
சிங்கங்கள் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், வலிமையாகவும் தெரிந்தாலும் கூட அதைவிட, ஒரு சில பண்புகளில் புலியானது தனித்து காணப்படுகின்றன. அதாவது வேகம், அதனுடைய எடை, பாய்ச்சல் திறன், இரையைப் பிடிக்கும் உத்தி என்று சிங்கத்திலிருந்து புலியானது வேறுபட்டு காணப்படுகிறது.
புலிகளின் இனம்:
புலியானது பூனை குடும்பத்தை சேர்ந்த பாலூட்டி இனமாகும். ஒவ்வொரு நாட்டில் இருக்கின்ற புலிகளைப் பொறுத்து, வங்காளப் புலி, காஸ்பியன் புலி, மலாயன் புலி, இந்தோ சீனப் புலி, ஜாவான் புலி, பாலி புலி, தென் சீனப்புலி, சுமித்திரா புலி, சைபீரியன் புலி என்று அழைக்கப்படுகின்றன.
உடலமைப்பு:
வளர்ந்த ஆண் புலியானது,180 முதல் 300 கிலோ வரையிலும், அதேபோல் பெண் புலியானது,120 முதல் 190 கிலோ வரையிலும் காணப்படுகின்றன. தடித்த தசைநார் கொண்ட உடலமைப்பை பெற்றுள்ளன.கூறிய நகங்கள், வலிமையான தாடை,பெரிய தலை, நீளமான வால், ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற கோடுகளை கொண்ட உரோமங்கள் போன்ற உடலமைப்பு பெற்றுள்ளன.
குணாதிசயம்:
வலிமைக்கு பெயர்ப் போனவை, தனியாக வேட்டையாடுபவை, பெரும்பாலும் தனிமையையே விரும்பும், பயமில்லாத மூர்க்கத்தனம் கொண்டவை, நகங்கள் உள்ளிளுக்கும் தன்மை கொண்டவை, இனச்சேர்க்கைக்காவும் உணவிற்காகவும் ஒன்றிணைகின்றன.
வேட்டையாடும் திறன்:
புலிகள் பொறுமையாக பதுங்கி இருந்து இரையைத் தாக்கும். சிங்கத்தைவிட புலியின் கடியானது 1050 PSI அதிகம். ஒரே அடியில் மனிதனின் மண்டை ஓட்டையையே நொறுக்கிவிடும். இதனால் இந்த புலிகள் வலிமைக்கு பெயர் போனவை.
வேகம்:
புலியின் அதிகபட்ச வேகமானது மணிக்கு 60 கிமீ ஆகும். பொதுவாக, வேட்டையாடும்போது, அது 5 வினாடிகளில் 70 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது.
தகவமைப்பு:
நல்ல நீந்தும் தகவமைப்பை பெற்றுள்ளன. அதேபோல் நகங்கள் இரைகளை பிடிப்பதற்கும், கிழிப்பதற்கும், மரத்தில் ஏறுவதற்கும் பயன்படுகின்றன. இறைச்சிகளை உண்ணுவதற்கு ஏற்ப தாடைகளும், பற்களும் தகவமைந்துள்ளன.
வாழ்விடங்கள்:
வெப்பமண்டலப் பகுதிகள், மழைக்காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலப் பகுதிகள் என்று தொடங்கி பனி படர்ந்த பிரதேசங்கள் வரை உலகெங்கிலும் புலியானது பரவி காணப்படுகின்றன.
பிரதேசத்தை பாதுகாத்தல்:
புலிகள் தங்களின் பிரதேசமான வாழிடங்களை; குறிப்பதற்காகவும், மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும், தனது சிறுநீரை ஆங்காங்கே அடிப்பதன் மூலம் தனது எல்லை என்று பிறவிலங்குக்கு தெரியப்படுத்துகிறது.
இனப்பெருக்கம்/குட்டியினும் காலம்:
புலிகள் பெரும்பாலும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. குட்டியினும் காலம் 16 வாரங்கள் ஆகும். ஒரு பிரசவத்தில் இரண்டிலிருந்து இருந்து நான்கு குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் 8 முதல் 12 வாரங்கள் வரை தாய்ப்பதுகாப்பிலே இருக்கும்.
தமிழில் உள்ள வேறு பெயர்கள்:
புலிக்கு தமிழில், உழுவை, வேங்கை, வயமா, வல்லியம், கொடுவரி, குயவரி, பல்வரி, சிறுவரி என்று இதுபோன்ற பெயர்கள் உள்ளன
அழிந்து வரும் இனங்களில் புலியினங்களும் ஒன்றாகும்..! காடுகளை அழிப்பது, ஆக்கிரமிப்பு போன்ற பல செயல்களே இதற்கு காரணம்..! இதனால் புலிகளின் வாழ்விடங்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழிடங்களும் பறிக்கப்படுகின்றன. சிந்தித்து செயல்பட்டு அனைத்து உயிரினங்களையும் காப்போம்..!