ஃபெங்சுயி வாஸ்து மூலம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 10 வகை ஜேட் செடிகள்!

Jade plants that bring luck
Jade plants that bring luck
Published on

பொதுவாக, ஜேட் செடிகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தைத் தரக்கூடியதாகும். அந்த வகையில் பத்து வகை ஜேட் செடிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Crassula ovata (classic jade plant): இதன் முட்டை வடிவமும், மரம் போன்ற அமைப்பும் வீட்டிற்கு செல்வச் செழிப்பையும் மேன்மையையும் கொண்டு வரக்கூடியது. உங்கள் வீட்டு முகப்பில் இந்தச் செடியை வைப்பதன் மூலம் அதிக பண வரவை அதிகரிக்கச் செய்யும். நேர்மறை சக்திகளை இது அதிகமாக்கும்.

Golden jade plant: இதன் கண்ணைக் கவரும் பச்சை இலைகள் மற்றும் இலைகளின் ஓரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பார்க்கவே அழகாக இருக்கும். இது இருக்கும் இடத்தை அமைதியாகவும், ஒருங்கிணைக்கும் பண்பையும் பெற்றது. அழகை மெருகூட்டக் கூடியது.

Gollum jade: நீண்ட ட்யூப் போன்ற இலைகளைக் கொண்ட இது, எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை கொண்டு வரக்கூடியது. சிறிய இடத்தில் கூட இதை வைக்கலாம். இது வறண்ட பகுதியிலும் வளரக்கூடியது. அமைதியான சூழலை ஏற்படுத்தக் கூடியது.

இதையும் படியுங்கள்:
கேரள யானைகள் 'சிக்ஸ் பேக்குடன்' ஜொலிக்க... நம்மூர் யானைகள் ஏன் இப்படி? கசக்கும் உண்மை!
Jade plants that bring luck

Hobbit jade: இது சந்தோஷத்தை வரவழைக்கக் கூடியது. கொல்லம் ஜேட் போலவே இருந்தாலும், இதன் இலைகளின் நுனிகள் உட்பக்கமாக வளைந்து இருக்கும். இதை நுழைவாயில் மற்றும் ஜன்னல்களில் வைப்பதன் மூலம் செல்வமும் சந்தோஷமும்  அதிகமாகும். நேர்மறை சக்திகளை அதிகரிக்கச் செய்யும்.

Tricolor jade plant: பச்சை, வெள்ளை மற்றும் பிங்க் நிறங்களில் இலைகள் உள்ள இது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். ஃபெங்சுயி வாஸ்துவின்படி பல நிறங்களில் இலைகள் உள்ள செடிகள் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைக்கக்கூடியதாக அறியப்படுகிறது. இதை வைப்பதன் மூலம் நேர்மறையான உரையாடல்கள் ஊக்குவிக்கப்படும்.

Silver dollar jade: நீல நிறம் மற்றும் சில்வர் நிறமுடைய இது செல்வம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. மேலும், இது தெளிவான சிந்தனையையும் அமைதியையும் ஊக்குவிக்கக் கூடியது.

Dwarf jade plant: இதன் சிறிய மற்றும் ஓவல் வடிவ இலைகள் அடர்த்தியாக வளரும்.  இதை சமையலறை மேடை, டேபிள் மீது மற்றும் படுக்கை அறை டேபிள் மீதும் வைக்கலாம். இது நேர்மறை சக்தி மற்றும் அமைதியை ஊக்குவிக்கக் கூடியது.  பார்க்க அழகானது.

இதையும் படியுங்கள்:
நொச்சி தாவரத்தில் இத்தனை வகை நன்மைகளா?
Jade plants that bring luck

Red Horn Plant: நல்ல அடர்த்தியான பச்சை இலைகள் ட்யூப் வடிவத்துடன் நுனியில் சிவப்பாகவும் இருக்கும். இது தான் இருக்குமிடத்தை பாதுகாப்பாக வைக்கக்கூடியதோடு, நல்ல வலுவையும் தரக்கூடியது. நம் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், நம்மை ஊக்குவிக்கவும் இதை வீடு மற்றும் அலுவலகங்களில் வைக்கலாம்.

Miniature jade plant: இதன் பச்சை இலைகள் நல்ல நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்கச் செய்யும். இதை ஜன்னல் அருகே வைப்பதால் நேர்மறை சக்தியை இன்னும் அதிகமாக்கும். வீட்டின் அழகை மெருகூட்டக் கூடியதாகும்.

String of buttons: மற்ற ஜேட் வகைக்கு அழகாக இருக்கும். இது சந்தோஷத்தை வரவழைப்பதோடு, நாணயம் வடிவில் உள்ள இதன் இலைகள் சந்தோஷத்தை வரவழைக்கக் கூடியது. இதை தொங்க விடுவது மிகவும் அழகாக இருக்கும். இது படைப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com