இயற்கை மருந்தான வேப்பெண்ணெய் பூச்சிகளை இயற்கை முறையில் அளித்து செடிகளுக்கு பாதுகாப்பு தருகிறது. இவற்றை மண், தாவரங்கள் எதில் பயன்படுத்தினாலும் பிரச்னைகள் சரியாகும். அந்த வகையில் வேப்பெண்ணெயின் 8 நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. சிறந்த பூச்சிக்கொல்லி: வேப்ப எண்ணெய் தோட்டத்திற்கு வரும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதோடு, பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியைத் தடுத்து அவற்றை விரட்டி ஓடச்செய்யும் சிறந்த பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.
2. பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது: வேம்பு எண்ணெய் கரும்புள்ளிகள் மற்றும் துருக்கலை நல்ல முறையில் அகற்றி சிறந்த பூஞ்சை கொல்லியாக செயல்படுகிறது. வேப்ப எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்து தாவரங்களில் தெளிக்கும்போது, அது கடும் பிரச்னைகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அடித்து விரட்டுகிறது.
3. மண்புழுக்களை என்ன செய்கிறது?: மண்ணில் மண்புழுக்கள் இருந்தால் அது மண்ணை கிளறிக்கொடுத்து விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை நிபுணர்களுக்கு உதவுகிறது. ஆனால், அதுவும் அதிகம் இருந்தால், அவையும், தாவரங்களை அழிக்கும் என்பதால் வேப்ப எண்ணெய் இயற்கை முறையில் மண்புழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது.
4. இயற்கை உரம்: வேப்ப எண்ணெய் பூச்சிகளுக்கு மட்டும் எதிரியாக இல்லாமல், தாவரங்களுக்கும் ஊட்டமளிக்கின்றன . வேப்ப எண்ணெய் ஸ்பிரேயை வேப்பம் புண்ணாக்கில் கலந்து மண்ணில் இடும்போது, அது மண்ணில் ஊட்டச்சத்துக்களை அதிகரித்து மண் வளத்தைப் பெருக்கி சிறந்த ஆர்கானிக் உரமாக செயல்படுகிறது.
5. வீட்டுக்கு உள்ளே வளர்க்கும் தாவரங்களுக்கும் பயன்படுத்தலாம்: வேப்ப எண்ணையை வீட்டின் உள்ளே வளர்க்கும் தாவரங்களில் ஸ்பிரே செய்தால், அது கரையான், பூஞ்சை போன்ற பூச்சி தொற்றுக்களை நல்ல முறையில் தடுக்கிறது. உங்களையும், உங்கள் செல்லப்பிராணிகளையும் பாதிக்காமல் இவற்றை வீட்டுக்கு உள்ளேயும் பயன்படுத்தலாம்.
6. காய்கறிகள்: வேப்ப எண்ணெய்யை காய் அல்லது கனி கொடுக்கும் தாவரங்களுக்குப் பயன்படுத்தும்போது, அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அப்படியே அவற்றில் ஒட்டியிருந்தாலும், அது ஆரோக்கியத்துக்கு கேடுகளை விளைவிக்காது.
7. இதன் வாசம் கொசுக்களை விரட்டியடிக்கும்: வேப்ப எண்ணெயின் வாசம், கொசுக்களை நல்ல முறையில் விரட்டியடிக்கும். இதனால் வீடு மற்றும் தோட்டத்தில் கொசுக்கள் வராமல் இருக்கும்.
8. எதிர்ப்பு பெறுவது கடினம்: மற்ற கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தும்போது, அதற்கு எதிர்ப்புத்திறனை பூச்சிகள் பெற்று விடும். ஆனால், அதுபோலன்றி வேப்ப எண்ணெயை பயன்படுத்தும்போது பூச்சிகள் எதிர்ப்புத்திறனைப் பெறாது.
தோட்டக்கலையில் வேப்ப எண்ணெய் மிகச்சிறந்த மாயங்களை ஏற்படுத்திவிடும் என்பதற்கு மேற்கூறிய 8 விஷயங்களுமே சான்று.