
பறவைகள் பல விதம். அவற்றில் ஒவ்வொன்றும் ஒருவிதம். நம் நாட்டில் பல்வேறு வகையான பறவை இனங்கள் உள்ளன. அவற்றுள் கூழைக்கடா எனும் பறவை பற்றி அறிந்து கொள்வோம்.
கூழைக்கடா (Pelican) என்பது கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா என அழைக்கிறார்கள். இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை ஐயுசிஎன் (ICUN) சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.
வகைகள் :
இந்தியாவில் புள்ளிவாய்க் கூழைக்கடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூவகை கூழைக்கடா காணப்படுகின்றன. ஸ்பாட் பில்டு பெலிக்கன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கருப்பு புள்ளிகளையுடையது.
கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா 125–152 செ.மீ. நீளமும் 4.1 – 6 கி.கி. எடையும் உடையவை. தொங்கு பை இளஞ்சிவப்பாகவோ ஊதா நிறத்திலோ இருக்கும். தாடையின் மேல்பகுதியில் புள்ளிகள் தென்படும். பளிச்சென்ற நிறமில்லாததும் பழுப்பு நிறமும் இவற்றை மற்ற கூழைக்கிடாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
தால்மேசியன் கூழைக்கடா என்பதே இவ்வினத்தில் பெரியதெனக் கருதப்படுகிறது. இது 15 கிலோ எடை வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் 11.5 அடி அகலம் இருக்கும்.
உடலமைப்பு :
பெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை கூழைக்கடாக்கள்; அவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்தது. முன்பக்கம் கரண்டி போல் அகன்றும், தட்டையான மேல் அலகு கீழ்அலகை மூடி போல் மூடியிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும்.
சங்க இலக்கியங்களில் குருகு, கொய்யடி நாரை, வண்டானம் என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
பெலிப்பனஸ் என்ற இனப்பெயர் பிலிப்பைன்ஸ் தீவில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
இந்தப் பறவைகள் கட்லா, ரோகு, திலேப்பியா போன்ற மீன்களையே முக்கிய உணவாக உண்ணுகின்றன.
இவை இந்தியா, இலங்கை, கம்போடியா போன்ற நாடுகளில் வாழ்கின்றன.
பொதுவாக இப்பறவைகளின் பருமன் அதிக அளவில் இருப்பதால் (5 கிலோ) கூட்டமாக கூடு கட்டும் கிளைகள் எடை தாங்காமல் முறிந்து விழுகின்றன.
இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ.
தெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து இந்தியா உள்பட கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.