உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியின் ஆச்சரியப்படுத்தும் அரிய நிகழ்வுகள்!

Rare events at Victoria Falls
Lunar Rainbow
Published on

விக்டோரியா நீர் வீழ்ச்சி (Victoria Falls) உலகின் மிகப் பெரிய மற்றும் ஆச்சரியமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது தென் ஆப்பிரிக்காவில் (ஆப்பிரிக்கக் கண்டம்) உள்ள ஜாம்பியா (Zambia) மற்றும் ஜிம்பாப்வே (Zimbabwe) நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. விக்டோரியா நீர் வீழ்ச்சி Zambezi ஆற்றின் மீது அமைந்துள்ளது. சுமார் 1.7 கிலோ மீட்டர் அகலம் மற்றும் 108 மீட்டர் உயரம் கொண்டது. ஆப்பிரிக்காவின் நான்கு பெரிய நதிகளில் ஒன்றான Zambezi இங்கு பாறை பள்ளத்தில் விழுந்து, பெரும் புகை போல் நீர்த்துளிகளை உருவாக்குகிறது.

வரலாறு: உள்ளூர் மக்கள் இதனை, ‘Mosi-oa-Tunya’ (The Smoke That Thunders) என்று அழைத்தனர். அதாவது, ‘இடியுடன் முழங்கும் புகை’ என்று பொருள். 1855ல் பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் டேவிட் லிவிங்ஸ்டன் (David Livingstone) முதன் முதலாக இந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்து, அதை அப்போது இங்கிலாந்தின் அரசியாக இருந்த ராணி விக்டோரியாவின் பெயரில் ‘Victoria Falls’ என்று அழைத்தார்.

இதையும் படியுங்கள்:
விஷத்தன்மை கொண்ட எட்டி மரத்தின் மருத்துவ ரகசியங்கள்!
Rare events at Victoria Falls

இயற்கை அழகு: நீர் கீழே விழும்போது சுமார் 400 மீட்டர் உயரம் வரை நீர்த்துளிகள் காற்றில் பறக்கின்றன. தொலைவில் இருந்து பார்க்கும்போது அது புகை எழும் மலை போலத் தோன்றும். சுற்றிலும் அடர்ந்த காடுகள் மற்றும் பல்வேறு விலங்குகள், பறவைகள் வாழும் தேசிய பூங்காக்கள் உள்ளன.

சந்திர வானவில் தோன்றும் அதிசயம்: சூரிய மண்டலத்தில் வானவில் தோன்றுவது போலவே, சந்திரனின் ஒளி (moonlight) நீர்த்துளிகளில் பிரதிபலித்து, ‘Moonbow’ அல்லது ‘Lunar Rainbow’ எனப்படும் சந்திர வானவில் உருவாகும். ஆனால், இது மிகவும் அரிதான இயற்கை நிகழ்வு. சந்திர ஒளியில் வானவில்லை தெளிவாகக் காண, வானம் கருமையாக இருக்க வேண்டும் (பிரகாசமான முழு நிலவு தேவை). காற்றில் நிறைய நீர்த்துளிகள் (நீர்வீழ்ச்சி அருகில்) இருக்க வேண்டும். வானம் மேகமில்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

இதற்கான புகழ் பெற்ற இடம் விக்டோரியா நீர் வீழ்ச்சி ஆகும். உலகிலேயே அதிகம் பிரபலமான ‘moonbow’ காணப்படும் இடம். இங்கு முழு நிலவு இரவுகளில், நீர்த்துளிகளில் சந்திர ஒளி படும்போது அழகான வெள்ளை வானவில் தோன்றும். கேமராவில் நீண்ட exposure வைத்து படம் எடுத்தால், சிவப்பு, பச்சை, நீலம் போன்ற உண்மையான வண்ணங்கள் தெளிவாகத் தெரியும். சந்திர ஒளியில் வானவில் உருவாகும் இந்த அரிய நிகழ்வை ‘Moonbow’ என அழைக்கிறோம். இதை விக்டோரியா நீர் வீழ்ச்சியில் (ஆப்பிரிக்கா) பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
கம்பீரமாக கர்ஜிக்கக்கூடிய குரல் வளம் கொண்ட 10 விலங்குகள்!
Rare events at Victoria Falls

உலக முக்கியத்துவம்: இது UNESCO உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து, போட்டோகிராபி, சாகச விளையாட்டுகள் (Rafting, Bungee Jumping, Helicopter Rides) ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

சிறப்பு: மழைக்காலத்தில் (பிப்ரவரி முதல் மே மாதம் வரை) நீரின் ஓட்டம் மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பார்வையாளர்கள் முழுவதும் நீர்த்துளிகளில் நனைந்து விடுவார்கள். கோடைக்காலத்தில் (அக்டோபர் முதல் நவம்பர் வரை) நீரின் அளவு குறைந்து, பாறைகள் தெளிவாகக் காணப்படும். விக்டோரியா நீர் வீழ்ச்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா - ஜிம்பாப்வே எல்லையில் அமைந்துள்ள, உலகின் மிகப் பிரபலமான நீர் வீழ்ச்சி ஆகும். இதன் பெருமை, இயற்கை அழகு, வரலாற்று முக்கியத்துவம் ஆகியவை காரணமாக இது ‘இடியுடன் முழங்கும் புகை’ என அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com