ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் 10 அதிசய விலங்குகள்!

Amazing animals living in Australia
Amazing animals
Published on

ன விலங்குகளில் சில வகை மிகவும் அபூர்வமானதாகவும், தனித்துவ குணமுடையதாகவும் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அப்படிப்பட்ட தனித்துவமான 10 வகை மிருகங்கள், பறவையினங்களைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

1. க்வோகாஸ் (Quokkas): எப்பொழுதும் சிரித்த முகத் தோற்றத்துடன் தனித்துவமாகக் காணப்படும் இந்த விலங்கை, 'மிகவும் சந்தோசமான மிருகம்' (Happiest Animal) என்றே அழைக்கின்றனர்.

2. நும்பட் (Numbat): ஒட்டும் தன்மையுடைய நீண்ட நாக்கை உடைய விலங்கு இது. அத்தகைய நாக்கின் உதவியால் கரையான்களை சுலபமாகப் பிடித்து உட்கொண்டு உயிர் வாழ்வதால், 'கரையான் உண்ணி' எனவும் இது அறியப்படுகிறது.

3. த ஃபிட்ஸ்ராய் நதி ஆமை (The Fitzroy River Turtle): இது தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள ஃபிட்ஸ்ராய் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காணப்படுகிறது. இது தனது உடலின் பின்புற வழியாக சுவாசிப்பதால் இதை, 'பம் ப்ரீதிங் டர்டில்' (Bum Breathing Turtle) என அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிங்கத்தை விட புலி ஏன் ஆபத்தானது? நீங்கள் அறிந்திராத உண்மைகள்!
Amazing animals living in Australia

4. ஈமு (Emu): உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய அளவுடைய பறவை இது. இனப்பெருக்க விதிகளை தலைகீழாய்ப் பின்பற்றும் வகையைக் கொண்டது. அதாவது, பெண் பறவை முட்டை இட, ஆண் பறவை அடைகாத்து, குஞ்சுகள் பொரித்ததும் அவற்றை வளர்த்து ஆளாக்கவும் செய்கிறது.

5. கேஸ்ஸோவரி (Cassowary): கண்கவர் வண்ணத்தில் மிக அழகான பறவை கேஸ்ஸோவரி. அதிக எடை கொண்டது. இதனால் பறக்க இயலாது. இது தனது சக்தி வாய்ந்த கால்களால் ஒரு உதை விட்டால் எதிரியின் எலும்புகள் நொறுங்கும். சில சமயம் மரணம் கூட உண்டாகும். 'கேஸ்ஸோவரி கிக் (Cassowary Kick) என்பது பல இடங்களில் புகழ் பெற்ற சொற்கள்.

6. கோலா (Koala): யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வருவது கோலா. வாழ்நாளின் பெரும் பகுதியை யூகலிப்டஸ் மரங்களின் மேலேயே, அவற்றின் இலைகளை உட்கொண்டு கழிக்கிறது. இதன் தோற்றம் பஞ்சடைத்த பொம்மைக்கு (soft toy) நிகராகவே உள்ளது.

7. வாலபய் (Wallaby): சிறிய அளவிலான கங்காரு போன்ற தோற்றம் கொண்டது. இதன் கருத்தரிக்கும் செயல்பாடுகளில் 'கரு டயாப்பாஸ்' (embryonic diapause) என்றொரு நிலைப்பாடும் உள்ளடங்கியது.

இதையும் படியுங்கள்:
இலையுதிர் காடுகளில் வளரும் அரிய மூலிகை வெட்பாலை மரத்தின் பயன்கள்!
Amazing animals living in Australia

8. எச்சிட்னா (Echidna): எச்சிட்னா தனது குட்டிகளுக்குப் பாலூட்டும் முறை விசித்திரமானது. மற்ற பாலூட்டி வகை விலங்குகளுக்கு உள்ளது போல் எச்சிட்னாவுக்கு உடலில் நிப்பிள்கள் கிடையாது. அதற்குப் பதில் உடலில் ஆங்காங்கே தனித்துவமான அமைப்பில் பால் திட்டுகள் (Milk Patches) உண்டு. அவற்றின் வழியே பால் சுரந்து வழியும். குட்டி எச்சிட்னா அந்தப் பாலைக் குடித்து வளரும்.

Amazing animals living in Australia
Amazing animals

9. ஒம்பாட் (Wombat): ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் தனிமையான வனப் பகுதிகளில் வசித்துவரும் வலிமைமிக்க விலங்கு இது. தனது சக்தி வாய்ந்த கால்கள் மற்றும் அதன் நகங்களால் குழி பறிப்பதில் புகழ் பெற்ற இனம் ஒம்பாட். கங்காரு போலவே இதுவும் தனது குட்டியை தோலினாலான, பின் பக்கம் அமைந்துள்ள பையில் சுமக்கும் பழக்கம் கொண்டது.

10. கங்காரு (Kangaroo): வயிற்றில் உள்ள தோல் பையில் தனது குட்டியை சுமந்து திரிவது மற்றும் சிறப்பான முறையில் குதித்தோடும் திறமை போன்றவை இதன் பிரபலமான குணாதிசயங்கள் ஆகும். ஒரு தாவலில் முப்பது அடி தூரத்தைக் கூட இது கடக்கும் என்னும் தகவல் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com