இந்த 6 அரிய இளஞ்சிவப்பு பாம்புகள் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும், ஆனால் ரொம்பவே டேன்ஜர்ங்க... பார்க்கலாமா..
பொதுவாக மக்களுக்கு பாம்பை பார்த்தாலே பயமாகத் தான் இருக்கும். ஆனால் சமீபத்தில், நம்மில் பெரும்பாலோரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆன்லைனில் கண்ணை கவரும் நிறங்களில் ஒரு சில பாம்புகள் காணப்படுகின்றன.
மிகவும் கண்ணைக் கவரும் வகையில் இந்த பாம்புகள் இளஞ்சிவப்பு நிறமும் வெளிர் நிறமும் கலந்து மென்மையாக இருக்கின்றன.
இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும் இந்த பாம்புகளில் ஒரு சில பாம்புகள் விஷமுள்ளவைகளாகவும் மற்றும் சில சிறந்த வேட்டைக்காரர்களாகவும் இருக்கின்றன.
அப்படி அழகாக இளஞ்சிவப்பு நிறத்தோடு இருக்கும் 6 அரிய வகை பாம்புகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்...
தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட ரோஸி போவா, அதனுடைய உடம்பில் மங்கலான இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கோடுகளைக் கொண்டுள்ளது. இது இயற்கையாகவே அமைதியாக இருக்கும் தன்மையை கொண்டது, ஆனால் இது மற்ற விலங்குகளின் மீது முழுவதுமாக சுற்றிக் கொண்டு, அழுத்துவதன் மூலம் அவற்றை வேட்டையாடுகிறது. இது வட அமெரிக்காவில் காணப்படும் சில போவா இனங்களில் ஒன்றாகும்.
அல்பினோ மற்றும் வெளிர் நிற பர்மிய மலைப்பாம்புகள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிற வடிவங்களைக் காட்டுகின்றன, இதனால் அவை தனித்து நிற்கின்றன. இந்த பாம்புகள் மிகப் பெரியதாக வளரும். விஷம் இல்லாவிட்டாலும், இவை மிகவும் சக்திவாய்ந்த கட்டுப்பான்களாகும் (constrictors).
இந்த வகை பாம்புகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மிக அழகாகத் தெரிகின்றன, ஆனால் இவைகளும் எல்லா போவாக்களைப் போலவே, தங்கள் இரையைச் சுற்றி வளைத்து வேட்டையாடுகின்றன, இது அவைகள் வெளிர் நிறத் தோற்றத்தை கொண்டிருந்த போதிலும் மென்மையானவை அல்ல என்பதை நிரூபிக்கின்றன.
பாலைவனங்கள் அல்லது பாறைப் பகுதிகளில் வாழும் சில ராட்டில்ஸ்னேக்குகள் வெளிர் இளஞ்சிவப்பு நிறங்களோடு காணப் படுகின்றன. இந்த நிறமானது அவற்றை சுற்றுப் புறங்களுடன் தெரியாமல் கலக்க உதவுகின்றன. இவைகளின் நிறம் மென்மையாக இருக்கலாம், ஆனால் இவற்றின் விஷம் இன்னும் மிகவும் ஆபத்தானது. இவற்றின் வால் முனையில் உள்ள சத்தம் நம்மை எப்போதும் விலகி இருக்க உதவும் ஒரு எச்சரிக்கையாகும்.
ஆசியாவின் சில பகுதிகளில் சில நேரங்களில் காணப்படும் இந்த அசாதாரண வகை நாகப்பாம்பு, அரிதான மரபணு மாற்றத்தால் ஏற்படும் இளஞ்சிவப்பு நிற தோல் நிறத்தைக் கொண்டுள்ளது. இது அசாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இது இன்னும் மிகவும் விஷமானது. மருத்துவ உதவி விரைவாக வழங்கப்படாவிட்டால் இதன் விஷக்கடி மிகவும் ஆபத்தானது. இதனுடைய அரிய நிறம் மற்றும் ஆபத்தான தன்மை ஆகியவற்றின் கலவையானது நமக்கு கவர்ச்சிகரமானதாகவும் அதே சமயம் பயமுறுத்துவதாகவும் இருக்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் ரம்பம் போன்ற செதில் விரியன் பாம்பு, சில நேரங்களில் அதன் உடலில் இளஞ்சிவப்பு நிறத்தைக் காட்டுகிறது. இது மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகும். இது சக்திவாய்ந்த விஷப் பாம்பு மட்டுமல்லாமல் ஆக்ரோஷமான மற்றும் கணிக்க முடியாத தன்மையையும் கொண்ட பாம்புமாகும். விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதனுடைய ஒரு சிறிய கடி கூட அதிக இரத்தப்போக்கு, கடுமையான திசு சேதம் மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது.