
பறவைகள் அழகானவை. ஆனால், அவற்றில் விஷத்தன்மையுடன் கூடிய சில பறவைகள் இருப்பது வியப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட நச்சுத் தன்மையுள்ள 5 வகை பறவைகளை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Hooded Pitohui: மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் பறவை இது. பப்புவா ந்யூ கினியாவில் காணப்படும் இதன் உடல் ஆரஞ்சு நிறத்திலும் கருப்பு தலையும் உள்ளது. இதன் தோல், இறகுகள் மற்றும் தசைகள் முழுவதும் நச்சுக்கள் உள்ளன. இதைத் தொட்டாலே விஷத்தைக் கக்கக் கூடியது. தன்னைக் காத்துக்கொள்ள இப்படி விஷத்தைக் கக்குகிறது. இதனால் உடல் மறத்துப்போதல் மற்றும் பாரிச வாயு ஏற்படலாம்.
Spur winged goose: ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் இதன் உடலில் கான்தரிடின் என்ற நச்சு உள்ளது. இதைத் தொட்டாலே இந்த நச்சு நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். அதிக அளவில் உடலில் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய நஞ்சாக இது கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதன் விஷம் தொடுபவரின் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.
Rufous Shrike Thrush: இந்த வகை பறவைகளை கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணலாம். இதன் ஒலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இதன் இறகு சிவப்பு மற்றும் ப்ரௌன் நிறம் கலந்து இருக்கும். இது மிக இனிமையாக கூவக் கூடியது. இதன் இறகுகள் மற்றும் தோலில் நச்சுக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அது ஒரு ரசாயனம் போன்று இருக்கும். இதற்கு எதிரிகளால் ஆபத்து வரும்போது இதை காத்துக்கொள்ள இந்த நச்சு பயன்படுகிறது. இந்த விஷத்தன்மையால் உடலில் அரிப்பு மற்றும் மறத்துப்போதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
European Quail: இந்தப் பறவையின் நச்சிற்கு Conotoxinism என்று பெயர். இந்த பறவையை உண்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இதன் விஷத்தன்மையான Conotoxinismத்தால் மிகவும் கடுமையான தலைவலி ஏற்படும். சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். இது இப்பறவையை உண்ணும் உணவிலிருந்து நச்சுக்கள் சேருவதாக அறியப்படுகிறது.
Blue Capped Ifrita: பூச்சிகளை உணவாகக் உட்கொள்ளும் இப்பறவை ‘பப்புவா ந்யூ கினியா’வில் காணப்படுகிறது. எதிரிகளால் இப்பறவைக்கு ஆபத்து வரும்போது இது கடிப்பதால் ஏற்படும் விஷம் உடலில் எரிச்சலைஅதிகப்படுத்தும். இதன் காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பாட்டு Respiratory paralysis என்ற நிலைமை ஏற்படலாம்.