அருணாச்சலப் பிரதேசத்தின் பிரம்மாண்ட நீர்மின் திட்டங்கள்! பின்னணி என்ன?

அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் நீர்மின் திட்டங்கள், சியாங் திட்டம் மற்றும் சீனாவின் மெடோக் அணைக்கு எதிரான இந்தியாவின் வியூகங்களை அறியுங்கள்.
நீர்மின் திட்டங்கள் | Powerhouse of India
நீர்மின் திட்டங்கள் | Powerhouse of IndiaImage credit: Gemini AI
கோவீ.ராஜேந்திரன்

கோவீ.ராஜேந்திரன், அடிப்படையில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர். தமிழகத்தின் முன்னணி இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், பொது அறிவு சார்ந்த 12 புத்தகங்களும் எழுதியுள்ளார். கல்கி ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி, வித்தியாசமான தகவல்களை வழங்கி வருகிறார்.

Updated on: 

இந்தியாவின் முதல் சூரிய ஒளி பாயும் அருணாச்சலப் பிரதேசம், நாட்டின் மொத்த நீர்மின் திறனில் 40%-ஐ கொண்டு ‘ஆற்றல் இல்லமாக’ ஜொலிக்கிறது. இந்நிலையில், ₹1.9 லட்சம் கோடி முதலீட்டில் வரும் பத்தாண்டுகளில் அமையும் பிரம்மாண்ட நீர்மின் திட்டங்கள் எவை? திபெத்தில் சீனா கட்டும் அணைக்கு எதிராக இந்தியா தீட்டியுள்ள மாஸ்டர் பிளான் என்ன? உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளை மீறி நடக்கும் இந்த வியூகப் போரின் முழுமையான பின்னணியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம் தான். அங்குள்ள அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதலில் சூரியன் உதயமாகிறது. இதனால் 'விடியல் ஒளி வீசும் மலைகளின் பூமி' என்று அருணாச்சல பிரதேசம் அழைக்கப்படுகிறது.

இது 83,743 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய மாநிலமாகும். புவியியல் ரீதியாக, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கில் பூட்டான், கிழக்கில் மியான்மர், வடக்கில் சீனா மற்றும் தெற்கில் அசாமின் சமவெளிகள் எல்லைகளாக அமைந்துள்ளன; இது பனி மூடிய இமயமலைத் தொடரிலிருந்து பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் சமவெளிகள் வரை பரவியுள்ளது.

இவ்மாநிலத்தில் காமேங், சுபன்சிரி, சியாங், திபாங் மற்றும் லோஹித் ஆகிய நான்கு முக்கிய நதிப் படுகைகள் உள்ளன. இந்திய அரசின் CEA/CWC-யின் விரிவான ஆய்வுகளின்படி, அருணாச்சல பிரதேசத்தின் நீர்மின் ஆற்றல் திறன் சுமார் 67,000 மெகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாடியில் உள்ள செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்? தடுப்பது எப்படி?
நீர்மின் திட்டங்கள் | Powerhouse of India

இருப்பினும், இந்த மாபெரும் ஆற்றல் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. முக்கிய நதி அமைப்புகளைத் தவிர, மாநிலத்தில் தவாங் சூ, நியாம்ஜாங்சூ, பன்யோர், சிசிரி, கம்லே, திஹிங் போன்ற ஏராளமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆறுகளும் உள்ளன. இவை நீர்மின்சக்தி மேம்பாட்டிற்கு உகந்த நீர்மட்டம், போதுமான வற்றாத நீர் வெளியேற்றம் போன்ற காரணிகளைக் கொண்டுள்ளன.

மேலும், மாநிலம் முழுவதும் வற்றாத தன்மை கொண்ட சிறிய சிற்றாறுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன. இவை குறு மற்றும் சிறிய நீர்மின்சக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு உகந்த சூழலை வழங்குகின்றன. இதனாலேயே அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ‘ஆற்றல் இல்லம்’ (Powerhouse of India) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த நீர்மின் திறனில் (Hydropower potential) சுமார் 40%க்கும் அதிகமான ஆற்றல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது.

மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட நீர்மின் திறன் 58,000 முதல் 67,000 மெகாவாட் வரை ஆகும்.

அருணாச்சலப் பிரதேசத்தின் முக்கிய ஆறுகள் பிரம்மபுத்திரா நதி அமைப்பைச் சேர்ந்தவை ஆகும். அம்மாநிலத்தின் முக்கிய இந்த ஆறு ஆறுகள் தான் அங்கே நீர் மின் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

சியாங் (Siang - பிரம்மபுத்திரா): இது அருணாச்சலப் பிரதேசத்தின் முதன்மையான ஆறு ஆகும். திபெத்தில் இருந்து வரும் இந்த ஆறு அருணாச்சலப் பிரதேசத்தில் 'சியாங்' என்றும், அசாமில் நுழைந்த பிறகு 'பிரம்மபுத்திரா' என்றும் அழைக்கப்படுகிறது.

