
கடல் நத்தை என்றவுடன், அது ஒரு சாதாரண ஜெல்லி மாதிரியான உயிரினம் என்றுதான் நினைப்போம். ஆனால், Elysia crispata எனும் ஒரு கடல் நத்தை, புலி மாதிரியான திருட்டு வேலையை செய்கிறது! இந்த நத்தை அல்காவில் இருந்து குளோரோபிளாஸ்ட்டை திருடி, சூரிய ஒளியை வைத்து உணவு தயாரிக்கிறது. இதற்கு, ‘கிளெப்டோசோம்’ என்று பெயர். இதற்கு கிரேக்க மொழியில், ‘திருடு’ என்று பொருள். இந்த நத்தை ஒரு கிரிமினல் மாஸ்டர் மைண்ட். ஆனால், காமெடி கிரிமினல்!
எலிசியா கடல் நத்தைகளின் பச்சை நிறத்திற்குக் காரணம், அவை தாவரங்கள் ஆற்றல் உற்பத்தி செய்யும், ‘குளோரோபிளாஸ்ட்’ என்னும் உயிரணு உறுப்புகளைத் தங்கள் உடலில் சேமித்து வைப்பதே.
திருட்டு குளோரோபிளாஸ்ட்: இது ஃப்ரிட்ஜ் மாதிரியான ஒரு சேமிப்பு! இந்த நத்தை, அல்காவை மென்று தின்றுவிட்டு, அதில் இருக்கும் குளோரோபிளாஸ்ட்டை திருடி, தனது வயிற்றில் ஒரு ஸ்பெஷல் ‘கிளெப்டோசோம்’ எனும் பெட்டியில் சேமிக்கிறது. இது ஒரு மினி ஃப்ரிட்ஜ் போன்று செயல்படுகிறது! ஹார்வர்டு விஞ்ஞானி நிக்கோலஸ் பெல்லோனோ இது குறித்துக் கூறும்போது, "இது ஒரு நகரும் குளிர்சாதனப் பெட்டி. பசிக்கு இந்த நத்தை தன்னோட சேமிப்பையே சாப்பிட ஆரம்பிக்கிறது" என்கிறார்.
நத்தையின் சூப்பர் பவர்: இந்த கிளெப்டோசோமில், நத்தை தன்னுடைய புரோட்டீன்களை உற்பத்தி செய்து, திருட்டு குளோரோபிளாஸ்ட்டை உயிருடன் வைத்திருக்கிறது. இதற்கு P2 X 4 என்று ஒரு ஐயான் சேனல் உள்ளது. இது ATPஐ வைத்து சூரிய ஒளியை ஆக்ஸிஜனாக, ஊட்டச்சத்தாக மாற்றுகிறது. இதை தடை செய்தால், நத்தையின் சோலார் பவர் ஆஃப் ஆகி விடுகிறது! இது ஒரு மினி சோலார் பிளாண்ட் போன்று செயல்படுகிறது!
இந்த Elysia நத்தை உணவு இல்லை என்றாலும் நான்கு மாதம் வரை உயிருடன் இருக்கும். ஆனால், Aplysia எனும் ஒரு நத்தை மூன்று அல்லது நான்கு வாரத்தில் உலகத்துக்கு ‘பை பை’ சொல்லி விடுகிறது. Elysia நத்தை தனக்கு பசி வந்தால், தனது கிளெப்டோசோமை உடைத்து, குளோரோபிளாஸ்ட்டை சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது, இதன் நிறம் பச்சையிலிருந்து ஆரஞ்சு போன்று மாறுகிறது, இலையுதிர் கால இலைகள் போன்று!
"இந்த சிறிய உயிரினத்தின் செல் ப்ராசஸை ஆராய்ந்து கண்டுபிடிப்பது அபாரம்! இந்த கிளெப்டோசோம் கண்டுபிடிப்பு, ஆர்கனெல் பரிணாம வளர்ச்சி பற்றி புது கேள்விகளை எழுப்புகிறது. இயற்கையின் அடிப்படை விதிகளைப் புரிந்துகொள்வது கடினம்” என பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானி எலெனா ஒன்சியா தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.
இந்தக் கடல் நத்தை ஒரு சூரிய ஒளி திருடன். இது தனது சேமிப்பு ஃப்ரிட்ஜை வைத்து உயிர் வாழ்கிறது. இது ஒரு சிறிய உயிரினமாக இருந்தாலும், இயற்கையின் மேஜிக்கை காமெடியாகக் காட்டுகிறது.