மனிதனை அச்சுறுத்தும் 10 பயங்கரமான பறவைகள்!

மனிதர்களை அச்சுறுத்தும் உலகின் பயங்கரமான பறவைகள் எவை? அவற்றின் ஆபத்தான குணங்கள் மற்றும் விவரங்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
பயங்கரமான பறவைகள் | dangerous birds
பயங்கரமான பறவைகள் | dangerous birdsImage credit: Gemini AI

உலகில் பத்து பயங்கரமான பறவைகள் மனிதனை தாக்குகின்றன. அவை குறித்து இப்பதிவில் காண்போம்..!

1. லாமெர் கியர் (Lammergeier):

பயங்கரமான பறவைகள் | Lammergeier
பயங்கரமான பறவைகள் | Lammergeier

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மலைப்பகுதியில் காணப்படும் கழுகு. இது எலும்புகளையே உண்ணும். இவை இரைகளை பிடித்து மேலிருந்து கீழே போட்டு அதை துண்டாக்கி உண்ணும் அளவிற்கு பயங்கரமானது.

2. சதர்ன் காசோவரி (Southern Cassowary):

பயங்கரமான பறவைகள் | Southern Cassowary
பயங்கரமான பறவைகள் | Southern Cassowary

இவை மனிதர்களை கொல்லக்கூடியது‌. பறக்க முடியாத இதை ஆஸ்திரேலியா, ந்யூகினியா பகுதிகளில் காணலாம். இதன் கால்கள் பெரிதாகவும் வலுவாகவும் இருக்கும். பெரிய அளவில் உருவம் உடையது‌. இது உதை விட்டால் அபாயகரமானதாக இருக்கும்.

3. கிரேட் கிரே ஷ்ரைக் (Great Grey Shrike):

பயங்கரமான பறவைகள் | Great Grey Shrike
பயங்கரமான பறவைகள் | Great Grey Shrike

இது மிக குரூரமானது. இதை கசாப்புகடைப் பறவை என்று கூறுவார்கள். இதற்கு மிக வலுவான அலகு மற்றும் நகங்கள் உண்டு. இதன் உணவுப் பழக்கம் தனித்தன்மையானது. உணவு கிடைத்ததும் அதை முட்புதரில் வைத்து பிறகு தனக்கு வேண்டியபோது உண்ணும்.

4. Harpy eagle (ஹார்பி கழுகு):

பயங்கரமான பறவைகள் | Harpy eagle
பயங்கரமான பறவைகள் | Harpy eagle

மழைக்காடுகள் ஆன மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் இதைக் காணலாம். இதைக் காண்பது மிக அரிதாகவே இருக்கிறது. பாலூட்டிகள் மற்றும் குரங்குகளை இது இரையாக உண்ணும். இதன் இறகு 2 மீட்டர் நீளம் இருக்கும். ஒருகரடியின் கால் போன்று இதன் கால்கள் அகலமாக இருக்கும். மிக ஆபத்தான பறவையாக கருதப்படுகிறது.

5. க்ரீன் ஹெரான் (Green Heron):

பயங்கரமான பறவைகள் | Green Heron
பயங்கரமான பறவைகள் | Green Heron

இந்த பறவை நீர்நிலைகளில் மிகப் பொறுமையாக தண்ணீரிலிருந்து மீனைக் காணும் வரை காத்திருக்கும். மீன்களை ஈர்க்க இலைகள் குச்சிகளை இது பயன்படுத்தும். இது புத்திசாலித்தனமானதாகவும், அதேசமயம் ஆபத்தான பறவை இனமாகவும் கருதப் படுகிறது.

6. க்ரௌன்டு கழுகு (Crowned eagle):

பயங்கரமான பறவைகள் | Crowned eagle
பயங்கரமான பறவைகள் | Crowned eagle

இது ஆப்ரிக்காவில் சகஜமாகக் காணப்படுகிறது‌. இது சிறு குழந்தைகளை குறிவைத்துத் தாக்கிக் கொல்லும்‌. மிகவும் ஆபத்தான பறவை இனம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் கழுகுகள் மனிதர்களை தாக்கிக் கொல்வது மிக சகஜமாக இருந்துள்ளது‌.

இதையும் படியுங்கள்:
உலகில் இரண்டு இடங்களில் மட்டுமே வாழும் நிஜ அலிகேட்டர் முதலைகள்… ஏன் இப்படி?
பயங்கரமான பறவைகள் | dangerous birds

7. ஹூடட் பிட்டோஹுய் (Hooded Pitohui):

பயங்கரமான பறவைகள் | Hooded Pitohui
பயங்கரமான பறவைகள் | Hooded Pitohui

சில பறவைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள விஷத்தனமான தன்மையை பெற்றிருக்கும். ந்யூகினியாவின் ஆராய்ச்சியின் படி இந்தப் பறவையைத் தொட்டால் எரிச்சலும் மரத்துப் போகும் தன்மையும் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் இறகுகளில் ஒருவகை விஷத்தன்மை உள்ளதாக அறியப்படுகிறது.

8. செக்ரடரி பறவை:

பயங்கரமான பறவைகள் | Secretary bird
பயங்கரமான பறவைகள் | Secretary bird

ஆப்ரிக்கா சவன்னா பகுதிகளில் இதைக் காணலாம். மிகப் பெரிய கால்களும் தலையில் கொண்டை போன்ற அமைப்பும் பெற்றது‌. பாம்பு கீறி மற்றும் பெரிய வகை விலங்கினங்களை வேட்டையாடும். இது உதை விட்டால் எந்த இனமும் அழிந்து விடும்‌. அதிபயங்கரமான பறவை இனமாக கருதப்படுகிறது.

9. பெரெக்ரைன் ஃபால்கன் (Peregrine Falcon)

பயங்கரமான பறவைகள் | Peregrine Falcon
பயங்கரமான பறவைகள் | Peregrine Falcon

உலகிலேயே மிக ஆபத்தான பறவையாக இது கருதப்படுகிறது. இது பெரும் அளவில் பறவைகளை உண்ணும் இனமாக அறியப்படுகிறது‌. முக்கியமாக வாத்து மற்றும் புறாக்களை அழித்துவிடுகிறது‌. 300 மைல் வேகத்தில் பறந்து இது இரையைக் தேடுகிறது‌.

10. வாம்பயர் க்ரௌண்ட் ஃபின்ச் (Vampire Ground Finch):

பயங்கரமான பறவைகள் | Vampire Ground Finch
பயங்கரமான பறவைகள் | Vampire Ground FinchImage credit: birds of the world

காலபகேஸா குழுக்களில் இவை காணப்படுகிறது. இது டார்வின் பின்ச் குடும்பத்தைச் சேர்ந்தது. இவை சாதாரணமாக சைவ பறவையாக இருக்கும்‌. ஆனால் மிகவும் வறட்சியான காலங்களில் கடலவாழ் விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும். இது தன் வலிமையான அலகினால் இரைகளை குத்தி ரத்தத்தை குடிக்கும்.

இதையும் படியுங்கள்:
மாலிஃபௌல் பறவை! முட்டையை அடைகாக்க இன்குபேட்டர் தயாரிக்கும் ஆஸ்திரேலிய பறவை!
பயங்கரமான பறவைகள் | dangerous birds

இந்தப் பதிவை முழுமையாகப் படிப்பதன் மூலம் உலகின் பயங்கரமான பறவைகள் பற்றிய விழிப்புணர்வைப் பெற்று, இயற்கையின் விசித்திரமான மற்றும் ஆபத்தான உயிரினங்களை எதிர்கொள்ளும் போது உங்களை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான எச்சரிக்கை உணர்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com