
உயிருள்ள மிருகங்களில் யானை, காண்டாமிருகம் போன்றவை உடலில் எந்த மாதிரியான டிசைனுமில்லாமல் சமமான தோற்றம் கொண்டிருக்கும். மான், வரிக்குதிரை போன்றவற்றின் உடலில் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். வேறு சில வகை மிருகங்களின் உடலில் ஓவியம் வரைந்தது போன்ற தத்ரூபமான டிசைன்கள் காணப்படும். அவ்வாறானவற்றில் 10 மிருகங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. டால்மேஷியன் டாக் (Dalmatian Dog): இவற்றின் வெள்ளை நிற உடலில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் நிறைந்திருக்கும். பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளலாம். அன்பான தோழமைக்கு தகுதி பெற்றது இந்த வகை நாய்.
2. சிறுத்தை (Leopard): இதன் வெளிர் மஞ்சள் நிற தோலில் ரோஜா இதழ்களை அடுக்கினது போன்ற வடிவில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். மரம் நிறைந்த காடுகள் மற்றும் புற்கள் நிறைந்த இடங்களில் இவை தந்திரமாக தனது உருவை மறைத்து இரையை வேட்டையாட இந்த உடலமைப்பு இதற்கு உதவி புரியும்.
3. ஸ்பாட்டட் ஹைனா (Spotted Hyena): மணல் போன்ற நிறமுடைய இதன் உடலில் அடர் நிறத் திட்டுக்கள் போன்ற வடிவம் அமைந்திருக்கும். காய்ந்த சாவன்னா புல்வெளிக் காடுகளில் தனது உருவை மறைத்து தனது வலுவான தாடைகளின் உதவியால் புத்திசாலித்தனமாய் இரைகளை வேட்டையாடுவதில் நிகரற்ற மிருகம் இது.
4. அப்பலூசா ஹார்ஸ் (Appaloosa Horse): இதன் உடலில் காணப்படும் கருமை மற்றும் வெளிர் நிறத்திலான வெவ்வேறு வகைப் புள்ளிகள் அப்பலூசாவை தனித்துவம் மிக்கதாகக் காட்ட உதவுகின்றன.
5. ஸ்பாட்டட் ஈகிள் ரே (Spotted Eagle Ray): தட்டையான கருமை நிறம் கொண்ட உடலில் வெள்ளைப் புள்ளிகளுடன், வெப்ப மண்டலக் கடல்களில் காணப்படுகின்றன. கடலுக்கு அடியில் நீந்திச் செல்லும்போது உருமாற உதவுகிறது இதன் உடலமைப்பு.
6. ஃபாலோ டீர் (Fallow deer): இவ்வகை மான்களின் பிரவுன் கலர் தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்த காடுகளிடையே இவை தம் உருவை மறைத்துக்கொள்ள இந்த அமைப்பு உதவுகிறது.
7. ஸ்பாட்டட் ஸலாமன்டெர்(Spotted Salamander): நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இந்த பூச்சியின் கருமை நிறம் கொண்ட உடலில் பளீரென்ற மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் உள்ளன. இவற்றை வேட்டையாட வரும் பிற மிருகங்களை, 'இது ஒரு விஷத்தன்மை கொண்ட பூச்சி' என்றெண்ணி பயந்து ஓடச் செய்யவே இதன் உடலமைப்பு இவ்வாறு உள்ளது.
8. கினி ஃபௌல் (Guinea Fowl): தமிழில் கிண்ணிக் கோழி எனப்படும் இப்பறவையின் கருமையான இறகுகளில் மிக நேர்த்தியான வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. இது அழகிய முத்துக்கள் பதித்த ஆடை அணிந்திருப்பது போன்ற தோற்றம் தரும்.
9. ஜாகுவார் (Jaguar): இது ஒரு பெரிய வகை பூனை இனத்தை சேர்ந்தது. சிறுத்தை போலவே உடலில் கரும் புள்ளிகள் கொண்டது. ஜாகுவார் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்து வாழ இது உதவுகிறது.
10. சீட்டா (Cheetah): இதன் உடலிலும் திட்டுத் திட்டான கரும் புள்ளிகள் உள்ளன. புல் வெளிகளில் இரை பிடிக்க வேகமாக ஓடும்போது இத்திட்டுக்களின் கண்ணைக் கூசச் செய்யும் ஒளி குறைந்து, அதன் செயலுக்கு உதவிபுரிகின்றன.