உலகின் விசித்திரமான திறமை கொண்ட மூன்று பறவைகளின் வியக்க வைக்கும் தகவல்கள்!

உலகின் விசித்திரமான திறமை கொண்ட மூன்று பறவைகளின் வியக்க வைக்கும் தகவல்கள் மற்றும் ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்
பறவைகள் | 3 amazing birds
பறவைகள் | 3 amazing birdsImage credit: Gemini AI
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

இயற்கையின் மடியில் மனிதர்களை வியக்க வைக்கும் பல விசித்திரங்கள் மறைந்துள்ளன. அந்த வகையில், மைக்கேல் ஜாக்சனைப் போலவே 'மூன் வாக்' நடனமாடும் சிவப்புத் தொப்பி மனாகின் பறவை, 10 மாதங்கள் இடைவிடாமல் வானிலேயே பறக்கும் காமன் ஸ்விஃப்ட் மற்றும் 111 ஆண்டுகள் மறைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பைனி பாப்லெர் பறவை என இந்த உலகின் மூன்று ஆச்சரியமான பறவைகளின் ரகசியங்களை இந்தத் தொகுப்பு உங்களுக்கு விவரிக்கிறது!

மைக்கேல் ஜாக்சன் போல் மூன் வாக் செய்யும் பறவை சிவப்புத் தொப்பி மனாகின் (Red capped manakin):

Red capped manakin
Red capped manakin

பறவைகளில் சில பழக்கவழக்கங்கள் வியப்பாக இருக்கும். குறிப்பாக சிவப்புத் தொப்பி மனாகின் பறவைகள் பெண் இனத்தைக் கவர்வதற்காக நடனம் ஆடும். இதனால் இதனை மைகேல் ஜாக்சன் பறவை என்பர். இது பெண் இனத்தைக் கவர் நடனம் ஆடும் மூன் வாக் மிகவும் வியப்புக்குரியது. இந்த வகைப் பறவைகள் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த பறவைகளின் இனப்பெருக்க காலத்தின்போது ஆண் பறவைகள் மிக அழகாக துடிப்பாக நடனம் ஆடி பெண் இனத்தைக் கவர முயற்சிக்கின்றன. இதற்காக நல்ல மேடையாக மரத்தில் தேர்ந்தெடுக்கின்றன.

பெண்ணினம் பறவைகளைக் கண்டதும் தன் அழகான இறக்கைகளை விரித்து குதிக்கும், பறந்தும் மற்றும் மூன் வாக் செய்தும் ஈர்க்கப் பார்க்கின்றன. இந்த நடனம் வெகு வேகமாக இருக்கும். நடனக் கலைஞர் மைகேல் ஜாக்சனின் மூன் வாக் அசைவு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். அதைக் குறித்துப் பலரும் அறிந்திருப்போம்‌. ஆனால், சிவப்புத் தொப்பியின் மூன் வாக் அசைவுகள் காணச் சிறப்பாக இருக்கும்‌. மற்ற பறவை இனங்கள் போன்று கூடு கட்டுதல், முட்டையை அடைகாத்தல் அல்லது குஞ்சுகளை பராமரித்தல் இந்த வேலைகளில் எந்த ஒன்றையும் இந்த மனாகின் பறவை செய்வதில்லை. இனப்பெருக்கத்திற்காக நடனம் ஆடி பெண் இனத்தை ஈர்ப்பது தான் இதன் முக்கிய வேலையாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குளிர்கால உல்லாசப் பயணம்: படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்!
பறவைகள் | 3 amazing birds

இதனால் ஆண் மனாகின் பறவைகள் தங்கள் முழு திறமையையும் உபயோகித்து நடனம் ஆடுவதில் அதிக அக்கறை காட்டும்‌. பல ஆண் பறவைகள் தங்கள் நடனத் திறமைகளை சேர்ந்து வெளிக்காட்டும் போது மிக நன்றாக கவர்ச்சியாக ஆகக்கூடிய பறவைகளையே பெண்ணினம் தேர்ந்தெடுக்கிறது.

இந்த சிவப்புத் தொப்பி மனாகினின் விஞ்ஞானப் பெயர் Cerstopipna mentalis ஆகும். இதன் நீளம் பத்து செ. மீ இருக்கும்; எடை சுமார் 16 கிராம் இருக்கும். ஆண் இனம் வெல்வெட் கருப்பு நிறத்தில் இருக்கும்.

தலையில் சிவப்பு காதோரம் படியும், நல்ல மஞ்சள் நிற கால்களும் மேலும் முகத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும்‌ பெண் பறவைகள் மேல்பக்கம் ஆலிவ் பச்சை நிறமும் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதில் கோல்டன் நிற மனாகின் பறவைகள் பெரிதாகவும், ஆரஞ்சு நிறத்தில் கால்களையும் கொண்டிருக்கும். சிவப்புத் தொப்பி மனாசகின் பழங்கள் மட்டுமே உண்ணும். கோஸ்டா ரிக்கா பகுதியில் 70 வகை மனாகின் இனம் இருப்பதாக தெரிகிறது‌.

2. பத்து மாதம் இடைவிடாமல் பறக்கும் அதிசயம் பறவை காமன் ஸ்விஃப்ட் (Common swift):

Common swift
Common swift

ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் காணப்படும் காமன் ஸ்விஃப்ட் பறவை தொடர்ந்து பத்துமாதம் இடைவிடாமல் தன் இனப்பெருக்கத்திற்காகப் பயணம் செய்வதை எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள்‌.

