ரோஜா செடியின் இலைகள் கருப்பாக மாறுதா? இந்த 4 எளிய வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

ரோஜா செடிகளில் கருப்பு புள்ளி நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய செடியை மீட்டெடுக்கவும் உதவும் நான்கு எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வழிகள்.
ரோஜா செடி | Roja plant
ரோஜா செடி | Roja plantImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

மழைக்காலம் என்றாலே ரோஜா செடிகளுக்கு ஆபத்து தான்! இலைகளில் தோன்றும் அந்த சின்னக் கருப்பு புள்ளிகள் எப்படி உங்கள் செடியையே மொத்தமாக காலி செய்யும் தெரியுமா? பூஞ்சை தொற்றால் செடிகள் மொட்டையாக மாறுவதற்கு முன்பாக, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகளையும், இயற்கை பராமரிப்பு ரகசியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ரோஜா தோட்டத்தை காக்க இந்த வழிமுறைகள் நிச்சயம் உதவும்!

ரோஜா தாவரத்தின் இலைகளில் மழைக்காலம் வந்து விட்டாலே ஆங்காங்கே கருப்பு புள்ளிகள் தோன்றி விடுகிறது. இது பொதுவான ஒரு பூஞ்சை நோயாகும். ‘டிப்ளோகார்பன் ரோசே’ (Diplocarpon rosae) என்ற பூஞ்சையே இதற்கு முக்கியக் காரணமாகும். இதற்கான முதன்மை காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி பார்க்கலாம்.

கருப்பு புள்ளிகள் வர முக்கியக் காரணங்கள்:

ஈரப்பதம் மற்றும் மழைநீர்: இந்த பூஞ்சையின் வித்துக்கள் (Spores) ஈரப்பதமான சூழ்நிலையிலும், மழைநீரிலும் எளிதில் பரவுகின்றன. இலைகளின் மேல் நீர் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருக்கும்போது, இந்த பூஞ்சை இலைகளில் எளிதில் ஊடுருவி நோயை ஏற்படுத்துகிறது.

மழைத்துளிகள் செடியின் மீது விழும் போது, ஏற்கனவே கீழே விழுந்த நோய் தாக்கிய இலைகளில் இருந்து பூஞ்சை வித்துக்கள் மேல்நோக்கித் தெறித்து புதிய இலைகளையும் தண்டுகளையும் பாதிக்கின்றன. அதிக ஈரப்பதம் மற்றும் மிதமான தட்ப வெப்பநிலை இந்தப் பூஞ்சை வேகமாக வளர்வதற்கு ஏற்ற சூழலைத் தருகிறது. மேலும் செடியின் கிளைகள் அடர்த்தியாக இருந்தால், இலைகளுக்கு இடையே காற்று புக முடியாமல் ஈரப்பதம் அப்படியே தங்கிவிடும்.

ரோஜா துரு நோயின் சுழற்சியானது, பூஞ்சை தாவரத் திசுக்களுக்குள் ஊடுருவி, புதிய தொற்றுகளை உருவாக்குகிறது. தாவரத்தின் மேற்பரப்பில் உருவாகும் கொப்புளங்கள் புதிய வித்துக்களை உருவாக்குகின்றன, அவை காற்று மற்றும் மழையின் மூலம் மற்ற தாவரங்களுக்குப் பரவுகின்றன.

இதையும் படியுங்கள்:
மாடித்தோட்டம் அமைக்கணுமா? ஆரம்பத்தில் எளிதாக வளரும் 6 செடிகள்!
ரோஜா செடி | Roja plant

இந்தச் சுழற்சி ஒரு பருவத்தில் பலமுறை மீண்டும் நிகழலாம், இது தாவரத்தின் ஆரோக்கியத்தில் கடுமையான சரிவுக்கு வழிவகுக்கிறது.

அறிகுறிகள்: இலைகளின் மேற்பகுதியில் கருப்பு அல்லது கருநீல நிறத்தில் வட்ட வடிவப் புள்ளிகள் தோன்றும். கரும் புள்ளிகளைச் சுற்றி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, சீக்கிரமே உதிர்ந்துவிடும்.

இது பொதுவாக செடியின் அடிவாரத்தில் தொடங்கி மேலாக பரவும். நோய் தீவிரமடைந்தால், இலைகள் அனைத்தும் உதிர்ந்து செடி மொட்டையாகி பலவீனம் அடையும்.

ரோஜா செடி | Roja plant
ரோஜா செடி | Roja plantImage credit: Gemini AI

கருப்பு புள்ளி நோய் பரவாமல் தடுக்கும் 4 வழிகள்:

1. பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றுதல்: கருப்பு புள்ளிகள் உள்ள இலைகளை உடனடியாகப் பறித்து எரித்துவிட வேண்டும். அவற்றைச் செடியின் அடியிலோ அல்லது உரக் குவியலிலோ போடக் கூடாது. தரை மட்டத்திற்கு அருகில் உள்ள செடியின் கீழ் இலைகளை நறுக்கிவிட்டால், மண்ணிலிருந்து நீர் தெறித்து நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் இருக்கும் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் எடுத்து அத்துடன் 5 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் 2 துளி liquid soap ஊற்றவும். மூன்றும் சேர்ந்து நன்கு கலந்து வர 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி இலைகளின் மேல் தெளித்தால் போதும்.

3. இரண்டு லிட்டர் புளித்த மோரில் 20 கிராம் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து அதை 5 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலக்க வேண்டும். அருமையான பூஞ்சை நாசினி தயார். இந்த கரைசலை இலைகளின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதிகளில் படும்படி நன்றாக தெளித்து விடலாம். இது பூஞ்சை தொற்றை முழுமையாக அழித்து செடிக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் பூச்சிகள் தொல்லையா? இயற்கை முறையில் விரட்ட சூப்பர் டிப்ஸ்!
ரோஜா செடி | Roja plant

4. செடிகள் ஆரோக்கியமாக இருந்தால் நோயெதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கும். எனவே, தகுந்த இடைவெளியில் மண்புழு உரம், தொழு உரம் அல்லது கடல்பாசி திரவம் போன்ற இயற்கை உரங்களை வழங்கி செடியை வலிமையாக வைத்திருக்க வேண்டும்.

செடிகளுக்கு நீர் ஊற்றும்போது எப்போதும் இலைகள் மீது ஊற்றாமல், செடியின் வேர்ப் பகுதியில் மட்டும் நீர் ஊற்றுவது மழைக்காலம் அல்லாத மற்ற நாட்களிலும் நோயைத் தடுக்க உதவும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், செடிகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, மழைக்காலத்திலும் ரோஜா செடிகள் வாடாமல் செழித்து வளரும்.