இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் தனி மதிப்பும், பெருமையும் பெற்ற மரம்!

Indian culture and tradition
sandalwood tree
Published on

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் மற்றும் பதஞ்சலியின் மகாபாரதம் என அனைத்து இலக்கிய, இதிகாசங்களிலும் சந்தனம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. சந்தன பசை கடவுளுக்கும் அரசர்களுக்கும் படைக்கப்படும் ஓர் உயர்ந்த பொருளாக கருதப்பட்டு, படைக்கப்பட்டு வந்துள்ளது. சந்தன மரம் மிகவும் மதிப்பு மிக்க ஒரு மரமாகும்.

பண்டைக் காலம் தொட்டே சந்தன எண்ணெய், வாசனை திரவியம் ஆகவும் வாசனை பொருளாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் சந்தனத்திற்கு என தனி மதிப்பும், பெருமையும் உண்டு . அதை வளர்ப்பதற்கு அரசின் உத்தரவு மிக அவசியம். அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

இளசான சந்தன மரத்திற்கு அருகில் நின்று அந்த மரத்தை நுகர்ந்தால் அதன் இளையோ, மரமோ வாசனை தருவதில்லை. அது வளர்ந்த பிறகுதான் வாசனை தரும். 

வளரும் சூழல்:

சராசரி வளர்ச்சியுடன் தொங்கும் கிளைகளை உடைய பசுமையான மரம் இது. சாதாரணமாக 13 மீட்டர்- 16 மீட்டர் உயரம் 11 மீட்டரில் இருந்து 12 மீட்டர் சுற்றளவும் அடையும். பட்டைகள் சிவப்பு கலந்த பிரவுன் நிறத்தில் இளைய மரங்கள் மென்மையாகவும், முதிர்ந்த மரங்களில் விரிசலுடன், செதில்களுடன் இருக்கும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்பட்டாலும் 90% மரங்கள் கர்நாடகாவின் கிழக்கு தொடர்ச்சி மலைகளிலும், தமிழ்நாட்டிலும் வளர்கின்றன. மைசூர் மற்றும் கூர்க் பகுதிகள் சந்தனத்திற்கு பெயர் பெற்ற இடங்கள் ஆகும்.

மரப்பண்புகள்:

பொதுவாக மற்ற மரங்களுடன் சேர்ந்தே சந்தனமரம் வளர்க்கப்படும். இம்மரம் ஓர் வேர் ஒட்டுண்ணியாகும். இதன் வேர்கள் அருகில் இருக்கும் மற்ற வேர்களுடன் கலந்து அவற்றின் மூலம் நன்கு வளரும். துவரை, வேம்பு, புங்கம் சவுக்கு, ஏழிலைப்பாலை போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும். இதனால் நடும்போதே ஏதேனும் ஒரு ஒட்டு செடியுடன் சேர்த்து நடவேண்டும். இயற்கையாக வளரும் சந்தனம் தனது வாழ்நாளில் 160- க்கு ம் மேற்பட்ட தாவரங்களுடன் சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதை நேரில் சேலம் போன்ற இடங்களில் பார்த்த பொழுதும் மற்ற மரங்களுடனோ அல்லது ஏதாவது ஒரு துணைச் செடியுடனோ வளர்வதை காணமுடிந்தது. 

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி திருடன் கடல் நத்தையின் காமெடி வாழ்க்கை!
Indian culture and tradition

சந்தன மரக் கொள்கை:

முதன் முதலில் தமிழ்நாட்டில் சந்தன மரவளப்பிற்காக 1882- ல் தமிழக வனச் சட்டம் உருவாக்கப்பட்டது. தனிநபர் சந்தன மரம் வளர்ப்பிற்காக இச்சட்டம் வரையறுக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2008இல் தமிழகத்தில் பட்டா நிலங்களில் சந்தனமர வளர்ப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்டது. இதன்படி எந்த ஓர் தனிநபரும் அவரது விவசாய நிலங்களில் சந்தன மரத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

மரத்தை நட்டபின் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அறுவடை செய்யும் பொழுது மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்த சான்றிதழ், சிட்டா, அடங்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள மரங்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.

மாவட்ட வன அலுவலரின் ஆணையின் பெயரில் வனச்சரகர் அறுவடைக்கு தயாராக உள்ள மரங்களை ஆய்வு மேற்கொள்வார். இவரின் பரிந்துரையின்படி மாவட்ட வன அலுவலர் மறு ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாவட்ட வனக்குழு இடம் இருந்து வெட்டப்படும் மரங்களை காப்பு காடுகளில் வளரவில்லை என்பதை உறுதி செய்யப்படும். இது உறுதி செய்த பின்பு பார்ம் ஒன்றே மாவட்ட வன அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வெட்டப்பட்ட மரங்கள் வனத்துறை அதிகாரிகளால் அரசு சந்தன சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அறுவடை செய்யப்படும் மரங்கள் அனைத்துமே நேரடியாக வனத்துறை மூலமாகவே அரசு கொள்முதல் செய்து கொள்ளும். அறுவடை செய்த மரத்தின் மொத்த விலையில் வெட்டுக்கூலி மற்றும் இதர செலவிற்காக 20% போக 80% விலையை விவசாயிக்கு மூன்று தவணையாக வழங்குகிறது. முதல் தவணை அறுவடை செய்த உடனேயும் ,இரண்டாம் தவணை அடுத்த 30 நாட்களுக்குள், மூன்றாவது மரத்தை விற்ற பின்னும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிறத்தில் வழுக்கைத் தலையுடன் காட்சி தரும் 'வழுக்கை உகாரி'!
Indian culture and tradition

பயன்கள்:

தடிமரம்:  மென் மரம் வெள்ளை மற்றும் வாசனையற்றது. உள்மரம் மஞ்சள் வண்ணத்துடன் நல்ல வாசனையாகவும் இருக்கும். இந்தப் பகுதியே விளை உயர்ந்ததும், மதிப்பு மிக்கதும் ஆகும். மரம் மற்றும் மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் என அனைத்துமே மருத்துவம், வாசனை திரவியங்கள் மற்றும் சோப்பு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

சந்தன எண்ணெய்:

உள் மரத்தைக்கொண்டு தூள் செய்த பின் அவற்றை நீராவி கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்க வேண்டும். சுத்தமான அதிக வாசனை உள்ள இந்த சந்தன எண்ணெய் பாரம்பரியமாக இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாசனை திரவியங்களிலும், அழகு சாதனப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com