இரத்தம் சிவப்பு நிறத்தில் இல்லாமல் வெவ்வேறு நிறங்களில் இருக்கும் 10 உயிரினங்கள்!

Organisms
Organisms
Published on

பொதுவாக இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், கீழ்க்கண்ட பத்து உயிரினங்களி இரத்தம் வேறு நிறங்களில் இருக்கும்.

1. ஆக்டோபஸ்

இதன் ரத்தத்தில் ஹீமோசயானின் என்ற பொருளால் இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். ஹீமோசயானின் ஹீமோக்ளோபினை விட மிகவும் சக்தி வாய்ந்தது.  இதனுடைய மூன்று இதயங்கள் நீல நிற இரத்தத்தை உடல் முழுவதும் பரவச் சேர்கிறது. இதனால் மிக குளிரான சீதோஷ்ண நிலையிலும் ஆக்டோபஸ் இயங்க முடிகிறது.

2. Horse shoe crab

இதன் இரத்தத்திலும் ஹீமோசயானின் இருப்பதால், இதன் இரத்தமும் நீல நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இதன் இரத்தத்தில் Limulus Amorbovyte  Lysate (LAL) என்ற பொருள் பாக்டீரியா எதிர்ப்பாக உள்ளதால் இதன் இரத்தம் மருத்துவத்துவ  ஆராய்ச்சி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 450 மில்லியன் வருடங்களாக இந்த உயிரினம் இருந்து வருகிறது. 

3. Peanut Worm

கடலுக்கடியில் வாழும் இதன் இரத்தத்தில் hemerythnin என்ற ஊதா கலர் பொருள் உள்ளதால் இதன் இரத்தம் ஊதா நிறத்தில் இருக்கும். இதன் இரத்த நிறத்தால் இது வித்தியாசமாகக் கருதப்படுகிறது. 

4. Icefish

இந்த உயிரினத்துக்கு சிவப்பு இரத்த அணுக்கள் கிடையாது. இது ஆக்சிஜன் அதிகம் நிறைந்த தென் கடல்களில் வாழும். இதன் இரத்தம் வெள்ளையாக இருக்கும்.  இந்த உயிரினம்  வெளியிடும் புரதங்கள் இவைகளை கடுங்குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

5. Sea cucumber

இந்த உயிரினத்தின் இரத்தத்தில் அதிக அளவு வனேடியம் என்ற பொருள் இருப்பதால் இதன் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  இவைகளுக்கு மூளைப் பகுதி இல்லாவிட்டாலும் கடலுக்குள் வாழும் சக்தி படைத்தது.

இதையும் படியுங்கள்:
கண்ணைப் பறிக்கும் ஊதா நிறத்தில் 10 பறவைகள்!
Organisms

6. Green blooded skink

ஐஸ்லாண்ட் பகுதியில் வாழும் இவைகளின் இரத்தம் பச்சை நிறத்தில் இருக்கும் இந்த நிறத்துக்குக் காரணம் இரத்ததில் உள்ள பில்வெர்டின் என்ற பொருள். ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

7. Spiders

இதன் இரத்தத்திலும் ஹீமோசயானின் உள்ளதால் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதன் இரத்தம் இதற்கு கூடு காட்டுவதிலும் உபயோகமாக உள்ளது. 

8. Leeches

இதன் இரத்ததில் chlorocruonin உள்ளதால் பச்சை நிறத்தில் இரத்தம் காணப்படுகிறது. இதன் மூலம் ஆக்சிஜன் குறைவாக உள்ள இடங்களிலும் இது வாழும்.

9. Brachiopods

மிகவும் அரிதாகவே காணப்படும் இதன் இரத்தம் ஊதா நிறத்தில் இருக்கும். இவைகளுக்கு கனமான ஓடு இருக்கும். 

10. Beetles

இவைகளுக்கு இரத்தம் இல்லையென்றாலும் hemolymph என்ற திரவம்  உடல் அனைத்துக்கும் செலுத்தப்படுகிறது. இந்த திரவம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
குறைந்த நாட்கள் மட்டுமே வாழும் உயிரினங்கள்!
Organisms

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com