

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், பூமிக்கு 20% ஆக்சிஜன் வழங்கும் உயிர் மூலமாக இருந்தாலும், மர்மங்களால் சூழப்பட்டிருக்கிறது. எரிமலை இல்லாத இடத்தில் கொதிக்கும் ஷானே டிம்பிஷ்கா நதி, விளக்கம் இல்லாத வளமான டெர்ரா பிரெட்டா கருப்பு மண், நவீன உலகைத் தவிர்த்து வாழும் 600-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் ஆகியவை விஞ்ஞானத்துக்கு புதிராக உள்ளன.
அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரியமழைக்காடாகும்.
இது பூமியின் 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது உலக அளவில்.
அடர்ந்த மரங்கள் கொடிய விலங்குகள் அறியப்படாத பழங்குடி மக்கள் என பல மர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது இந்த அமேசன் காடுகளில்.
கொதிக்கும் நதி:
பெருநாட்டின் அமேசான் பகுதிகளில் ஷானே டிம்பிஷ்கா என்ற நதி உள்ளது. இந்த நதி எப்போதும் கொதிக்கும் நீரால் நிரம்பி உள்ளது. இதன் வெப்பநிலை 50 டிகிரி சென்டிகிரேட் முதல் 100 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும் என்கிறார்கள். எரிமலைகள் இல்லாத இந்த இடத்தில் இந்த நதி எப்படி கொதிக்கிறது என்பது அறிவியல் அறிஞர்களுக்கு இன்று வரை புலப்படவில்லை. புரியாத புதிராகவே உள்ளது.
டெர்ரா பிரெட்டா:
அமேசான் காடுகளில் உள்ள மண்கள் பொதுவாக சத்துக்கள் குறைவாக காணப்படும். ஆனால் டெர்ரா பிரட்டா என்று அழைக்கப்படும் கருப்பு மண் மிகவும் வளமாக உள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு தாவரங்களுக்கு தேவையான சத்துக்களையும் வழங்குகிறது.
இந்த அடர்ந்த காட்டில் இந்த மண் எப்படி உருவானது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இன்றைய தேதி வரை அதற்கு விடை கிடைக்கவில்லை இதுவும் ஒரு புரியாத புதிர்தான்.
பழங்குடி மக்கள்:
இந்த அமேசான் காட்டில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நவீன உலகத்தோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் மொழி கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.
மனித சமூகத்தில் புதிய மக்களாக இருக்கிறார்கள். இவர்கள் அருகில் சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இவர்களிடம் மாட்டி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இந்த காடுகளில் 3000 வகை பழங்கள் கிடைக்கின்றன. இங்குள்ள ஆதிவாசிகள் இங்குள்ள பழங்களை சாப்பிட்டு வருகின்றனர்.
விலங்கு மர்மங்கள்:
விசித்திரமான உயிரினங்களின் தாயகமாக அமேசான் காடு உள்ளது. மனிதர்களை உண்ணும் பிரான்ஹா இங்கு அதிக அளவில் உள்ளது.
உண்மையில் இது இறந்த உயிரினங்களை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. இந்த காட்டின் பறந்து விரிந்த பரப்பளவு காரணமாக இதில் உள்ள ஜீவராசிகளையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.
இந்த காடுகளில் 2.1 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் பிரேசில் பொலிவியா கொலம்பியா ஈக்குவட்டார் வெனிசுலா கயானா சூரியனாம் மற்றும் பிரெஞ்சு கயணா வரை இந்த நாடுகளில் எல்லாம் அமேசான் காடுகள் பரவி உள்ளது. இந்த காடுகளில் எண்ணற்ற மர்மங்கள் நிறைந்துள்ளன.
நடக்கும் மரம்:
ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் மூலம் நடக்கும் மரங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அமேசான் காடுகளில் நிஜமாகவே பனை மரங்கள் நடந்து செல்கின்றன.
இந்த பனை மரங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அடிக்கடி நடந்து செல்வதை பார்க்கலாம். இந்த மரத்தின் வேர்கள் முன்புறமாக நீண்டு செல்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த மரங்களும் முன்புறம் உருவாகின்றன. இந்த மரங்கள் இந்த வகையில் முன்னோக்கி செல்கின்றன.
விஷ டார்ட் தவளை:
அமேசான் காடுகளில் இருக்கும் இந்த தவளைகள் மிகவும் ஆபத்தானவை. தங்க நிறத்தில் காணப்படும் இந்த தவளைகள் அதிக விஷத்தன்மை கொண்டது.
இதன் விஷம் பத்து பேரைக் கொல்லும். இது சம்பந்தமாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
போட்ரோ பறவை:
இந்தப் பறவை அமேசான் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்தப் பறவை இரவில் வந்து பகலில் ஒரு ஒரு உடைந்த மரக்கிளை போல் தோற்றமளிக்கும் இந்த உடைந்த மர கிளை போன்று நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும்.
நாம் மரக்கிளை என அதைத் தொட்டுப் பார்த்தால் தொலைந்தோம்.
புல்லட் எறும்பு:
இது சாதாரண எறும்புகள் இல்லை; இந்த எறும்புகள் ஒரு முறை கடித்தால் துப்பாக்கிக்குண்டு துளைத்தது போன்று இருக்கும். இந்த எறும்புகள் கடித்தால் ஒரு நாள் முழுவதும் வலி இருந்து கொண்டே இருக்கும்.
ராட்சத பாம்பு:
அமேசான் காடுகளில் எழுபது வகையான பாம்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அனக்கோண்டா சர்வசாதாரணமாக காணப்படும். இந்த அனக்கோண்டா 30 அடி நீளம் வரை இருக்கும். ஆனால், இங்குள்ள மக்கள் 160 அடி நீளம் உள்ள அனக்கோண்டாவை பார்த்ததாக சொல்கிறார்கள். அந்தப் பாம்பின் வாய் மட்டும் ஆறடி நீளம் இருக்குமாம்.
வேம்பயிர் மீன்:
இத்தகைய மீன்கள் ஒரு மூர்க்கமான வேட்டைக்கார மீனாகும். இந்த மீன்கள் நீரோட்டத்தில் காணப்படுகின்றன. இத்தகைய மீன்கள் மனிதர்களை துன்புறுத்துவது இல்லை. இந்த மீன்களின் உணவு பிராணி எனப்படும் மற்றொரு மீன் வகை இனமாகும்.
அச்சமூட்டும் கவலை:
அமேசான் காடுகள் அழிப்புகள் மூலமாக நாம் தினசரி ஒன்றரை ஏக்கர் காடுகளை அழித்து வருகிறோம். இதன் மூலம் 137 உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இந்த காடு அழிப்பு நிறுத்தப்படாவிட்டால் இன்னும் 40 ஆண்டுகளில் காடு முழுவதும் அழிந்து வடும். அமேசான் காடு என்று ஒன்று இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விடும்.
இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய மழைக்காட்டின் இயற்கைக்கு மாறான மர்மங்கள் மற்றும் மனித நாகரிகத்திற்கு அப்பால் உள்ள பேராபத்துகள் குறித்த முழுமையான விழிப்புணர்வைப் பெறலாம்.