

பொதுவாக பறவைகள் தங்கள் முட்டைகளைத் தன் உடலின் வெப்பதைக் கொண்டே அடைகாக்கும் என்ற விதியை முற்றிலுமாக மாற்றி எழுதுகிறது ஆஸ்திரேலியாவின் மாலிஃபௌல் (Malleefowl) பறவை! இயற்கையின் ஆச்சரியம் நிறைந்த இந்த மாலிஃபௌல் பறவை இன்குபேட்டரை எவ்வாறு உருவாக்குகிறது? அதன் வியக்கத்தக்க தெர்மல் ரெகுலேஷன் ரகசியங்கள் என்னென்ன? வாருங்கள் இந்தக் கட்டுரையில் முழுமையாகப் படிக்கலாம்!
பொதுவாக பறவைகள் தங்கள் முட்டைகளை தாங்களே அடைகாக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மாலிஃபௌல் பறவை முட்டையை அடைகாக்க ராக்ஷச இன்குபேட்டரரைத் தயாரிக்கிறது. இது இன்குபேட்டரைத் தயாரிக்கும் விதம் சுவாரசியமானது.
மாலிஃபௌல் பறவை இனத்தில் முட்டை இட்ட பிறகு குஞ்சுகளை அவை பாதுகாக்காது. ஆனால் முட்டைகளை அடைகாக்க ராக்ஷச இன்குபேட்டரை இப்பறவை தயாரிக்கும். அந்த விதத்தில் ஒரு சிறந்த கட்டட பொறியாளர் போல் இது செயல்படுகிறது. மெகாபோட் வகையைச் சேர்ந்த மாலிஃபௌல் பறவைகள் நீண்ட கால்களைச் பெற்றிருக்கும்.
இவை தரையில் வாழ்கின்றன. இது மிக வறண்ட சூழலுக்குத் கூட வழங்கப்பட்டிருக்கும்.
இப்பறவைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை இலைகள், பழங்கள், பூக்கள், கொட்டைகள் பூச்சிகள் மற்றும் விதைகளிலிருந்து பெறுகின்றன. இப்பறவைகள் அதிகமாக மத்திய ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படுகின்றன.
இவ்வகைப் பறவைகள் மற்ற பறவைகளைக் போல் அடைகாக்காமல் முட்டைகளை அடைகாக்க பெரிய இன்குபேட்டர்களை தயாரிக்கின்றன. இவை முட்டையை அடைகாக்காததற்குக் காரணம் இவற்றால் அடைகாக்கும் அளவிற்கு வெப்பத்தைத் தரமுடியாது.
முட்டைகள் சரியான வெப்பத்தில் இருக்கவேண்டும். இவை தயாரிக்கும் இன்குபேட்டர் 9 டிரிலிருந்து 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கும். இவை எப்போதும் செப்டம்பரில் இன்குபேட்டர் தயாரிக்க ஆரம்பிக்கும். இன்குபேட்டர் தயாரிக்க மால்லீபௌல் ஆண் மற்றும் பெண் இனம் இரண்டும் சேர்ந்து மூன்றடி ஆழம் மற்றும் பத்தடி நீளமுள்ள குழியை முதலில் தயாரிக்கிறது. ஆண்பறவை குழியில் இலை மற்றும் புற்களை சேகரிக்கிறது. பிறகு மழை பெய்யும் போது இக்குழி ஈரப்பதத்தில் இருக்கும்போது முட்டையை அதில் வைப்பதற்கான அறையை தயாரிக்கிறது. இதில் உள்ள புல் இலைகள் மழைநீரில் மக்கி ஒரு நல்ல வெப்ப நிலையை உருவாக்குகிறது. இப்போது இயற்கையிலேயே வெப்பமான இன்குபேடர் தயார் ஆகிவிட்டது.
இன்குபேட்டரில் எப்படி முட்டைகளை இடுகின்றன?
பெண் மாலிஃபௌல் பறவைகள் செப்டம்பரில் இருந்து பிப்ரவரி வரை முட்டைகளை இடுகின்றன. இவை சுமார் 15 லிருந்து 30 வரை முட்டைகள் இடுகின்றன. பெண் பறவைகள் முட்டை இட தயாரான நிலையில் இருக்கும்போது குழியில் உள்ளே இருக்கும் மண்ணை அகற்றி வைக்கிறது ஆண்பறவை. பெண் பறவை முட்டையிட்டு பிறகு அது முட்டைகளை மண் போட்டு மூடி விடுகிறது. இந்த இன்குபேட்டரின் ஆழம் சுமார் 16 அடிகள் வரையில் இருக்கும்.
இந்த இன்குபேட்டரில் முட்டைக்குள் தேவையான அதிக மற்றும் குறைவான வெப்பம் இரண்டும் கிடைக்கிறது. ஆண்பறவை இந்த வெப்பத்தை எப்போதும் கண்காணிக்கும். அதனாலேயே ஆண் மாலிஃபௌல் பறவைகளை தெர்மாமீட்டர் பறவை என்று அழைக்கிறார்கள். முட்டைகள் நன்றாக குளிர்ச்சி நிலையை அடைந்த பிறகு மேலே இருக்கும் மணலை ஆண்பறவை சுரண்டுகிறது. முட்டைகள் குஞ்சு பொரிக்கும் அளவிற்குத் தேவையான வெப்பத்தைப்பெற்ற பிறகு மேலே இருக்கும் மணலை அகற்றுகிறது. மதிய வேளையில் திரும்பவும் மணலை போட்டு முட்டைகளை பாதுகாப்பான இரவு வெப்பத்தில் வைக்கிறது.
வெப்பநிலையை நன்றாக கவனித்து இன்குபேட்டரரை பாதுகாக்கும் மால்லிஃபௌல் பறவையின் தெர்மல் ரெகுலேஷன்கண்காணிப்பு மிகவும் வியக்கத்தக்க விஷயமாகும்.
ஆண்பறவை ஒருநாளைக்கு 5 மணிநேரத்திற்கு மேல் 1800 பவுண்ட் மணலை பயன்படுத்தி இன்குபேட்டரைக் காக்கிறது. இந்த இன்குபேட்டிங் சமயம் என்பது சுமார் 50 லிருந்து 100 நாட்கள் வரை இருக்கும். குஞ்சுகள் பொரிந்தபிறகு அவை தங்கள் வலுவான கால்களால் மண்ணைவிட்டு வெளியே வருகிறது. வெளியே வந்ததும் ஒரேநாளில் அவை பறந்து சுதந்திரமாக செயல்பட ஆரம்பிக்கின்றன.
பிறந்த 15 மணிநேரத்திலேயே தாய் தந்தை பறவை உதவி இன்றி சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலையில் மாலிஃபௌல் பறவைகள் இருப்பது ஆச்சர்யமான விஷயம்.
சிறந்த பொரியியற் வல்லுனர் போன்று இயற்கையான இன்குபேட்டரை முட்டைகளுக்காகத் தயாரிக்கும் மாலிஃபௌல் பறவை ஒரு அதிசயமான பறவை இனமாக அடையாளம் காணப்படுகிறது.
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றான மாலிஃபௌல் பறவையின் வாழ்வியல் ரகசியங்களையும், விலங்கு உலகின் அசாத்திய பொறியியல் திறமையையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.