நரம்புத் தளர்ச்சி பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Foods to eat for nervous breakdown
Foods to eat for nervous breakdown
Published on

ம் உடலில் முக்கியமான செயல்களைச் செய்வதற்கு நரம்புகள் மிகவும்  அவசியமாகும். நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வந்தால், அது நம் அன்றாட வாழ்வை பாதிக்கும். நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வைட்டமின் B12 குறைபாட்டால் வருகிறது. அதிக ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரிவரக் கிடைப்பதில்லை. எனவே, நரம்புத் தளர்ச்சி குணமாக என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிடுவதால், நரம்பு வலு பெறுவதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்திப்பழம் உடலின் பலவீனத்தை குறைத்து உடலை நன்றாக பலப்படுத்துகிறது.

2. உணவில் வாரத்திற்கு இரண்டு முறை பிரண்டையை சேர்த்துக்கொள்வதால், நரம்புத் தளர்ச்சி பிரச்னைகள் தீரும்.

3. நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்வதற்கு தினமும் கண்டிப்பாக ஒரு பழம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, தினமும் மாதுளைப்பழம் சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
வெண்பொங்கல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Foods to eat for nervous breakdown

4. தினமும் நெல்லிக்காய் ஒன்று சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து நரம்பு மண்டலம் வலு பெறும்.

5. வெற்றிலையை ஒன்றோ இரண்டோ எடுத்து நன்றாகக் கழுவிய பிறகு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் சரியாகும்.

6. முருங்கைக் கீரையில் உள்ள பல்வேறு விதமான சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளை குணமாக்கும். முருங்கைக் கீரையை சமைக்கும்போது அதில் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி சேர்த்து சமைத்து சாப்பிடுவது நரம்புகள் வலு பெற உதவுகிறது.

7. காலையில் உண்ணக்கூடிய உணவுகளில் மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி போன்ற கீரைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்வது நரம்புப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
குளிர்கால உடல் பிரச்னைகளைப் போக்கி ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள்!
Foods to eat for nervous breakdown

8. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பேரிச்சம் பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலமாகும், நரம்புகளும் நன்றாக வலு பெறும், தூக்கம் நன்றாக வரும்.

9. சேப்பங்கிழங்கை புளியுடன் கலந்து சமைத்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாவது மட்டுமில்லாமல், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

10. துளசி விதைகளை வெயிலில் நன்றாக காயவைத்து பிறகு அதை அரைத்து பொடி செய்து தினமும் எடுத்துக்கொள்ள நரம்பு பிரச்னை நம்மை அண்டாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com