தாவரங்கள் வளர காற்றோட்டமும் நல்ல சூரிய வெளிச்சமும் தேவை. ஆனால் சில வகையான தாவரங்கள் குறைந்த வெளிச்சத்தில் வளரும் தன்மையுடையவை.
இந்தத் தாவரங்களின் சிறப்பு இயல்புகள்:
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு இத்தகைய தாவரங்கள் மிகவும் ஏற்றவை. வீட்டின் பால்கனி, ஹால், படுக்கையறை போன்ற இடங்களில் வைத்து வளர்க்கலாம். குறைந்த சூரிய ஒளியில் இவை நன்றாக வளர்ந்து தாங்கள் இருக்கும் இடத்தில் பசுமையை அளிக்கின்றன. சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி மாசுக்களை வடிகட்டி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இதன் மூலம் இத்தகைய தாவரங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. அமைதியான மற்றும் பார்வையை ஈர்க்கும் சூழலை உருவாக்குகின்றன. குறைந்த பராமரிப்பு மற்றும் குறைந்த தண்ணீர் செலவு காரணமாக நிறைய மக்களால் விரும்பப்படுகின்றன.
இது வீட்டினுள் வைத்து வளர்க்க ஏற்ற தாவரம். குறைந்த சூரிய ஒளியில் செழித்து வளரும் ஆற்றல் உடையது. இது மாமியார் நாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. உயரமான நிமிர்ந்து நிற்கும் இலைகளுக்கு பெயர் பெற்றது. இதற்கு அதிகமான தண்ணீர் தேவை இல்லை.
இது பளபளப்பான கரும் பச்சை நிற இலைகளைக் கொண்டுள்ளது. வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது. குறைந்த சூரிய வெளிச்சத்தில் நன்றாக செழித்து வளரும். குறைந்த கவனிப்பிலேயே நன்றாகவே வளரும்.
இது அடர் பச்சை நிற இலைகளைக் கொண்டது. மங்கலான வெளிச்சம் உள்ள பகுதிகளில் வளர ஏற்றது. குறைந்த பராமரிப்பு போதும்.
மாறுபட்ட வடிவங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்ட அழகிய பசுமையான தாவரம். குறைந்த பராமரிப்பும் குறைந்த சூரிய ஒளி, தண்ணீர் போதும்.
குறைந்த கவனிப்பு சூரிய ஒளி தண்ணீர் போன்ற போதும். காற்றை சலித்து, சுத்திகரித்து வளரக்கூடிய செடிகள். செழித்து வளரும் இயல்புடையவை.
இது அழகான வெள்ளை பூக்களை கொண்ட செடியாகும். பச்சை நிற இலைகளைக் கொண்டது. குறைந்த சூரிய வெளிச்சத்தில் வீட்டினுள் வைத்து வளர்க்கலாம். மறைமுக சூரிய ஒளியில் கூட செழித்து வளரும் ஆற்றல் பெற்றது. சுற்றுப்புற சூழலில் உள்ள நச்சுக்காற்றை வடிகட்டி சுத்தமான காற்றை உருவாக்குகிறது.
பல அடி நீளம் வளரக்கூடிய கொடிகளை கொண்டது. குறைந்த சூரிய ஒளியில் நன்றாக வளரக்கூடியது. இதய வடிவிலான இலைகளைக் கொண்டது.
சிலந்தியின் கால்களைப் போல நீண்ட வளைந்த இலைகளைக் கொண்டது. இவை பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது எளிதில் சிறு சிறு கிளைகளை உற்பத்தி செய்யக்கூடியது. காற்றை சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்றது.