

வீட்டுத் தோட்டத்தில் ஆசையாக வளர்க்கும் செடிகளின் இலைகள் திடீரென மஞ்சள் நிறமாக மாறுவது கவலை அளிக்கிறதா? இதற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. இலைகள் மஞ்சள் ஆவதைத் தடுத்து, செடிகளின் ஆயுளை நீட்டிக்க உதவும் எளிய தெரிந்து கொள்வோம்!
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பச்சைபசேலென்ற இலைகள் மஞ்சளாவதைத் தடுக்கும் வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கால நிலைகளின் மாறுபாடு செடிகளைத் தாக்கலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பருவநிலை மாறும்போது செடிகளுக்கும் வயதாகிறது. வயதாவதால் செடியின் இலைகள் மஞ்சளாகலாம். மேலும் புதிய இலைகள் துளிர்விடுவதற்காக மஞ்சளாகி அவை கீழே விழுகின்றன.
1. தண்ணீர் சமநிலையின்மை:
ஒரு செடியின் வளர்ச்சிக்குத் தண்ணீர் மிக அவசியமாகிறது அதிகமாக தண்ணீர் விடுவது மற்றும் குறைவாக தண்ணீர் விடுவது இரண்டுமே இலைகளை மஞ்சள் நிறமாக்கும் அதிக அளவில் தண்ணீர் விடும்போது செடியால் நீரைத் தாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. தண்ணீர் குறைவாக விட்டால் அவை இலைகளுக்குச் சென்று சேராது இதனால் தொட்டியில் இருக்கும் செடிகளில் மண்ணின் மேல்பகுதி அடிப்பகுதி இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும்.
2. ஊட்டச்சத்து குறைபாடு:
நமக்கு எப்படி ஊட்டச்சத்து தேவைப்படுகிறதோ அதே போல் செடிகளின் வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து தேவையானதாக இருக்கிறது. அவற்றிற்கு மண்ணிலிருந்து சரியான ஊட்டச்சத்து கிடைக்கும் பட்சத்தில் மேலும் பி.ஹெச் அளவு சமநிலையில் இருக்கும்போது பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் முளைக்க உதவி செய்கிறது.
மேலும் இலைகளின் பச்சை நிறத்திற்கும் காரணமான க்ளோரோஃபில் குறைந்த அளவில் இருக்கும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இதற்கு மண்ணின் தன்மையை சோதிக்க வேண்டும். பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் வளர மண்ணின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
3. வேர் பாதிப்பு:
ஒரு செடியின் வேர் பகுதி என்பது தண்ணீரை உறிஞ்சுவதை விட மேலான சிலவற்றையும் செய்கின்றன. சரியான ஆக்சிஜன் மண்ணுக்குக் கிடைத்தால் மட்டுமே வேர்கள் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி கிடைக்காத பட்சத்தில் வேர் ஹைபோக்சியா என்ற நிலைமை ஏற்படும். இந்தமாதிரி நிலைமை வீட்டில் தொட்டிகளில் வைக்கப்படும் செடிகளுக்கு ஏற்படுகிறது.
சில தொட்டிகளில் ஈரம் அதிக நாட்கள் இருப்பதால் சரியான ஆக்சிஜன் வேர்ப் பகுதிகளில் சேராமல் அவை பாதிக்கும் படியான நிலைமையை ஏற்படுத்துகிறது. ஆகவே தண்ணீர் வேர் பகுதியில் நன்றாக சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
4. சூரிய வெளிச்சம்:
செடிகளின் வளர்ச்சிக்கும் ஃபோடோசின்தெசிஸ் முறைக்கும், சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள நம் வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறம் அடைகின்றன. சரியான சூரிய வெளிச்சம் இல்லாமல் க்ளோரோஃபில் தயாரிப்பு ஏற்படாது. ஆகவே வீட்டினுள் வளர்க்கும் செடிகளை சூரிய வெளிச்சத்தில் வைப்பது நல்லது. இதன்மூலம் இலைகள் பச்சை நிறம் பெறும்.
5. பூச்சி மருந்துகள்:
செடிகளில் இலைகள் பூச்சிகளால் தாக்கப்படுவதாலும் அதன் பச்சை நிறத்தை இழக்கின்றன. பூச்சிகள் இலை, வேர் கிளைகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்பைடர் பைட்ஸ் என்ற ஒருவகைப் பூச்சிகள் இலைகளின் மீது ஒருவகை திரவத்தை தூவுவதால் மஞ்சள் நிற புள்ளிகள் இலைகளில் ஏற்படும். இந்த வகை பூச்சிகள் பெரும்பாலும் இலைகளின் அடியில் இருப்பதால் அவற்றைக் கண்டுபிடித்து தவிர்க்க வேண்டும்.
6. செடி வைரஸ்:
செடிகளில் இலைகள் மஞ்சள் நிறமாவதற்கு Mungbean yellow mosaic India Virus முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தால் இலைகள் பாதுகாக்கப்படும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் வீட்டுத் தோட்ட செடிகளைத் நோய்களிலிருந்து பாதுகாத்து, எப்போதும் பசுமையாகவும் செழிப்பாகவும் வளர்க்கக்கூடிய முறைகளை அறிந்து செடிகளின் ஆயுளை நீட்டிக்கலாம்.