
கர்ப்ப காலம் என்பது மனிதர்களுக்கு ஒன்பது அல்லது பத்து மாதம்தான். ஆனால், சில விலங்கினங்ளுக்கு கர்ப்ப காலம் அதிகமாக இருக்கும். மாதக் கணக்கில், ஒருசில உயிரினங்கள் வருடக் கணக்கில் கூட கர்ப்பத்தை சுமக்கும். அப்படிப்பட்ட சில உயிரினங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
வெல்வெட் புழு: இதன் கர்ப்ப காலம் 15 மாதங்கள் ஆகும். இதன் உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருக்கும். இது சிலந்தி இனத்தை சேர்ந்தது.
வால்ரஸ்: இந்த வகை நீர்வாழ் உயிரினங்களின் கர்ப்ப காலம் 16 மாதங்களாகும். இந்த இனம் குறைந்த அளவிலேயே குட்டிகளைப் போடும்.
ஸ்பெர்ம் திமிங்கலம்: இவை சுமார் 16 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும். பிறக்கும்போதே 13 அடி நீளமாக இருக்கும். உலகம் முழுவதும் கடல் ஆழத்தில் இவை காணப்படும்.
யானை: யானைகள் சுமார் 22 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும். இந்த அதிக காலம் உள்ளே இருக்கும் குட்டி யானையின் மூளை வளர்ச்சி முழுதான பிறகுதான் குட்டி போடும். பிறந்த பிறகு தனது தாயோடு சேர்ந்து நடக்கத் தயாராக இருக்கும்.
ஆல்பைன் சலமாண்டர்: நீரில் வாழும் இந்த உயிரினம் ஐரோப்பாவில் காணப்படும். இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் இவை கர்ப்பமாக இருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு குட்டிகளைப் போடும் இவை, வெளியை வந்ததும் தாங்களே இரை தேடிக் கொள்ளும்.
வேல் ஷார்க் (whale shark): மிகப்பெரிய அளவில் காணப்படும் இந்தத் திமிங்கலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் கர்ப்பமாக இருக்கும். பெண் திமிங்கலம் ஒரே சமயத்தில் 300 குட்டிகளை ஈன்றெடுக்கும்.
ஒட்டகம்: ‘பாலைவனக் கப்பல்’ என அழைக்கப்படும் இது, 13லிருந்து 15 மாதங்கள் வரை கர்ப்பமாக இருக்கும். அதிக கால கர்ப்பத்தினால் குட்டி நன்றாக வளர்ந்து பாலைவனச் சூழலுக்குத் தயாராக இருக்கும்.
ஒட்டகச் சிவிங்கி: மிகவும் உயரமான இது 15 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும். நீண்ட கால்களும் நீண்ட கழுத்தும் பெறவே இவ்வளவு மாதங்கள் கர்ப்பம் நீடிக்கிறது. இவை பிறந்த சில மணி நேரங்களில் ஓடக்கூடிய பண்பைப் பெற்றவை.
கருப்பு காண்டாமிருகம்: ஆபத்தான இனமாகிய இதற்கு கர்ப்ப காலமானது 16 மாதங்கள் ஆகும். காட்டிலே நன்கு வாழக்கூடிய வலிமை பெற அதிக நாட்கள் குட்டியை சுமக்கிறது. இதை வெகுவாக தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணலாம்.
ஆர்கா (killer whales): நீரில் வாழக்கூடிய இதன் கர்ப்ப காலம் சுமார் 17 மாதங்கள் என்று அறியப்படுகிறது. பிறக்கும்போதே எட்டடி நீளமும் 400 பவுண்ட் எடையுடன் இவை காணப்படும்.
மானாடீ (Manatee): மிகப்பெரிய ராட்சச அளவில் காணப்படும் நீர் வாழும் இனமாகிய இதன் கர்ப்ப காலம் 13 மாதங்கள் நீடிக்கிறது. இதன் குட்டிகள் பிறந்ததும் ஆறு அடி நீளமும் 66 பவுண்ட் எடையுடனும் இருக்கும். இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில் குட்டிகளைப் போடும் இது, தனது குட்டிகளை இரண்டு வருட காலங்கள் பாதுகாக்கும்.