விஷாலுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவரது நண்பர் ஆர்யா மும்பையிலிருந்து விரைந்து சென்னை வந்திருக்கிறார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
ஒருகாலத்தில் மதுர காரன் என்று சொன்னால் விஷால்தான் ஞாபகத்திற்கு வருவார். அந்தளவிற்கு ஃபிட்டாகவும், மதுர காரன் நிறத்தில் வில்லேஜ் பாயாகவும் தூள் கிளப்பி வந்தார். சில காலமாக கண்ணில் படாத அவர், மத கஜ ராஜா படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துக்கொண்டார். ஆனால், அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தினரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
விஷால் மைக்கைப் பிடித்து பேசும்போது கைகள் அப்படி நடுங்கியது. அவரால் பேசவே முடியவில்லை. அவருக்கு மிக அதிகமான காய்ச்சல் என்று கூறினார்கள். ஆனால், விஷாலுக்கு என்னாச்சு என்னாச்சு என்று சமூக வலைதளங்கள் முழுவதும் விஷால் பேச்சு தான்.
ஆனால், காய்ச்சல் என்பது வெறும் சமாளிப்புதான். அவருக்கு நீண்ட நாளாக உடல் நலப் பிரச்சினை இருக்கிறது.
பாலாவின் அவன் இவன் படத்தில் இவர் மாறுகண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக ரொம்பவும் அவர் கஷ்டப்பட்டார். அப்படி நடித்ததால் அவருக்கு சில நரம்பு பிரச்சனைகளும் ஏற்பட்டது.
அதன் விளைவாகத்தான் தற்போது இந்த அளவிற்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் இதைப்பற்றி அறிந்த ஆர்யா மிகவும் பதற்றத்துடன் மும்பையிலிருந்து சென்னை விரைந்திருக்கிறார். இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் மற்ற நண்பர்கள் கூட்டமும் விஷாலை தேடி வந்திருக்கின்றனர்.
ஏனென்றால் சமீப நாட்களாக விஷால் எந்த நண்பர்களையும் சந்திக்கவில்லை. இவர்கள் தேடி வந்தாலும் கூட சார் வீட்டில் இல்லை என்ற பதில் தான் கிடைத்திருக்கிறது.
அவர் மிகவும் தனிமையிலையே இருந்திருக்கிறார். தற்போது நண்பர்கள் அனைவரும் அவரை வெளியில் அழைத்து வந்து குதூகலப்படுத்தி இருக்கின்றனர்.
உன்னை பழைய மாதிரி மாற்றுவது தான் எங்கள் வேலை நீ சரியாகும் வரை நாங்கள் உன் கூட தான் இருப்போம் எனக்கூறி இருக்கின்றனர். அதனால் விரைவில் விஷாலை நாம் பழைய சுறுசுறுப்புடன் காணலாம் என்ற தகவல்கள் வந்திருக்கிறது. அதேபோல், விஷால் ரசிகர்களும் பிரார்த்தனையில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.