ஆரோகியமான சருமம் வேண்டுமா? இந்த உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள்!

natural beauty tips
Want healthy skin?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிஸ்தா, பருப்புகளின் அரசனான பிஸ்தா பருப்பு சுவையிலும், சத்துகளிலும் மேம்பட்டது. நார்ச்சத்து, நிறைவேறாத கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களை (anti oxidant compounds) கொண்ட ஆரோக்யமாக ஊட்டச்சத்து அடர்த்தியை கொண்டவை.

பொதுவாகவே நட்ஸ் வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கும். அதிலும் பிஸ்தாவில் கூடுதல் நன்மைகள் உள்ளன. திசுக்களை சரிசெய்ய, உடலியல் எதிர்வினைகளை ஒழுங்குபடுத்துகிறது.

பிஸ்தாவை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் கண்புரை பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் ஆரோக்யமாக செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. புரோபயாடிக் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

பிஸ்தாவில் உள்ள எண்ணெய் பசை ‌சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
முடி உடையாமல் இருக்க, நரை முடி மறைய... இந்த வைட்டமின்கள் தேவை!
natural beauty tips

பிஸ்தா எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசர். சருமத்தை மிகவும் மென்மையாக ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பிஸ்தாவில் இருக்கும் கொழுப்புதன்மை கூந்தலுக்கு ஊட்டத்தை அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. கூந்தலின் வேர்க்கால்கள் வலுவடைந்து கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது. பயோடின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.

பிஸ்தாவை ரெகுலராக அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

logo
Kalki Online
kalkionline.com