தேவையான வைட்டமின் டி யும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பகால சருமப் பிரச்சனைகளைப் போக்க சில டிப்ஸ்!
Vitamin D foods

அதேபோல் சைவ உணவுகளில், காளான்கள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், முட்டை மற்றும் செறிவூட்டப்பட்ட பாதாம் பால் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளன. ஆகையால், இந்த உணவுகளை உங்கள் டயட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் அசைவத்தில் சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் பிற கொழுப்பு மீன்கள், மீன், கல்லீரல் எண்ணெய்கள் மற்றும் விலங்கு கொழுப்புகள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

முடி பராமரிப்புக்கு மாஸ்க் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துதலாகாது. இதுபோன்ற வைட்டமின் டி உள்ள ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்ளுதல் மூலம் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com