முயல்கள் பற்றி நீங்கள் கேள்விப்படாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

Amazing facts about rabbits
Rabbits
Published on

நீண்ட காதுகளும், குட்டை வாலும், பட்டன் போன்ற கண்களும் கொண்ட அழகிய பிராணிகள் முயல்கள். மேற்கத்திய நாடுகளில் வீடுகளில் அதிகளவில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுபவை முயல்கள். முயல்களின் தனித்துவமான தன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சுறுசுறுப்பு: முயல்கள் நம்ப முடியாத அளவுக்கு சுறுசுறுப்பானவை. அவற்றின் பின்னங்கால்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரே பாய்ச்சலில் 25 அடி வரை குதித்து செல்லக்கூடிய திறன் வாய்ந்தவை. தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க அல்லது அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த பகுதியில் செல்வதற்கு வேகமாக குதித்தோடி தப்பிக்கும் இயல்புடையவை.

இதையும் படியுங்கள்:
மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்!
Amazing facts about rabbits

தூங்குவதில் விருப்பம்: முயல்களுக்கு தூங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளின் 12 மணி நேரம் வரை உறக்க நிலையிலே செலவிடுகின்றன. அவற்றின் தசைகளை தளர்த்தவும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் அவை நீண்ட நேரம் உறங்குகின்றன.

ரேடார் டிடெக்டர்கள்: முயல்களின் விஸ்கர்கள் என சொல்லப்படும் மீசை போன்ற அமைப்பு நம்ப முடியாத அளவிற்கு உணர்திறன் கொண்டவை. இருண்ட இடங்கள் வழியாக செல்லவும், வேட்டையாடுபவர்களை கண்டறியவும் மற்றும் வளை, குழி போன்ற திறப்புகளின் அகலத்தை அளவிடவும் உதவுகின்றன. அவை சிறிய உரோமம் கொண்ட ரேடார் டிடெக்டர்கள் போன்றவை.

வாசனைத் திறன்: தங்கள் ரோமங்களை சுத்தமாக வைத்திருக்க ஒரு தனித்துவமான வழியை இவை கடைப்பிடிக்கின்றன. தங்கள் உடலை நாக்கால் சுத்தப்படுத்திக் கொள்கின்றன. முயல்களின் விஸ்கர்களுக்கு அருகில் சிறப்பு வாசனை சுரப்பிகள் உள்ளன. எனவே, தனித்தன்மையான வாசனையோடு முயல்கள் விளங்கும். மேலும், மிகுந்த வாசனைத் திறனும் உண்டு. அதிக தூரத்தில் இருக்கும் உணவின் வாசனையை கூட கண்டறிந்துகொள்ளும் திறன் படைத்தவை முயல்கள்.

இதையும் படியுங்கள்:
உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் 5  நாடுகள்!
Amazing facts about rabbits

கேட்கும் திறன்: முயல்களின் கேட்கும் திறன் அபாரமானது. 20 ஹெர்ட்ஸ் முதல் 50 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் கொண்டவை. இவை மனிதனின் செவிப்புலன் வரம்பிற்கு அப்பாற்பட்டது. மனிதர்களால் கண்டறிய முடியாத அளவிற்கு மங்கலான ஒலிகளையும் சத்தங்களையும் கூட முயல்களால் கண்டறிய முடியும்.

கேரட் காதலர்கள்: முயல்களுக்கு கேரட்டின் மீது தீராத காதல் உண்டு. அதேசமயம் மொறுமொறுப்பான இனிப்பு வகைகளையும் உண்பதில் நாட்டமுண்டு. முயல்களால் சுவை மற்றும் நுட்பமான வேறுபாடுகளை கூட கண்டறிய முடியும்.

பயண விரும்பிகள்: முயல்கள் இயற்கையாகவே அமைதியற்ற உயிரினங்கள் ஆகும். இவை அதிக நேரத்தை பயணத்தில் செலவிடுகின்றன. ஒரே நாளில் 10 மைல்கள் வரை இவற்றால் கடக்க முடியும். களைப்பின்றி இவர்களால் நீண்ட தூரம் நடக்க முடியும் என்பது ஆச்சரியப்படத்தக்கது.

சமூக பட்டாம்பூச்சிகள்: முயல்கள் தன் இனத்துடன் சேர்ந்து வாழும் சமூக உயிரினங்கள். குரல்கள், உடல் மொழி மற்றும் வாசனையை குறிப்பது போன்ற சிக்கலான தகவல் தொடர்பு அமைப்பு அவற்றிடத்தில் உண்டு.

இதையும் படியுங்கள்:
கொசுக்களையும், டெங்குவையும் ஒழிக்கும் 'சூப்பர் ஹீரோ' தட்டான்பூச்சிகள்!
Amazing facts about rabbits

வளை தோண்டுவதில் வல்லுனர்கள்: முயல்கள் வளை தோண்டுவதில் வல்லுனர்களாக திகழ்கின்றன. இவை மாஸ்டர் பர்ரோ டிக்கர்கள் என அழைக்கப்படுகின்றன‌. சுரங்கங்கள் மற்றும் அறைகளின் சிக்கலான வளை அமைப்புகளை எளிதில் தோண்டி எடுக்கக் கூடியவை. பல நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் துளைகளை கூட இவற்றால் தோண்ட முடியும்.

அச்சமின்மை: பார்ப்பதற்கு மென்மையான பஞ்சுப் பொதி போல தோற்றமளித்தாலும் வியக்கத்தக்க வகையில் இவை அச்சமற்ற உயிரினங்கள் ஆகும். தங்களை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக நின்று போராடும் குணம் கொண்டவை.

கற்றல் திறன்: முயல்கள் புத்திசாலித்தனமான உயிரினங்கள். அவை விரைவாக கற்றுக் கொள்கின்றன. நன்றாக நினைவிலும் வைத்திருக்கின்றன. சில நேரங்களில் தந்திரங்களையும் சிறப்பான செயல்களையும் கற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணிகளாக முயல்கள் திகழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com