அதிக விஷமுள்ள 10 பாம்புகள்: இந்த பாம்புகள் கடித்தால் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான்!

The most venomous snakes
The most venomous snakes
Published on

ர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகள் காண்பவர் அனைவரையும் அச்சுறுத்தும். சில பாம்பின் விஷம் உடலில் ஒரே நிமிடத்தில் பரவி உயிரையே கொல்லும் அபாயம் கொண்டது. அந்த வகையில் அதிக விஷம் உள்ள 10 பாம்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சுருட்டை விரியன்: மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் காணப்படும் ஒருவகை பாம்பு இனமான 'சா ஸ்கேல்டு வைப்பர்' என்று அழைக்கப்படும் சுருட்டை விரியன் பாம்பு அதிக விஷம் கொண்ட பாம்புகளில் முதலிடத்தில் இருப்பதோடு ஆக்ரோஷமான இந்த பாம்பு கடியினால் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த பாம்பு கடித்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.

2. இன்லாண்ட் தைபான்: மத்திய ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் கொடிய நஞ்சு நிறைந்த பாம்பான இன்லாண்ட் தைபான் எலிகளை வேட்டையாடும் என்று நம்பப்படுகிறது. இந்த பாம்பு பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடங்களில் இருந்து விலகி தொலைதூரத்தில் வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
அதிசய அசுரன்: ராட்சத பசிபிக் ஆக்டோபஸின் வியக்க வைக்கும் ரகசியங்கள்!
The most venomous snakes

3. பிளாக் மாம்பா: உலகிலேயே மிக விரைவாக ஊர்ந்து செல்லும் பாம்பினம் என்று அறியப்படும் பிளாக் மாம்பா என்ற பாம்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் அதிக விஷம் கொண்டதாக இருக்கிறது. மனிதர்களிடமிருந்து விலகி இருக்கும் பிளாக் மாம்பா பாம்புகள், ஆபத்து எனத் தெரிந்தால் மின்னல் வேகத்தில் தாக்கக்கூடிய திறன் பெற்றுள்ளன. இந்தப் பாம்பு கடித்தால் அரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஒருவர் இறப்பதற்கு 100 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

4. கண்ணாடி விரியன்: அதிக இறப்புகளை ஏற்படுத்தும் பாம்புகள் என்று அறியப்படும் கண்ணாடி விரியன் பாம்புகள் கடித்தால் கடுமையான வலி ஏற்படும். இந்தியாவில் ஏற்படும் 43 சதவிகித பாம்பு கடி சம்பவங்கள் கண்ணாடிவிரியன் பாம்புகளால் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. ராட்டில் ஸ்நேக்: ராட்டில் ஸ்நேக் பாம்பின் விஷத்தில் நியூரோடாக்சின்கள் உள்ளதால் இந்தப் பாம்புகள் ஒருவரை கடிக்கும்போது அவருக்கு  தசை முடக்கம், சுவாசக் கோளாறு மற்றும் உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றன.

6. நாகப்பாம்பு: இந்தியாவில் இருக்கும் ஆபத்தான பாம்பான நாகப்பாம்பு, அதிக விஷம் மற்றும் அதிக ஆக்ரோஷம் கொண்ட பாம்பு இனமாகும். இந்த நாகப் பாம்புகளின் முக்கிய உணவு எலிகள். மனித வாழ்விடங்களில் எலிகள் அதிகம் காணப்படுவதால் தனது உணவைத் தேடி வரும் நாகப்பாம்பு மனிதர்களை அடிக்கடி சந்தித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
பூமியின் உறைந்த கண்டம் அண்டார்டிகா: நாம் அறியாத உண்மைகள்!
The most venomous snakes

7. பஃப் அட்டர் பாம்பு: விரியன் பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்காவில் காணப்படும் பஃப் அட்டர் பாம்பு, ஆப்பிரிக்க பாம்புகளிலேயே மிகவும் கொடியது ஆகும். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கும் இந்த வகை பாம்புகள் தனது உடலை காற்றில் தள்ளி, சீறும் சத்தத்தை எழுப்புமாம்.

8. டெத் ஆடர்: ஆஸ்திரேலியாவில் காணப்படும் கொடிய விஷம் கொண்ட டெத் ஆடர் பாம்புகள் இலைகளுக்கு இடையில் மறைந்து கொண்டு, அதன் இரை வரும்போது தாக்குகிறது. இந்த பாம்புகளாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9. ராஜ நாகம்: இந்திய துணை கண்டத்தில் பெரும் கலாசார முக்கியத்துவத்தை பெற்று இந்திய நாகத்தைப் போலவே உள்ள ராஜநாகம் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

10. ராட்டில் பாம்பு: வட அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான பாம்பாகக் கருதப்படும் ராட்டில் பாம்பின் விஷத்தில் ஹீமோடாக்சின் உள்ளது. ஆகவே, இந்தப் பாம்பு கடித்த உடன் இரத்த சிவப்பணுக்களைத் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுகின்றன.

மேற்கூறிய பாம்புகள் அனைத்தும் அதிக விஷம் கொண்டதாக இருக்கின்றன. மேலும், எந்த வகை பாம்பாக இருந்தாலும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கூறி பிடிக்க வைப்பதே முறையான வழிமுறையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com