லோஹித் (Lohit): கிழக்குத் திபெத்தின் மலைகளில் இருந்து உருவாகி, அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் மாவட்டம் வழியாகப் பாயும் முக்கிய ஆறு. மிஷ்மி பழங்குடியின மக்கள் இதனை 'டெல்லு' என்று அழைக்கின்றனர்.அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள லோஹித் ஆற்றின் படுகையில் தான் கலாய்-II நீர்மின் திட்டம் (Kalai-II HEP) 1,200 மெகாவாட் திறன் கொண்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திபாங் (Dibang): திபாங் இமயமலைப் பகுதியில் இந்த நதி பாய்ந்து வரும் போது உலகிலேயே மிக ஆழமான பள்ளத்தாக்குகளில் ஒன்றான "திகாங் பள்ளத்தாக்கை" (Dihang Gorge) உருவாக்குகிறது. கியா கணவாய் அருகில். இது சியாங் மற்றும் லோஹித் ஆறுகளுடன் இணைந்து அசாம் சமவெளியில் நுழைகிறது.திபாங் பல்நோக்கு திட்டம் (2,880 மெகாவாட்) இதில் செயல்படுகிறது.இந்தியாவின் மிக உயரமான அணைத் திட்டங்களில் ஒன்றான இது, மின் உற்பத்தியுடன் மட்டுமன்றி பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்கள்  | Powerhouse of India
நீர்மின் திட்டங்கள் | Powerhouse of IndiaImage credit: Gemini AI

சுபன்சிரி (Subansiri): பிரம்மபுத்திரா நதியின் மிக முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகும். இது மாநிலத்தின் பல்வேறு மலைப்பகுதிகள் வழியாகப் பாய்கிறது.லோயர் சுபன்சிரி நீர்மின் திட்டம் (2,000 மெகாவாட்) இதில் செயல்படுகிறது.

கமெங் (Kameng): தவாங் மாவட்டத்தின் பனிப்பாட்சி ஏரிகளில் இருந்து உருவாகி, மேற்கு கமெங் மாவட்டம் வழியாகப் பாயும் முக்கிய ஆறு. நவோ-டிஹிங் மற்றும் திராப் (Noa-Dihing & Tirap): அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளை வடிகால் செய்யும் முக்கிய ஆறுகள்.

அருணாசலப் பிரதேசம் அரசு நீர் மின் திட்டங்களை இரண்டு வகையான வேறு மாநிலங்களில் இருந்து மாறுபட்ட முறையில் கையாளுகிறது. சுதந்திர மின்சாரம் (Free Power) திட்டத்தின் படி பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் குறைந்தபட்சம் 12% மின்சாரத்தை மாநில அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி (LADF) திட்டங்களின் மூலம் உருவாக்கப்படும் சிறிய நீர் மின் திட்ட மின்சாரத்தில் 1% கூடுதல் பங்கு உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், திட்டப் பகுதிகளைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேச அரசு 2025-2035 காலகட்டத்தை ‘நீர்மின் பத்தாண்டு’ என்று அறிவித்துள்ளது. வரவிருக்கும் திட்டங்களுக்காக சுமார் ₹1.9 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.இந்த திட்டங்கள் படிதான் சீனாவிற்கு சவால் விடும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாபெரும் நீர்மின் திட்டம் மேல் சியாங் பல்நோக்கு திட்டம் (Siang Upper Multipurpose Project - SUMP) ஆகும்.

11,200 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இந்த மெகா அணைத் திட்டம், இந்தியாவின் நீர் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்று இந்திய அரசு கருதுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜிங்கோ பிலோபா: ஹிரோஷிமா குண்டுவெடிப்பிலும் தப்பிய 3000 ஆண்டுகள் வாழும் மரம்!
நீர்மின் திட்டங்கள் | Powerhouse of India

திபெத்தில் இருந்து பாய்ந்து வரும் யார்லுங் சாங்போ (இந்தியாவில் சியாங் மற்றும் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே, சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய மெடோக் (Medog) அணைத் திட்டத்திற்குப் (60,000 மெகாவாட்) பதில்டியாக இந்தியா இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சியாங் (Siang) பகுதிகளில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டங்களுக்கு (உதாரணமாக 11,200 MW சியாங் திட்டம்) உள்ளூர் பழங்குடியின மக்களிடமிருந்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் இடப்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களால் கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.