தூங்குவதற்கு முன் முகத்தில் பாதாம் எண்ணெய் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா? 

Almond Oil
Almond Oil Before Bed

சருமப் பராமரிப்பு என வரும்போது சந்தையில் பல தயாரிப்புகள் இருந்தாலும், சில சமயங்களில் சிறந்த பலன்களை அடைய இயற்கையான வழிமுறைகளையே நாம் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அத்தகைய இயற்கை அதிசயங்களில் ஒன்றுதான் பாதாம் எண்ணெய். பாதாம் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.‌ இந்தப் பதிவில் தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் பாதம் எண்ணையை பயன்படுத்துவதன் அற்புத நன்மைகளை ஆராய்வோம். 

ஈரப்பதம்: பாதாம் எண்ணெய் உங்கள் முகத்திற்கு ஒரு அருமையான மாய்ஸ்சரைசர். அது சருமத்தில் ஆழமாக ஊடுருவி நீரேற்றத்தை வழங்குகிறது. தூங்குவதற்கு முன் சில துளிகள் பாதாம் எண்ணையை முகத்தில் தேய்ப்பது மூலமாக, காலையில் எழுந்திருக்கும்போது புத்துணர்ச்சியான மிருதுவான சருமத்துடனும் இருக்க உதவும். 

Anti-aging பண்புகள்: பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஏ உள்ளிட்ட ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இது விரைவாக வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை குறைக்க உதவும். இது சருமத்திற்கு எப்போதும் இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். 

சருமப் புத்துணர்ச்சி: பாதாம் எண்ணெயில் உள்ள விட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சரும செல்களை புதுப்பிக்க உதவுகின்றன. இதனால் உங்களது சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் சிறப்பாக மாறி, எப்போதும் மென்மையாகவும், சீரான தோற்றத்துடனும் வைத்திருக்க உதவும். 

கருவளையங்களை சரிசெய்யும்: நீங்கள் கருவளைய பாதிப்புடன் போராடிக் கொண்டிருந்தால் பாதாம் எண்ணெய் உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும். தூங்கும் முன் கண்களைச் சுற்றி சிறிதளவு பாதாம் எண்ணெயை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். இது கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைத்து கருவளையங்களை கொஞ்சம் கொஞ்சமாக மங்கச் செய்யும். 

Makeup Remover: பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த மேக்கப் நீக்கும் பொருளாகும். இதன் மென்மையாக்கும் பண்புகள் கடுமையாக ஒட்டிக் கொண்டிருக்கும் பொருட்களைக் கலைக்க உதவுகிறது. முகத்தில் சில துளிகள் பாதாம் எண்ணையை விட்டு நன்றாகத் தேய்த்தாலே முகத்தில் உள்ள அனைத்து மேக்கப் பொருட்களும் வெளியே வந்துவிடும். பின்னர் ஒரு சுத்தமான துணியைப் பயன்படுத்தி அவற்றை எளிதாகத் துடைத்து விடலாம். 

இதையும் படியுங்கள்:
பாதாம் எண்ணெய் தரும் 6 அற்புதப் பலன்கள்!
Almond Oil

பாதாம் எண்ணெயை முகத்தில் பயன்படுத்தும்போது அது தூய்மையானதாக இருக்கிறதா என்பதை முதலில் சரி பாருங்கள். எப்போதும் ஆர்கானிக் எண்ணெயையே தேர்ந்தெடுக்கவும். இரவு நேர சருமப் பராமரிப்பில் பாதாம் எண்ணையை பயன்படுத்துவதால், வெளிப்படையாகவே சில அதிசயங்களை நீங்கள் காண்பீர்கள். குறிப்பாக நிறத்தில் மாற்றம் மற்றும் பளபளப்பான சருமம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com