
இங்கிலாந்தில் 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 200 டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஜுராசிக் காலத்தில், பூமியில் சுற்றித் திரிந்த மகத்தான டைனோசர்ககளின் 200 நீண்ட கால்தடங்களை தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு குவாரி கண்டுபிடித்துள்ளது.
அந்த தடங்கள் சில மெகலோசொரஸுக்கு (MEGALOSARUS) சொந்தமானவை.
கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள தேவார்ஸ் பண்ணை குவாரியில் கேரி ஜான்சன் தனது வாகனத்துடன் குவாரி தரையில் இருந்து களிமண்ணை அகற்றும் போது 'வழக்கத்திற்கு மாறான ஒன்றை' உணர்ந்தார் .
ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு, ஜூன் 2024 இல் கால்தடங்களின் சேகரிப்பைக் கண்டறிய ஒரு வாரம் செலவிட்டது.
ஏறக்குறைய 500 அடி (150 மீ) நீளமுள்ள ஐந்து பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - இது இங்கிலாந்தின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் கால்தட தளமாகும்.
மேலும் குவாரியின் ஒரு பகுதி மட்டுமே இதுவரை தோண்டப்பட்டுள்ளது.
மாமிச உண்ணி மெகலோசரஸ் 1824 ஆம் ஆண்டில் அறிவியல் ரீதியாகப் பெயரிடப்பட்ட மற்றும் விவரிக்கப்பட்ட முதல் டைனோசர்.
பயமுறுத்தும் மெகலோசரஸ் நகரப் பேருந்தைப் போலவே 30 அடி நீளம் கொண்டதாக நம்பப்படுகிறது.
ஒரு மெகலோசொரஸ் இந்த மூன்று கால் தடங்களை விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு 1997 ஆம் ஆண்டுக்கு முந்தைய பகுதியின் கண்டுபிடிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்குக் குவாரி 40 க்கும் மேற்பட்ட கால்தடங்களை வெளிப்படுத்தியது மற்றும் இங்கிலாந்தில் எந்த டைனோசர்கள் சுற்றித் திரிந்தன என்ற யோசனையை ஆராய்ச்சியாளர்களுக்கு நினைக்க வைத்துள்ளது.
ட்ரோன் படங்கள் மற்றும் 3D மாடலிங் நுட்பங்களின் உதவியுடன், கண்டுபிடித்ததாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பூமி விஞ்ஞானி டாக்டர் டங்கன் முர்டாக் சொல்லியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, "இந்தக் கண்டுபிடிப்புகள் அந்த விலங்குகளின் வாழ்க்கையை நமக்கு உணர்த்துகின்றன. டைனோசரின் கால்கள் உள்ளேயும் வெளியேயும் சுருங்கும்போது சேறு எவ்வாறு சிதைந்தது என்பதைக் காண முடிகிறது," என்றார்.
"மத்திய ஜுராசிக் காலத்தில் பிரிட்டனில் சுற்றித் திரிந்த டைனோசரின் கால்தடங்களின் 20,000 க்கும் மேற்பட்ட படங்களுடன், இந்த டைனோசர்களின் அளவு, இயக்கம் மற்றும் தொடர்புகள் பற்றிய நுண்ணறிவுகளைக் குழு கண்டறிய முடியும்" என்கிறார் மார்க் விட்டன் ஆராய்ச்சியாளர்.
Courtesy newatlas