
பங்கோலின்
இதனுடைய வால் முழுவதும் ஸ்கேல்களால் மூடியிருக்கும். அதற்கு ஆபத்து நேரும்போது வாலை பந்துபோல் சுருட்டிக்கொள்ளும்.
சீ ஹார்ஸ்
இதன் வால் நன்றாக சுருட்டும் அளவிற்கு நெகிழ்வான இருக்கும். பவழபாபாறைகள் மற்றும் கடல் seaweed களிலிருந்து கடலில் விழாமல் காக்கும்
கங்காரூ
இதனுடைய நீண்டவால் இதற்கு மூன்றாவது கால் போல் செயல்படும். இதன்மூலம் இது நிமிர்ந்து நிற்கக்கூட முடியும்
தேள்
விஷத்தன்மையுடன் உள்ள இதன் வால் இதை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.
ஸ்பைடர் மங்கி
இதன் நீண்ட நெகிழ்வான வால் இன்னொரு கை போல் செயல்படுகிறது. மரத்திற்கு மரம் தாவ பயன்படுகிறது.
Lyrebird
இதில் ஆண்இனம் மிக நீண்டஃபேன் போன்ற அமைப்பு கொண்ட வாலை விரித்து ஓரு வாத்தியம்போல் ஆக்கி இனப்பெருக்கம்போது சிறந்த ஒலி எழுப்பி பெண் பறவைகளை ஈர்க்கிறது.
முதலை
இதன் நீண்ட வலிமையான மற்றும் அடர்த்தியான வால் ஒரு துடுப்பு போல் செயல்பட்டு அதை நிலத்தில் பாதுகாக்கிறது.
ஒட்டகச் சிவிங்கி
நீண்ட மற்றும் முடியுடன் காணப்படும் இதன் வால் தன்மீது வந்து உட்காரும் பூச்சிகளை விரட்ட பயன்படுத்துகிறது.
Leaf tailed gecko
இலை போன்று இருக்கும் இதன் வால் இலைகளோடு இலையாக மறைந்து தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க பயன்படுகிறது.
சுறா மீன்
சாட்டை போல் காணப்படும் இதன் வால் உடலைவிட நீளமானதாக இருக்கும். இதன்வால் எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
முதலையின் பற்களை சுத்தம் செய்யும் பறவை எகிப்தின் plovers பற்றித் தெரியுமா?.
எகிப்தின் ப்ளோவெர்ஸ் என்ற பறவை முதலை பறவை எனவும் அழைக்கப்படுகிறது. இது வினோதமான பறவையாகக் கருதப்படுகிறது. இது சஹாரன் ஆப்ரிக்க பகுதிகளில் காணப்படும்.
இது மணலில் முட்டையிடும். முதலையின் பற்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமிசம்தான் இதற்கு ஆகாரமாகும். முதலையும் தன் பற்கள் சுத்தமாவதால் இந்தப் பறவையை ஒன்றும் செய்யாமல் பற்களைக் காட்டும். முதலையின் டூத் ஃப்ரெஷ்ஷாக இது செயல்படும் வினோத பறவையாகும்.