இந்தப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக ஆகஸ்டு மாதம் மத்திய ஆப்ரிக்க நாடுகளுக்குப் பயணம் செல்கின்றன. இவை தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பயணத்திலேயே கழித்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பறவை தெற்கு ஐரோப்பாவில் இரண்டு மாதமும், அதற்குப் பிறகு பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து ஆப்ரிக்காவில் பெரும்பாலான நாட்களைக் கழிக்கின்றன. இந்தநிலையில் பல வகைகள் உண்டு. இதில் பெரெக்ரேன் என்ற இனம் மிக வேகமாகப் பறக்கக் கூடியதாகும்.

இவை காலை நேரத்தை விட இரவில் அதிக பயணத்தை மேற்கொள்ளும். அவை 20 வருடங்கள் வாழ்வதாக அறியப்படுகிறது‌‌. தங்கள் பத்துமாதப் பயணத்தில் எங்கும் தங்காமல் தொடர்ந்து பயணிப்பது இதன் தனிச்சிறப்பு‌.

3. நேபாள் நாட்டில் மட்டுமே காணக்கூடிய பறவைதான் ஸ்பைனி பாப்லெர் (Spiny babbler):

Spiny babbler
Spiny babblerImage credit: Gemini AI

நேபாள நாட்டில் மட்டுமே காணக்கூடிய பறவைதான் ஸ்பைனி பாப்லெர் (Spiny babbler). இது மீடியம் அளவிலும் பெரிய வாலும் கொண்டவை. இப்பறவையின் மேற்புறம் ப்ரௌன் நிறத்திலும்  அம்பு போன்று காணப்படும. இவை பளபளப்பாக இருக்கும். இது மற்ற வகையிலிருந்து தனித்துக் காணப்படுவதற்கு இதன் அடிப்பாகம் வெளியிடக் காணப்படும்.

இந்த பறவையானது 1836ம் ஆண்டு ப்ரியன் ஹுக்டன் ஹாட்க்சன் (Brian Hougton Hodgson) என்பவரால் இந்த வகைப் பறவை கண்டுபிடிக்கப்பட்டது..

இது கண்டுபிடிக்கப்பட்டு, 111 ஆண்டுகள் ஆகியும் இது ரிக்கார்டிங் இல்லாமல் போனது. அதற்குப்பிறகு அதாவது 111ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ்  அதிகாரி ஒருவரின் மனைவியான டெசிரி  ப்ரௌன் என்பவரால் காட்மாண்டு பள்ளத்தாக்கில் அடையாளம் காணப்பட்டது.

இந்த வகை பறவைகள் காட்மாண்டு பள்ளத்தாக்கில் அதிகமாகக் காணப்பட்டாலும், அவற்றின் வாழ்க்கைமுறை மற்றும் குரல் பற்றிய செய்திகள் தெரியாமல் இருந்தது. இந்த ஸ்பைனி பாப்லெர்கள் அடர்ந்த முட் புதர்களில் வளர்வதால் இவற்றை முட்புதர்கள் இடையே பார்ப்பது சிரமத்தை ஏற்படுத்தியது. இப்பறவைகள் இனப்பெருக்கத்தின் போது மட்டுமே காண முடிந்தது‌. இதில் ஆண்பறவைகள் புதர்களின் மேல் ஒலியெழுப்பி பாடுவது வழக்கம்‌ இந்த வகை பறவைகள் அரிய வகைப்பறவையாகவே கருதப்பட்டது. நேபாளத்தின் மேற்கு பகுதியான சுர்சேத் மற்றும் ரெக்சா பகுதிகளில் கூட காணப்பட்டதால் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
விமானத்தையே ஓவர்டேக் செய்த குட்டிப்பறவை... எப்படி சாத்தியம்னு பாருங்க!
பறவைகள் | 3 amazing birds

இந்த அரிய வகைப் பறவைகள் குறுகலான மலைப் பகுதிகளில் 915 மீ லிருந்து 2135 மீ வரை உள்ள உயரத்தில் ஏறே அதிகமாகக் காணப்படுகிறது. 

நேபாளின் மத்திய கிழக்குப் பகுதிகளில் மட்டுமே இத்தகைய சூழல் உள்ளதால் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இந்த பறவை தேர்ந்தெடுத்து வாழ்வதால் அரிதாகவே காணப்படுகிற பறவையாகும். மேலும் நேபாளில் மட்டுமே காணக்கூடியதாகவும் உள்ளது‌. எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே சிரமமான விஷயமாக பறவை ஆர்ய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நேபாளின் அடையாளமான இப்பறவையைப் பற்றிய  விஷயங்கள் உள்நாட்டிலேயே அறியமுடியாத அளவிற்கு இருக்கிறது. இதற்குக் காரணம் பறவையின் குணமாக இருக்கலாம்.

புரியாத புதிராகவே இருக்கும் இப்பறவையின் எண்ணிக்கையை அதிகரிக்க இப்பறவைகள் குறித்து விழிப்புணரவு அதிகம் ஏற்பட வேண்டும். ஸ் பைனரி பாப்லெர் பறவைகளில் சுமார் 800 வகைகள் இருப்பதாக தெரிகிறது. இதன் வால் 26 செமீ நீளம் உள்ளது‌. இது பிறப்பிலும் மெதுவானது. இது இரையாக கம்பளிப்பூச்சிகளை உண்ணும். மேலும் வெட்டுக்கிளி, சிலந்தி பூச்சிகளையும் உண்ணும்.

logo
Kalki Online
kalkionline.com