
நட்சத்திர மீன்கள் என்பது முதுகெலும்பில்லாத ஒரு வகை உடல் உயிரினமாகும். சுமார் 1,900 வகையான நட்சத்திர மீன்கள் கடற்பரப்பில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. உலகின் அனைத்து பெருங்கடல்களிலும், சூடான, வெப்பமண்டலங்கள் முதல் குளிர், துருவப் பகுதிகள் வரை இவை காணப்படுகின்றன. சில வகை நட்சத்திர மீன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
மிட்கார்டியா ஸாண்ட்ரஸ் (Midgardia xandaros): உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர மீன் இனமான இது, நான்கு அடி நீளத்துடன் காணப்படும். இது கடலின் மிக ஆழமான பகுதியில் காணப்படுவதாக இருந்தால்கூட பெரிய அளவில் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சன் ஃப்ளவர் சீ வாட்டர் (Pycnopodia helianthoides): இது மிகவும் வேகமாக நீரில் செல்லக்கூடியது. சுமார் 3.3 அடி நீளமும் 5 கிலோ எடையுடன் கூடியதாக உள்ளது. இதற்கு 24 கைகளும் 15,000 சிறிய ட்யூப் போன்ற கால்களும் உள்ளன. இது தண்ணீரில் மிக விரைவாக நீந்தும் பண்பு பெற்றது.
த்ராமிடியா கடாலை (Thromidia catalai): இந்த வகை மீன் 70 செ.மீ. சுற்றளவு மற்றும் 6 கிலோ எடையும் கொண்டதாகும். இது மிக மெதுவாகச் செல்லும். இதன் உடல் எடை அதிகமாக இருப்பதால் மெதுவாகவே செல்லக்கூடியது. இது கடல் ஆழத்தில் காணப்படும்.
த்ராமிடியா கைகாஸ் (Thromidia gigas): இந்த வகை நட்சத்திர மீன் 23 பவுண்ட் எடை கொண்டதாகும். இதன் பெரிய அமைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. ட்ராபிகல் கடல்களில் காணப்படும் இந்த வகை மீன் ராட்சச வகை எனக் கருதப்படுகிறது.
லுயிடியா சுபர்பா (Luidia superba): ஐந்து கைகளை உடைய இந்த வகை நட்சத்திர மீன்கள் சுமார் 40 செ.மீ சுற்றளவு இருக்கும். நீண்ட கைகளுடன் தனித் தன்மையோடு விளங்கும் இவற்றை மண் நிறைந்த கடல் பகுதியில் அதிகம் காணலாம்.
ஓரியாஸ்டர் ரெடிகுலேடஸ் (Red cushion sea star): கரீபியன் மற்றும் மேற்கு அட்லாண்டிக் பகுதியில் நல்ல நிறத்துடன் சுமார் 50 செ.மீ. அகலம் வளரக்கூடியது. இதன் குஷன் போன்ற உடல் அமைப்பு இதை எதிரிகளிடமிருந்து காக்கிறது. இதன் குஷன் போன்ற உடலமைப்பால் தனித்து விளங்குகிறது.
க்ரௌன் ஆஃப் தார்ன்ஸ் நட்சத்திர மீன் (அகன்தாஸ்டர் பிளான்சி): இந்த வகை நட்சத்திர மீன்களின் உடலில் முட்கள் போன்ற அமைப்பு காணப்படும். இதன் சுற்றளவு சுமார் 80 செ.மீ. இருக்கும். இது பவளப் பாறையை உணவாகக் கொள்வதால் பவளப் பாறைகள் அழிவை சந்திக்கின்றன.
பிளாஸ்டர் ஜைஜான்டியஸ் (Giant sea star): இது சுமார் 60 செ.மீ. சுற்றளவு கொண்டது. இதனால் இது ராட்சச மீன் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு மிக வலுவான ட்யூப் போன்ற கால்கள் உண்டு. இது பசிபிக் கடலில் காணப்படும்.
லூய்டியா மாக்னிஃபிசியா (Luidia magnificia): இதற்கு பல கைகள் உண்டு. மிகப் பெரிய அளவில் காணப்படும். மணல்பாங்கான கடல் பகுதிகளில் அதிகம் காணப்படும். இதன் பெரிய உருவத்தால் சிறப்பாக வேட்டையாடும்.
ப்ரொடோரியாஸ்டெரா நோடோசஸ் (Horned sea star): இதன் உடல் முழுவதும் கத்தி போன்ற அமைப்புகள் இருக்கும். இவை மிகவும் அடர்த்தியாக இருக்கும். பெரிய உடலமைப்பு கொண்டது. இந்திய பசிபிக் கடலில் இவை காணப்படும்.