மழையை முன்கூட்டியே கணிக்கும் தவளைகளின் வியக்க வைக்கும் ரகசியம்!

விவசாயிகளின் நண்பனாக விளங்கும் தவளைகள் நமது சுற்றுச்சூழல் சமநிலையில் எத்தகைய முக்கியப் பங்கு வகிக்கின்றன தெரியுமா?
தவளைகள் | Frog
தவளைகள் | FrogImage credit: Chatgpt
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

இயற்கையின் முதல் நான்கு கால் உயிரினமான தவளைகள், வெறும் சாதாரண உயிரினம் மட்டுமல்ல; நமது சுற்றுச்சூழல் சமநிலையைக் காக்கும் அமைப்பின் மிக முக்கியக் காவலர்கள்! பருவமழையைக் முன்கூட்டியே கணிப்பது முதல் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை ஒழிப்பது வரை இவை செய்யும் உதவிகள் வியக்கத்தக்கவை. பூமியின் உன்னதமான இந்த அதிசய உயிரினங்களின் மர்மமான வாழ்வியல் ரகசியங்களையும், பரிணாம வளர்ச்சியையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

தவளைகள் மழைக்காலம் இல்லாத நேரங்களிலும் இனப்பெருக்க காலங்கள் இல்லாவிட்டாலும் ஈரப்பதமான இடங்களுக்கும், குளத்தின் சேற்றுப் பகுதிகளுக்கும் சென்று புதைந்து கொள்கின்றன.

மீனிலிருந்து தோன்றிய உயிரினம்:

ஏறத்தாழ 36 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பு உடைய மீனிலிருந்து தோன்றிய உயிரினம் தான் தவளை. பரிணாம வளர்ச்சியில் மீனுக்கும், ஊர்வனவற்றுக்கும், இடைப்பட்ட உயிரினங்கள் என்ற பெருமையை உடையவை தவளையும் தேரையும்.

நிலத்தில் முதன் முதலில் தோன்றிய உயிரினம்:

நிலத்தில் முதன் முதலில் தோன்றிய நான்கு கால்களை கொண்ட உயிரினம் தவளை தான்.

அதன் பரிணாம வளர்ச்சியே விளக்குவதைப் போல இளமைப் பருவத்தில் தவளை மீனைப் போன்று காணப்படுவதால் தலைப்பிரட்டை எனப்படுகிறது. இவை நீரில் தான் வசிக்கின்றன. நீரில் உள்ள வாசியையும் தன்னைவிட சிறிய உயிர்களையும் உண்டு வாழ்கின்றன. பின்னர் பெரிதாக வளர்ந்து உருவ மாற்றம் அடைந்த பின் தவளையாகி நிலத்துக்கு இடம்பெறுகின்றன. அதன் பின்னர் பூச்சிகளை பிடித்து தின்ன ஆரம்பிக்கின்றன.

தவளைகளால் ஏற்படும் சுற்றுசூழல் மாற்றங்கள்:

தவளைகள், தேரைகள் இல்லையென்றால் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாக பாதிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வானவில் போல மின்னும் பாம்பு... மனிதர்களை என்ன செய்யும் தெரியுமா?
தவளைகள் | Frog

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தவளை தனது உடலின் வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளும். தோல் மூலம் சுவாசிக்கும் தன்மை அமிகியாட்டிக் திசுவால் சூழப்பட்ட கருவை போன்ற பண்புகளை கொண்டு உள்ளதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்களை தாங்கிக் கொள்வது மிகவும் கடினம். அதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தீய மாற்றங்களால் இதன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

சில தவளை வகைகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவை என்று கருதப்படுகின்றன. மனிதர்களிடையே நோயைப் பரப்பும் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் தவளை, தேரைகள் முக்கிய இரை கொல்லிகளாக உள்ளன.

ஒரு தேரை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளை சாப்பிடும். பறவைகள், பாம்புகள் மேலும் சில உயிரினங்களுக்கு தவளையும் தேரையும் உணவாகின்றன.

தவளைகள், தேரைகள் இல்லை என்றால் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாக பாதிக்கப்படும். தவளைகளின் தோலில் சேமித்து வைக்கப்படும் சில வேதிப்பொருட்கள் மூலம் எய்ட்ஸைக் குணப்படுத்தும் மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தவளைகள் | Frog
தவளைகள் | Frog

இரவில் இரண்டுக்கும் பார்வைத் திறன் அதிகம்.

உலகில் 6,771 அழகான தவளை, தேரை வகைகள் உள்ளன. தவளைக்கும், தேரைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தவளையின் தோல் வழுவழுப்பாக இருக்கும்.

தேரையின் தோல் காய்ந்து சொரசொரப்பாக காணப்படும்.

தண்ணீர், சகதி, பாறைகளின் இடுக்கு, மண்ணுக்குள், புதருக்குள், பெரிய மரக்கிளைகள், கழிப்பறைகள் எனப் பல இடங்கள் தவளை, தேரைகளின் வாழ்விடம்.

இவை இரவில் சுறுசுறுப்பாக இரைதேடும். பெரிய கண்கள் இரவில் பார்க்க வசதியாக உள்ளன.

மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்கம் செய்வதற்கும் இரவில் துணையைத் தேடுவதற்கும் மழைக்காலத்தில் இவை எழுப்பும் குரல் தெளிவாக கேட்கும்.

மழை வருகையை முன்கூட்டி தெரிவிக்கும் ஆற்றல்.:

வடகிழக்கு பருவ மழை வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவதற்கு முன் அதை பாட்டுப் படி வரவேற்று மழையின் வருகையை முன்கூட்டியே அறிவிக்கும் இதன் சத்தம் காட்டிக் கொடுத்து விடும்.

இதையும் படியுங்கள்:
ட்ரோன்களுக்கு சவால் விடும் பூச்சி சிறகுகள்... தும்பிகள் பறப்பதில் உள்ள பெரிய ரகசியம்!
தவளைகள் | Frog

பெரும்பாலான உயிரினங்களை போல தவளை மனிதர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறது.

மழைக்காலங்களில் குளம், குட்டைகளில் முட்டையிடவும், உணவு தேடவும் வெளியே வரும் தவளைகள் வறட்சிக்காலங்களில் அல்லது இனப்பெருக்க காலத்திற்கு பிறகு பாதுகாப்பான ஈரமான இடங்களுக்கு செல்கின்றன.

வெயில்காலத்தில் வறட்சியின்போது நிலத்தடியில் சேற்றில் புதைந்து கொண்டு தமது உடல் இயக்கங்களை குறைத்துக் கொள்கின்றன.

இயற்கையின் எச்சரிக்கை மணியாகவும், விவசாயிகளின் உண்மையான நண்பனாகவும் விளங்கும் தவளைகளின் அறியப்படாத பரிமாணங்களை அறிந்துகொள்வதன் மூலம், நமது சுற்றுப்புறச் சூழலைப் பேணிக்காப்பதற்கான விழிப்புணர்வை முழுமையாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com