கண்ணைப் பறிக்கும் ஊதா நிறத்தில் 10 பறவைகள்!

பர்ப்பிள் நிறத்தில் கண்ணைப் பறிக்கும், கொள்ளை கொள்ளும் அழகில் காட்சிதரும் 10 பறவைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
10 purple colour birds
10 purple colour birds
Published on

உலகமெங்கும் லட்சக்கணக்கான பறவை இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பறவைகளும் ஒவ்வொரு அழகை கொண்டுள்ளது. சில பறவைகளில் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது. அந்த வகையில் பர்ப்பிள் நிறத்தில் கண்ணைப் பறிக்கும், கொள்ளை கொள்ளும் அழகில் காட்சிதரும் 10 பறவைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

European Starling

நல்ல பர்ப்பிள் நிறத்தில் இருக்கும் இதன் அலகு நீண்டு இருக்கும். சிறிய வால் இருக்கும். கருப்பாக பார்வைக்குத் தெரிந்தாலும் இது பர்ப்பிள் நீலம் பச்சை நிறங்களில் தெரியும். ஐரோப்பா ஏசியா மற்றும் ஆப்ரிக்காவில் காணப்படும் இது கோடை காலத்தில் காணப்படும்.

Purple Martin

கொக்கி போன்ற அலகுகள். பரந்த மார்பு, மற்றும் பெரிய இறகுகள் கொண்ட இவை கானா தென் அமெரிக்காவில் குளிர் காலங்களில் காணப்படும். இது அடர்ந்த நிறமாகையால் கருப்பு போன்று தெரியும். ஆனால் வயலெட் நிறமே அப்படி காணப்படுகிறது. வயல் வெளி மற்றும் பார்க்குகளில் காணப்படும்.

Purple Breasted Cotinga

மீடியம் சைசில் காணப்படும் இதன் தலை, சிறிய மார்பு, நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். ஆண் பறவை வண்ணமயமாக இருக்கும். பெண் பறவை ப்ரௌன் கலரில் இருக்கும். இவை பிரேசில், கொலம்பியா, பெரு, வென்சுவெலா மற்றும் சூரிநேம் பகுதிகளில் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
லயர்பேர்ட்: ஒலிகளை பிரதிபலிக்கும் அதிசய பறவை கலைஞன்!
10 purple colour birds

Violet Starling

இதில் ஆண் பறவைகள் கீழே வெண்மையாகவும் மேற்புறம் பர்பிளாகவும் இருக்கும். பெண் பறவை ப்ரௌன் நிறமாக இருக்கும். ஆப்ரிக்க காடுகளில் காணப்படும்.

Purple Honeycreeper

இவை பர்பிள் நிறத்தில் வளைந்த அலகுடன் காணப்படும் . இவை தென் அமெரிக்க காடுகளில் காணப்படும். கோகோ மரங்களிலும் காணலாம்.

Purple Grenadier

ஆண் பறவைக்கு தலை சிவப்பாகவும் கண்களைச் சுற்றி நீலமாகவும் காணப்படும். பர்ப்பிள் நீலம் கலந்த நிறமாக இருக்கும். இதன் வால் கருப்பாகவும் அலகு சிவப்பு நிறத்திலும் இருக்கும். பெண் பறவைகள் ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இவை கென்யா, சோமேலியா, ஆப்ரிக்கா, சூடான், எத்தியோப்பியா மற்றும் டான்சேனியாவில் காணலாம்.

இதையும் படியுங்கள்:
‘தொங்கும் பை’ அலகு கொண்ட ‘கூழைக்கடா’ பறவை
10 purple colour birds

Varied Bunting

பாடும் பறவை. நீளமான வாலும் முக்கோண வடிவான அலகும் காணப்படும். இதன் முகம் கருப்பாகவும் கண்ணைச் சுற்றி சிவப்பு வளையமும் காணப்படும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் காணப்படும். அடர்ந்த காடுகளில் இவை காணப்படும்.

Costa's Hummingbird

சிறிய பறவையான இதற்கு சிறிய வால் இருக்கும். இதன் தொண்டைப்பகுதி மீசை போன்று காணப்படும். ஆண் இனம் பச்சை பர்ப்பிள் நிறம் கலந்து இருக்கும். அமெரிக்கா மெக்சிகோ பகுதியில் காணப்படும்.

Purple Gallinule

இந்த பறவைக்கு கால்கள் நீளமாக இருக்கும். முக்கோண தடிமனான அலகும், குட்டையான வாலும் இருக்கும். வளர்ந்த பறவைகள் நல்ல மார்பிள் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். அலகு சிவப்பாகவும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். அமெரிக்கா மெக்சிகோ பகுதிகளில் காணப்படும். குளங்கள் ஏரிகள் மற்றும் வயல்களில் காணலாம்.

Violet Sabrewing

ஹம்மிங் பறவையான இது நீளமான வால் மற்றும் நீளமான அலகுடன் காணப்படும். கண் மெட்டாலிக் வயலெட் நிறத்தில் இருக்கும். அமெரிக்கா மெக்சிகோவில் காணலாம். வாழைத் தோட்டங்களிலும் காணலாம்.

இதையும் படியுங்கள்:
இமயமலையின் உயரத்துக்கு ஈடாக பறக்கும் பறவை!
10 purple colour birds

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com