அச்சச்சோ! பாம்புகளில் இத்தனை வகையா... உலகின் 7 கொடூரமான விஷப் பாம்புகளின் லிஸ்ட் இதோ!

world-deadliest-snakes
world-deadliest-snakes
Updated on

பாம்பு என்றாலே அனைவருக்குமே பயம்தான். சாதாரணமாக வயல்வெளிகளில் போகும் சாரைப் பாம்பை பார்த்தாலே பலரும் அலறி அடித்து ஓடுவார்கள். ஆனால் உலக அளவில் பார்த்தால், கடித்த சில நிமிடங்களிலேயே மனிதனின் உயிரைக் குடிக்கக்கூடிய பல பயங்கரமான விஷப் பாம்புகள் இருக்கின்றன. 

வெறும் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றுக்குள் இருக்கும் விஷத்தின் வீரியத்தை பொறுத்து இவற்றை 7 ஆபத்தான நிலைகளாக பிரிக்கலாம். 

1: Rattlesnake (கிலுகிலுப்பை விரியன்)!

முதல் நிலையில் இருப்பது அமெரிக்க காடுகளில் சுற்றும் ரேட்டில் ஸ்னேக் ஆகும். இது எதிரிகளை கண்டால் தனது வால் பகுதியை ஆட்டி ஒரு விசித்திரமான சத்தத்தை எழுப்பி எச்சரிக்கை செய்யும். இதன் விஷம் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. கடித்தால் கடுமையான வலியும் வீக்கமும் இருக்கும், ஆனால் உடனடி சிகிச்சை பெற்றால் பிழைத்துக்கொள்ளலாம்.

2: Puff Adder (தொப்பை விரியன்)!

அடுத்ததாக ஆப்பிரிக்காவை சேர்ந்த பஃப் ஆடர் வருகிறது. இவை தங்களை சுற்றியுள்ள காய்ந்த சருகுகள் மற்றும் மண்ணின் நிறத்திலேயே பக்காவாக மறைந்திருக்கும். யாராவது தெரியாமல் மிதித்துவிட்டால் மிக கொடூரமாக தாக்கும். இதன் விஷம் தசை திசுக்களை நேரடியாக அழித்துவிடும் வல்லமை பெற்றது.

3: Russell's Viper (கண்ணாடி விரியன்)!

மூன்றாவது இடத்தில் நமது ஊர்களில் அதிகம் காணப்படும் கண்ணாடி விரியன் உள்ளது. இது கடித்தால் உடலின் பல பாகங்களில் இருந்து ரத்தம் கசிய தொடங்கும். இந்தியாவில் அதிக மனிதர்களை கடித்து கொன்றதில் இந்த பாம்புக்கு பெரும் பங்கு உண்டு. இதன் சீற்றம் மிக பயங்கரமாக இருக்கும்.

4: Indian Krait (கட்டுவரியன்)!

நான்காவது லெவலில் இருப்பது அமைதியான கொலையாளியான கட்டுவிரயன். இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து தரையில் தூங்குபவர்களை நைசாக கடித்துவிடும். இதன் கடி வலி பெரிதாக தெரியாது என்பதால் பலரும் ஏமாந்து போவார்கள். ஆனால் இது நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கி சத்தமில்லாமல் மரணத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவையில் கருப்பு கவுனி அரிசி அல்வா மற்றும் சத்தான பாதாம் திணை கேசரி!
world-deadliest-snakes

5: Black Mamba (கருப்பு மாம்பா)!

ஐந்தாவது இடத்தில் உலகின் மிக வேகமாக ஊர்ந்து செல்லும் பாம்பான பிளாக் மாம்பா இருக்கிறது. இது மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். இதன் ஒரு துளி விஷம் வெறும் இருபது நிமிடங்களில் ஒரு மனிதனின் உயிரை எடுத்துவிடும் கொடூரம் கொண்டது.

6: King Cobra (ராஜநாகம்)!

ஆறாவது நிலையில் பாம்புகளுக்கெல்லாம் ராஜாவான ராஜநாகம் கம்பீரமாக நிற்கிறது. இது மற்ற பாம்புகளையே வேட்டையாடி சாப்பிடும் வழக்கம் கொண்டது. இது கடிக்கும்போது ஒரே நேரத்தில் மிக அதிகப்படியான விஷத்தை செலுத்துவதால் ஒரு பெரிய யானை கூட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்துவிடும்.

7: Inland Taipan (உள்நாட்டு தைபான்)!

கடைசியாக ஏழாவது மற்றும் மிக பயங்கரமான நிலையில் இருப்பது ஆஸ்திரேலியாவை சேர்ந்த இன்லேண்ட் தைபான். இதுதான் உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்பு. இதன் ஒரே ஒரு கடி சுமார் நூறு மனிதர்களை கொல்லும் அளவுக்கு மிக கொடூரமானது. அதிர்ஷ்டவசமாக இது மனிதர்கள் வாழும் பகுதிக்கு அவ்வளவாக வருவதில்லை.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்குள் பாய்ந்து பிடித்த பாம்பு... சில நொடிகள் உறைந்து போன இதயம்! - Zai Whitaker பசுமை நினைவுகள்!
world-deadliest-snakes

இந்த பாம்புகளின் பெயர்களை கேட்டாலே நமக்கு அடிவயிறு கலங்குகிறது. இந்த பாம்புகள் எப்போதுமே மனிதர்களைத் தேடி வந்து கடிப்பதில்லை. நாம் அவற்றின் எல்லையை மீறும்போதோ அல்லது அவற்றை அச்சுறுத்தும்போதோ மட்டுமே அவை தற்காப்புக்காக தாக்குகின்றன.  எனவே காடுகளுக்கு அல்லது புதர்கள் நிறைந்த இடங்களுக்கு செல்லும்போது தகுந்த பாதுகாப்புடன் செல்வதுதான் நமக்கும் நல்லது, அந்த வாயில்லா ஜீவன்களுக்கும் நல்லது.

logo
Kalki Online
kalkionline.com