
பறவைகளில் பறக்கத்தெரியாத நெருப்புக்கோழி அதனுடைய கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.அதனுடைய ஒவ்வொரு முட்டையும் சுமார் ஆறு அங்குள்ள நீளமும் 15 முதல் 18 அங்குல சுற்றளவும் கொண்டுள்ளது.
நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.
நெருப்பு கோழியால் தொடர்ந்து 45 நிமிடங்கள்வரை வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
சிறிய உடல் அமைப்பு உள்ள மனிதர்கள் சவாரி செய்யக்கூடிய அளவுக்கு நெருப்புக் கோழிகள் பெரியவையாகும்.
வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப்பந்தங்களில் பயன்படுத்தப்பட்டன.
நெருப்பு கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது. நெருப்புக்கோழிகளின் கால்களில் இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும்.
கருப்பு கோழிகள் குளிர்பிரதேசங்களில் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தோல் பொருட்கள் தயாரிக்கவும் அலங்கார பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
நெருப்பு கோழிகள் தாவரங்கள், விலங்குகள், இலைகள், பழங்கள், வெட்டுக்கிளிகள், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றை விரும்பி உண்ணுகின்றன.
ஆண் நெருப்புக் கோழிகள் கருப்பு நிறத்திலும், பெண் கோழிகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
நெருப்புக் கோழிக்கு பற்கள் இல்லை. மேலும் இவை 40- 45 ஆண்டுகள் வரை வாழும்.
பறவை இனத்தில் நெருப்பு கோழியாக இருந்தாலும் இந்த பறவையால் பறக்க முடியாது.
ஆனால் இதனுடைய நீளமான கால்களைக் கொண்டு அதனால் வேகமாக ஓட முடியும். இதற்கு கால்கள்தான் மிகப்பெரிய ஆயுதம். ஆபத்து நேரிடும் நேரத்தில் தனது வலிமையான கால்களை கொண்டு எதிரிகளை தாக்கி காயத்தை ஏற்படுத்தி தன்னை தற்காத்துக்கொள்ளும்.
நெருப்புக்கோழிகள் தண்ணீர் குடிப்பதில்லை. அவற்றின் உணவுகள் என்னவென்றால் பழங்கள், கொட்டைகள் மற்றும் பூச்சிகள் என்று கூறப்படுகிறது.
இதன் முட்டையின் ஓடுகள் கலைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் ஓடுகளின் மேல் ஓவியம் போன்ற விஷயங்களை வரைந்து கலைப்பொருளாக விற்பனை செய்கிறார்கள்.
ஆபத்தை உணரும்போது நெருப்புக்கோழி தலையை மணலில் புதைத்துக்கொள்ளும். நெருப்புக்கோழி முட்டைகளை பகலில் பெண் கோழியும், இரவு ஆண் நெருப்புக் கோழியும் அடைகாக்கின்றன. மேலும் இந்த நெருப்புக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகள் ஆகும்.
இதன் முட்டைகள் குஞ்சு பொரிக்க 42 முதல் 46 நாட்கள் ஆகும். தீக்கோழி முட்டைகள் உலகின் மிகப்பெரிய முட்டையாகும் முட்டையின் எடை 1.4 கிலோ மற்றும் 15 சென்டிமீட்டர் ஆகும்.
நெருப்புக்கோழி மற்ற பறவைகள்போல் பறக்காது. மாறாக மிக வேகமாக ஓடக்கூடியது. சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப்பறவையால் ஓடமுடியும். இதன் கழுத்துப் பகுதி மிக நீளமாக இருக்கும்.
தலையைவிட உடல் அளவில் பெரியதாக இருப்பதால் தொலைவிலிருந்து பார்க்கும்போது தலையை மறைத்து வைப்பதாக நமக்கு தோன்றும். அதோடு அதனுடைய தலை மண்ணின் நிறத்தை கொண்டிருப்பதால் இந்த குழப்பம் ஏற்படுவதாக விலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.