அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் அபார சக்தி கொண்ட மரம்!

Tree that controls nuclear radiation
Red sandalwood Tree
Published on

நாம் வாழும் இந்த பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மரங்கள். மரங்கள் மனிதர்கள் சுவாசிப்பதற்காக காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதைத்தான் மனிதர்கள் சுவாசிக்கின்றனர். மரத்தில் காய்களை விட, இலைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம்; ஒரு காய் காய்க்க இவ்வளவு இலைகள் வளர வேண்டுமென்கிற ஒரு நியதியால்தான். ஆயிரம் இலைகளுக்கு மேல் வளர்ந்தால்தான் ஒரு ஆப்பிள் உண்டாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பத்து ஏ.சி. மெஷின்கள் தொடர்ந்து இயங்குவதால் கிடைக்கும் குளிர்ச்சி ஒரு மரத்தின் நிழல் மூலம் கிடைக்கிறது. 19 பேருக்கு ஒரு ஆண்டிற்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன. இதனை பணமாகக் கணக்கிட்டால் ஒரு மரம் செய்யும் சேவையின் மதிப்பு ரூபாய் 15 லட்சத்து 90 ஆயிரம் என்று கொல்கத்தா வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மக்காச்சோள மகசூலை குறைக்கும் படைப்புழு தாக்கத்தை தவிர்க்கும் வழிகள்!
Tree that controls nuclear radiation

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை 800 ரூபாய். அப்படியானால் ஒரு நாளைக்கு 2400 ரூபாய். ஒரு வருடத்திற்கு 8,60,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 65 வருடங்கள் என்றால் அவன் சுவாசிக்கும் காற்றின் விலை 5 கோடிக்கு மேல். இவ்வளவு மதிப்பு மிக்க காற்றை நமக்கு இலவசமாக வழங்கி வருகின்றன மரங்கள்.

நிலத்தின் தன்மையை மாற்றாமல் அப்படியே வைத்து நிலத்தடி நீரை தூய்மையாகத் தருவது மரங்களே. மரங்களின் இலை, வேர், தண்டு, மொட்டு, பூ, காய், கனி ஆகியவை ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்திற்கு பயன்படுகின்றன. மரங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கின்றன. மரங்கள் கவனம் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கோளாறு (ADHD), ஆஸ்துமா மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் அல்லது நிகழ்வுகளைக் குறைக்கின்றன. மரங்கள் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டைக் குறைக்கின்றன. இதனால் சரும புற்றுநோயைக் குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்த விலங்குகள் மற்றும் பறவைகளின் தூக்க ரகசியத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்!
Tree that controls nuclear radiation

தங்க மரம் என்று அழைக்கப்படும் தேக்கு மரம், உலகிலேயே முதன் முதலாக மரச் செடியாகப் பயிரிடப்பட்டது இந்தியாவின் கேரளா மாநிலத்தில்தான். அங்குள்ள நிலாம்பூரில் 1840ம் ஆண்டில் மலப்புரம் மாவட்ட கலெக்டர் எச்.வி.கனோலி என்ற பிரிட்டிஷ்காரர் தேக்கு விவசாயத்தை தொடங்கி வைத்தார்.

அடர்ந்த காடுகளுக்கு இடையே வளரும் செஞ்சந்தன மரத்திற்கு அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டறியப்பட்டது. அணு உலைக்கான மர வேலைகள் அனைத்தும் இந்த மரத்தில்தான் செய்யப்படுகின்றன. இந்த மரத்திற்கு ஈர்ப்பு விசை அதிகம். இடி, மின்னல் போன்றவற்றை ஈர்க்கும் இயல்புடையது என்பதால் இவை கோயில் கொடிமரமாக வைக்கப்பட்டது. இம்மரத்தை வளர்க்க வேண்டுமானால் அரசு வருவாய்த் துறையின் உதவியுடன்தான் வளர்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
ஹைபிரிட் பழங்கள் ஆரோக்கியமா? ஆபத்தா? அவசியம் அறிய வேண்டிய ரகசியம்!
Tree that controls nuclear radiation

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் அகர் மரம். சந்தன மரத்தைவிட, இது பல மடங்கு கூடுதல் விலை மதிப்புக் கொண்டது. இந்த மரத்திற்கு சர்வதேச அளவில் மதிப்பு இருக்கிறது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி, ஒரு மரம் 35,000 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 1,00,000 ரூபாய் வரைக்கும் விலைப்போகிறது. இந்த மரத்தைப் மூலப்பொருளாகப் பயன்படுத்தி, விலையுயர்ந்த சாம்பிராணி, 500 வகையான வாசனை திரவியங்கள், அகர்பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள்  தயாரிக்கப்படுகின்றன. அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.

புங்கை மரத்தின் நிழலில் சுற்றுப்புறத்தை விட 5 டிகிரி வெப்பநிலை குறைவாக இருக்கும். எனவே, இந்த மரத்தை ஏர்கன்டிஷனர் மரம் என்கிறார்கள். மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகளாகக் கருதப்படுகின்றன. அதேபோல், பஞ்ச மரங்கள் உள்ளன. அவை, மா, வன்னி, மந்தாரம், வில்வம், பாதிரி என்ற ஐந்தும் ‘பஞ்ச தருக்கள்' எனப்படும். ‘நமசிவாய' என்ற ஐந்தெழுத்தின் சக்தி இந்த ஐந்து மரங்களில் தங்கி உள்ளது. இம்மரங்கள் உள்ள இடம் புண்ணிய தலமாகும். பேய், பிசாசு, காற்று கருப்பு மற்றும் துர்தேவதைகள் இங்கு நெருங்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com